Friday 16 September 2016

செந்தமிழ் தேன் மொழியாள்


25 comments:

  1. சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
    நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
    நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
    நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
    மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..

    செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

    செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்

    காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
    கற்பனை வடித்தவளோ

    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
    செவ்வந்திப் பூச்சரமோ

    அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

    அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்

    கண்களில் நீலம் விளைத்தவளோ
    அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ

    பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ…

    அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

    அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்

    ReplyDelete
    Replies
    1. இந்த இனிய பாடலின் தொடர்ச்சி ......

      மொகத்தைக் கூந்தலில் முடித்தவளோ..
      வின் மீன்களை மலராய் அமைத்தவளோ

      மொகத்திலே இந்த உலகங்கள் யாவும்
      மூழ்கிட செய்யும் மொகினியோ..

      செந்தமிழ் தேன் மொழியாள்
      நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
      நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்

      பைங்கனி இதழின் பழ ரசம் தருவாள்
      பருகிட தலை குனிவாள்.

      :)))))

      Delete
    2. கோபு பெரிப்பாவின் பாடல் வரிகளை படித்துக்கொண்டே பாடலை கேக்க ரொம்ப நல்லா இருக்கு..

      Delete
    3. happy 17 September 2016 at 05:05

      //கோபு பெரிப்பாவின் பாடல் வரிகளை படித்துக்கொண்டே பாடலை கேக்க ரொம்ப நல்லா இருக்கு..//

      இந்தப்பாடல் வரிகளும், அதற்கான இசை அமைப்பும், பாடும் குரல் அழகும், அர்த்தமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

      பைங்கிளி ’யாரோ’ ஒருத்தி, தன் பைங்கனி இதழில் பழரசம் தந்து, அதை நான் பருகியதுபோன்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் பாடல் இது. :) ஸ்வீட்டெஸ்ட் ஸாங் !!

      Delete
  2. படம்: மாலை இட்ட மங்கை

    இசை: விஸ்வநாதன் + இராமமூர்த்தி

    பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்

    ReplyDelete
  3. மிகவும் அழகான இனிமையான பாடல் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  4. ’மீனா’ என்று என்னால் அன்புடன் அழைக்கப்படும்
    ’முன்னா மெஹர் மாமியின் மும்பைப் பயண அனுபவம்’
    பகுதி-7

    பகுதி-1 க்கான இணைப்பு:
    http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_91.html

    பகுதி-2 க்கான இணைப்பு:
    http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_15.html

    பகுதி-3 க்கான இணைப்பு:
    http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_78.html

    பகுதி-4 க்கான இணைப்பு:
    http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_22.html

    பகுதி-5 க்கான இணைப்பு:
    https://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_49.html

    பகுதி-6 க்கான இணைப்பு:
    http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/dil-dadap.html

    >>>>>

    ReplyDelete
  5. (31)

    அனைவரும் சாப்பிட்ட பின், பாத்திரங்களையாவது நாம் தேய்த்துக்கொடுப்போம் என நினைத்து, முன்னாவின் அக்கா போய் இருக்கிறாள்.

    “இரு.... இரு, அவற்றையெல்லாம் நீ தேய்க்காதே. அதற்கென்றே ஒரு தனி மெஷின் உள்ளது" என்று சொல்லிய சாரூஜி, டிஷ் வாஷர் என்ற மெஷினில் எல்லாப்பாத்திரங்களையும் இவர்கள் எதிரிலேயே போட்டு, லிக்விட் ஸோப் வாட்டர் வரும் குழாயைத் திறந்து விட்டு, மெஷினின் ஸ்விட்சை ஆன் செய்து காட்டியிருக்கிறாள்.

    அடுத்த பத்தாவது நிமிஷத்திற்குள் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ போல அனைத்துப் பாத்திரங்களையும் தேய்த்து, கழுவி, காயவைத்துக் கொடுத்து விட்டதாம் அந்த மிஷின்.

    பளபளக்கும் அந்த அனைத்துப் பாத்திரங்களையும் அதற்கான அலமாரியில் அடுக்குவது மட்டுமே இவர்களின் வேலையாக இருந்துள்ளது. திறந்த வாயை மூடக்கூட முடியாமல் மிகவும் ஆச்சர்யப்பட்டுள்ளனர் முன்னா கோஷ்டியினர்.

    >>>>>

    ReplyDelete
  6. (32)

    ”சாரூஜி இன்றைய தேதியில் ஓரளவுக்கு நல்ல வசதியானவங்கன்னு கோபூஜி சொல்லி, எனக்கும் ஓரளவுக்குத் தெரியும். இருப்பினும் இவ்வளவு மிகப்பெரிய வசதியானவங்க என்பதை என்னால் யூகிக்கவே முடியவில்லை. சூப்பரான சுகமான ராயல் லைஃப் தான், பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருந்தது” என முன்னா தன் மெயிலில் என்னிடம் சொல்லிச் சொல்லிப் பூரித்துப்போனாள்.

