Wednesday 22 June 2016

kaadal rojave

24 comments:

  1. காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
    கண்ணீர் வழியுதடி கண்ணே..
    காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
    கண்ணீர் வழியுதடி கண்ணே..

    கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
    கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
    என்னானதோ ஏதானதோ சொல் சொல்

    காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
    கண்ணீர் வழியுதடி கண்ணே..

    தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
    சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்

    வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
    மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்

    வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
    நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே

    முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

    காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
    கண்ணீர் வழியுதடி கண்ணே..

    கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
    கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்

    என்னானதோ ஏதானதோ சொல் சொல்

    வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ
    பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ

    பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
    பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ

    பாவயில்லை பாவை தேவையென்ன தேவை
    ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை

    முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

    காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
    கண்ணீர் வழியுதடி கண்ணே

    கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
    கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்

    என்னானதோ ஏதானதோ சொல் சொல்

    ReplyDelete
  2. படம் : ரோஜா

    இசை : A.R.ரஹ்மான்

    பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம்

    பாடல் வரி : வைரமுத்து

    ReplyDelete
  3. ரோஜா .... மிக அருமையான படம்.

    இதன் கதைபற்றியும், அதில் வரும் ஒருசில சூழ்நிலைகள் பற்றியும், ஒருசில ஜில்ஜில் காட்சிகள் பற்றியும் நான் ஏற்கனவே விஸ்தாரமான விவரித்துச் சொல்லியுள்ளேன்.

    எங்கட ரோஜாவுக்காவது நினைவிருக்கும் என நினைக்கிறேன்.

    பகிர்வுக்கு நன்றிகள், முன்னா.

    ReplyDelete
  4. Replies
    1. சிப்பிக்குள் முத்து. 23 June 2016 at 05:11

      //வாங்க கோபூஜி....//

      வணக்கம் முன்னா. என்ன ஆச்சு? ஏன் லேட்டு?

      ஒருவேளை நீங்க புறப்பட்டு கோயம்பத்தூருக்கே போய்ட்டீங்களோன்னு நான் நினைச்சுப்புட்டேன்.

      Delete
    2. என்ன கோபூஜி... கோயம்பத்தூர்ல போயி என்ன பண்ண.??????)))))..

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 23 June 2016 at 21:18

      //என்ன கோபூஜி... கோயம்பத்தூர்ல போயி என்ன பண்ண.??????)))))..//

      என்ன பண்ண .... ஏது பண்ண .... என எல்லாவற்றையுமே என்னிடமே கேட்டால் எப்படி?

      நான்தான் மேலும் மேலும் எதுவும் கேட்பது இல்லை என மிகவும் பிரஸவ வைராக்யமாக இருந்து வருகிறேனே. :)

      எனினும் என் நல்வாழ்த்துகள். வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும் ...... அதாவது ’முன்னா மெஹர் மாமி’யைச் சேரும் ...... :)

      Delete
    4. முன்னா கோவைல யாரு இருக்காங்க.. ஓ..... கோபால்ஜி கிட்ட மட்டும்தான் சொல்லுவே அப்படித்தானே.....

      Delete
    5. ப்ராப்தம் 23 June 2016 at 22:19

      //முன்னா கோவைல யாரு இருக்காங்க.. ஓ..... கோபால்ஜி கிட்ட மட்டும்தான் சொல்லுவே அப்படித்தானே.....//

      என்னிடமும் வரவர இவள் எதுவுமே விரிவாகச் சொல்லுவது இல்லை. நானும் கேட்பது இல்லை.

      நடுநிலையில் இருந்து, ஒரு ஜட்ஜ் போல, அனைத்தையும் ஆராய்ந்து நல்லது கெட்டது பற்றியும், கேஸ் எப்படிப் போய் கடைசியில் எப்படி முடியும் என ஓரளவு நான் யூகித்துச் சொன்னால், சிலருக்கு அவை பிடிக்காமலும் இருக்கலாம்.

      எல்லாம் பருவ வயதுக் கோளாறினால் அப்படித்தான் இருக்க முடியும் என்பது எனக்கும் மிக நன்றாகவே தெரியும். இதையெல்லாம் தாண்டி வந்துள்ளவன் தானே ... நானும்கூட.

      அவள் விருப்பப்படியே எல்லாம் நல்லபடியாக முடியணும், மனம்போல் மாங்கல்யம் அமையணும் என்ற பிரார்த்தனை மட்டுமே என்னால் செய்ய முடிகிறது. நானும் வேறு என்ன செய்ய? ஈஸ்வரோ ரக்ஷது.

      அந்த ஆண்டவன் க்ருபை மட்டும் இருந்தால் எதுவும் ஆச்சர்யமான முறையில் நடந்தே தீரும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் உள்ளது. பார்ப்போம். அதற்கு எங்கடச் சாரூவே நல்ல உதாரணமாகும் அல்லவா!

      நாம் எப்போதும் நல்லதே நினைப்போம் ..... நல்லதே நடக்கட்டும்.

      Delete
    6. //நாம் எப்போதும் நல்லதே நினைப்போம் ..... நல்லதே நடக்கட்டும்.//

      அதேதான்.. வேர என்னதான் சொல்ல...

      Delete
    7. சிப்பிக்குள் முத்து. 25 June 2016 at 02:28

      **நாம் எப்போதும் நல்லதே நினைப்போம் ..... நல்லதே நடக்கட்டும்.**

      //அதேதான்.. வேற என்னதான் சொல்ல...//

      நம்பிக்கையுடன் இருங்கோ. எதிலும் இப்போது அவசரமோ, பதட்டமோ வேண்டாம். பொறுமையைக் கடைபிடிக்கவும்.

      காலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் எல்லாம் தீரும்.

      ருசிமிக்க தேன் வேண்டுமானால், தேனடையிலிருந்து சிந்தாமல், சிதறாமல், தேனிக்கள் நம்மை கொட்டி விடாமல், மிகுந்த கவனமாகத்தான் நாம் தேன் எடுக்க வேண்டும்.

      நடந்துள்ள எதுவும் ஓர் முடிவு அல்ல. முடிவும் நம் கையில் ஏதும் இல்லை. எது நல்லதோ அது நமக்கு நிச்சயமாக ஒருநாள் நடக்கும். கவலை வேண்டாம்.

      இப்போது சற்றே அமைதி .. அமைதி .. அமைதி.

      Delete
  5. அக்காவ பொண்ணு பாக்க வந்து தங்கையதான் பிடிச்சிருக்குனு சொல்வானே அதுதானே... நல்லா.நினைவிருக்கு

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 23 June 2016 at 05:30

      //அக்காவ பொண்ணு பாக்க வந்து தங்கையதான் பிடிச்சிருக்குனு சொல்வானே அதுதானே... நல்லா நினைவிருக்கு//

      யெஸ்..... யெஸ்..... யூ ஆர் 100% கரெக்டூஊஊஊஊ. எங்கட ஆளு மிகவும் சமத்தோ சமத்தூஊஊஊ. :)

      அதுகிடக்கட்டும்..... அக்கா தங்கை வனிதா + அனிதாவை மீட் பண்ணினேளா? அறிய ஆவலுடன் .....

      Delete
  6. //அதுகிடக்கட்டும்..... அக்கா தங்கை வனிதா + அனிதாவை மீட் பண்ணினேளா? அறிய ஆவலுடன் .....//

    உங்க பெயரை முதல்ல மாத்தணும்... கோபியர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது....இந்த அனிதா வனிதா ஆரூஊஊஊஊ

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 23 June 2016 at 21:35

      **அதுகிடக்கட்டும்..... அக்கா தங்கை வனிதா + அனிதாவை மீட் பண்ணினேளா? அறிய ஆவலுடன் .....**

      //உங்க பெயரை முதல்ல மாத்தணும்... கோபியர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது....//

      ஓஹோ .... என் பெயரை நீங்க பார்த்து எப்படி வேண்டுமானாலும் மாத்திக்கோங்கோ. அது என் அம்மா + அப்பா எனக்கு வைத்த பெயராக்கும்.

      அதற்கான பெயர் காரணம் இதோ இந்த என் பதிவினில் மிகவும் நகைச்சுவையாக உள்ளதாக்கும். http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

      //இந்த அனிதா வனிதா ஆரூஊஊஊஊ//

      மெயில் இன்-பாக்ஸ் பார்க்கவே மாட்டேளா ? :(((((

      Delete
    2. பாத்துட்டேனே... பாத்துட்டேனே..))))))

      Delete
    3. பூந்தளிர் 24 June 2016 at 23:55

      //பாத்துட்டேனே... பாத்துட்டேனே..))))))//

      இதை நான் நம்ப மாட்டேன்.

      ஒருவேளை பார்த்திருந்தால் அவர்கள் (அதாவது அனிதா + வனிதா) பற்றி ஓர் மிகச்சிறிய விமர்சனமாவது எனக்கு எழுதி அனுப்பி இருந்திருப்பீர்கள்.

      அதனால் நான் இதனை நம்பத் தயாராக இல்லை.

      Delete
    4. இன்னமுமாஆஆஆஆ நம்பல்.........

      Delete
    5. பூந்தளிர் 25 June 2016 at 21:24

      //இன்னமுமாஆஆஆஆ நம்பல.........//

      ஏதோ கொஞ்சம் நம்பறேன். நான் எதிர்பார்த்த அளவுக்கு விலாவரியா ரஸித்து விமர்சனம் வரவில்லையாக்கும். :)

      Delete
  7. முன்னா மெஹர் மாமி யா....இன்னா சொல்லிகினிக குருஜி....

    ReplyDelete
    Replies
    1. mru 23 June 2016 at 21:54

      //முன்னா மெஹர் மாமி யா....இன்னா சொல்லிகினிக குருஜி....//

      அதெல்லாம் உனக்கு ஒன்றும் புரியாதுடா .... முருகு. நம் முன்னாக்குட்டி என் போன்ற ஐயர்களிடமும், அவங்க பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஓர் ஐயர் மாமியுடனும் பழகிப் பழகி ‘முன்னா-மெஹர் மாமி’யாக மாறி வருகிறாளாக்கும்.

      Delete
  8. நா எத கேட்டுகிட்டாலும் உனக்கு ஒன்னுமே வெளங்காதுன்னு சொல்லிகினிக.. வெளங்கும்படி ஒங்களுக்கு சொல்லிகின ஏலலே.......

    ReplyDelete
    Replies
    1. mru 25 June 2016 at 20:55

      //நா எத கேட்டுகிட்டாலும் உனக்கு ஒன்னுமே வெளங்காதுன்னு சொல்லிகினிக.. வெளங்கும்படி ஒங்களுக்கு சொல்லிகின ஏலலே.......//

      ஆமாம். இனி என்னால் உனக்கு ஏதும் விளக்கிட ஏலாது.

      உனக்கு எல்லாவற்றையும் விலாவரியாக (உன் விலா எலும்புகள் நோக) விளக்கிட வருகிறார்: திருவாளர் ஆஷி அவர்கள்.

      இன்னும் ஒரு வாரமே உள்ளது. பொறுத்துக்கோடா என் செல்லமே. :)))))

      Delete
    2. திருவாளர் ஆஷி அவர்கள் = திருவாளர் ஆஷிக் அவர்கள்.

      Delete