    ஆண்டவள் அருளுடன் கூடிய அதிர்ஷ்டக்காற்று மட்டும் நம் மீது அடித்தால் போதும். தெருவோரம் மிகச்சாதாரணமாகக் கிடக்கும் ஓர் தூசியும், மிகப்பெரியதோர் கோபுரத்தின் உச்சியை மிக எளிதாக அடைந்துவிட முடியும்.

    வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை மட்டுமே இதுவரை சந்தித்து வந்தும்கூட, மிகவும் நேர்மையுடனும், அடக்கத்துடனும், துணிச்சலுடனும் எதிர் நீச்சல் போட்டு, தடைக்கற்களை வெற்றியின் படிக்கற்களாக மாற்றி, வாழ்ந்து வந்துள்ள எங்கட அன்புக்கும், பாசத்திற்கு உரிய சாரூ, இவ்வாறு இன்று அனைத்து வசதி வாய்ப்புக்களுடன் சந்தோஷமாக இருக்கிறாள் என்பதை முன்பே ’யாரோ’ மூலமும், இப்போது இந்த ’முன்னா’ மூலமும் அறிந்ததில் எனக்கும் என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

    இன்றுபோல் என்றும் அதிர்ஷ்டமாக அவள் இருக்கட்டும் என நாமும் நம் மனதார அவளை வாழ்த்துவோம்.

    >>>>>

    ReplyDelete
  7. (33)

    மத்தியான பகல் சாப்பாட்டுக்குபின் அனைவரும் சற்று நேரம் காலை நீட்டிப் படுத்து விட்டார்கள். முன்னாவும் சாரூஜியும் மட்டும் ஒரே பெட் ரூமில் தனியே பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

    அவர்களுக்குள் தனிமையில் என்னென்ன பேசிக்கொண்டார்களோ! கற்பனையில் அவற்றை நினைத்துப்பார்க்கவே எனக்குக் கொஞ்சம் இன்பமாகவும் சற்றே கொஞ்சம் விஜாரமாகவும் உள்ளது.

    என்னைப்பற்றி சாரூஜி மிகவும் புகழ்ந்து, மிக உயர்வாக, முன்னாவிடம் ஏதேதோ பலகதைகள் சொல்லியிருக்கிறாள், என என் கவனத்திற்கு வந்துள்ளது.

    சாரூஜி சொல்லியுள்ள அந்த என்னைப்பற்றிய சுயபுராணங்களை நானே இங்கு சொல்ல, எனக்கு மிகவும் கூச்சமாக இருப்பதால் அவற்றையெல்லாம் நான் இங்கு சொல்லாமல் தவிர்த்து விட்டேன்.

    என் மீது இவ்வளவு பாசம் வைத்துள்ள எங்கட சாரூஜிக்கு என் இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
  8. (34)

    சற்று நேர உறக்கத்திற்குப்பின் சாரூஜி அனைவருக்கும் டீ போட எழுந்து போயிருக்கிறாள்.

    முன்னாவின் அம்மாவும் அக்காவும் சாரூஜியைத் தடுத்து, அவளை ஒரு பக்கமாக உட்காரச் சொல்லிவிட்டு, தாங்களே எல்லோருக்கும் டீ போட்டுக் கொடுத்துள்ளனர்.

    அந்த டீ யைக் குடிப்பதற்கு முன்னால், அனைவருக்கும் திரட்டுப்பால் + ரிப்பன் பக்கோடா அளிக்கப்பட்டுள்ளன.

    >>>>>

    ReplyDelete
  9. (35)

    தற்சமயம் பிள்ளைத்தாச்சிப் பெண்ணாக இருக்கும் சாரூஜிக்கு, மஸக்கையாக இருக்கும் என்பதை எப்படியோ யூகித்து, தன் பக்கத்து வீட்டு ஐயர் மாமியை விட்டு, தித்திப்பான திரட்டுப்பாலும், ரிப்பன் பக்கோடாவும் செய்யச் சொல்லி வாங்கிக்கொண்டு, அந்த ஐயர் மாமி வீட்டில் ஏற்கனவே போடப்பட்டு ரெடியாகவே ஸ்டாக்கில் இருந்த ஊறிய வடு மாங்காய் ஊறுகாயையும் ஒரு பாட்டிலில், அந்த ருசியான காரசார மாங்காய் ஜலத்துடன் கேட்டு வாங்கிப்போயிருக்கும் .... அதிபுத்திசாலியான முன்னாவை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். :)

    அத்துடன் ஒரு கட்டு அரிசி அப்பளமும் கடையில் வாங்கிச் சென்றுள்ளதாக, யாரோ ஒரு அரிசி அப்பளக் கடைக்கார ஐயர் சொன்னதால் நாமும் இன்று அறிகிறோம்.

    முன்னாவுக்குத்தான் என்னே ஒரு அன்பு + அறிவு ! வியக்கிறோம் !!

    >>>>>

    ReplyDelete
  10. (36)

    பிள்ளைத்தாச்சிப் பெண்ணுக்கு, இதுபோல வாய்க்கு ருசியானவற்றையெல்லாம் செய்து கொடுத்து உதவியதுடன், ஒரு டஜன் கலர் கலர் கண்ணாடி வளையல்களையும் கொடுத்தனுப்பி, மிகவும் கைராசியான, அபார சம்சாரியான முன்னாவின் அம்மாவை விட்டு, சாரூஜிக்கு இரு கைகளிலும் அடுக்கிவிடச் சொல்லியுள்ள அந்த பக்கத்தாத்து ஐயர் மாமியின் திருக்கரங்களை வாங்கி என் கண்களில் ஒத்துக்கொள்ளணும் போலத் தோன்றுகிறது. :)

    அந்த ஐயர் மாமியின் ஆசீர்வாதங்கள் + அருளாலும், பகவானின் திருவருளாலும், நம் அனைவரின் அன்புப் பிரார்த்தனைகளாலும், நம் சாரூஜிக்கு சுகப்பிரஸவம் நிகழ்ந்து தாயும், சேய்களும் நலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது.

    ஏற்கனவே பேரன்பும், கைராசியும், முகராசியும், ஆசையும், பழுத்த அனுபவமும் உள்ள ஒருவரால் 11.05.2016 அன்று ஹாரத்தி சுற்றி, பாலும் பழமும் கொடுத்து, பூஜையறையில் விளக்கேற்றி நமஸ்கரிக்கச் சொல்லி, படுக்கை அறையில் பூ மஞ்ச ஏற்பாடுகள் அனைத்தும் செய்துகொடுத்து, எப்படி எப்படி முதலிரவில் சமத்தாக நடந்துகொள்ளணும் என விசேஷ பாடங்கள் நடத்திக்கொடுத்துவிட்டு வந்துள்ள ‘யாரோ’ ஒருரின் பேரன்பினால் மட்டுமே, இன்று சாரூ பூத்துக்குலுங்குவதாகக் கேள்விப்படுகிறோம். அவர்களுக்கு என் முதற்கண் நன்றிகளை இங்கு நானும் பதிவு செய்துகொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கண்களில் ஒத்துக்கொள்ளணும் போலத் தோன்றுகிறது. :)

      =

      கண்களில் ஒத்திக்கொள்ளணும் போலத் தோன்றுகிறது. :)

      Delete
  11. ‘யாரோ’ ஒருரின் = ‘யாரோ’ ஒருவரின்

    ReplyDelete
  12. (37)

    இவ்வாறு திரட்டுப்பால், ரிப்பன் பக்கோடா, டீ சாப்பிட்டுக்கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டே இருந்தவர்கள், மாலை ஐந்தரை மணி சுமாருக்கு வெளியே கொஞ்சம் வாக்கிங் கிளம்பியுள்ளனர். லேடீஸ் எல்லோரும் சாரூஜி + பியூஷ் உள்பட அவர்களின் வீட்டின் அருகே உள்ள கமலா நேரு பார்க்குக்குப் போய் இருக்கிறார்கள். [முன்னாவின் அப்பாவும், பட்டாஜியும் மட்டும் எங்கோ காரில் புறப்பட்டுச் சென்றார்களாம்.] அந்த பார்க் இன்றும் பச்சை பசேல்ன்னு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறதாம். ஏதோ ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருப்பதுபோல எங்க்கும் பசுமையோ பசுமையாக உள்ளதாம்.

    >>>>>

    ReplyDelete
  13. (38)

    அங்கு ஆண்கள் காலில் போடும் பூட்(ஸ்) போல ஒரு ஒத்தை பூட்(ஸ்) வடிவில், ஓர் மிகப்பெரிய உயரமான சிலை உள்ளதாம். அதில் படிக்கட்டுகள் இருக்குமாம். அதில் ஏறி மேலே நாம் உயரமாகச் செல்லலாமாம். அதன் அருகே ஓர் சறுக்குப்பாறையும் உண்டாம். அதில் பியூஷ் ஆசையுடன் ஏறி சறுக்கி விளையாட மிகவும் விரும்புவானாம்.

    மிகவும் முதிர்ச்சியடைந்த நம் முன்னாவும், ஓர் குழந்தையாகவே மாறி, ப்யூஷுடன் சறுக்கு விளையாட்டு விளையாடி மகிழ்ந்தாளாம்.

    முதிர்ச்சியடையந்த பருவ வயது பெண்குட்டி ஒருத்தி இவ்வாறு, சிறு குழந்தைபோல மாறி, சறுக்குப்பாறையில் ஏறி சறுக்கி விளையாடிய இந்த விஷயம், அன்றைய பிரபல மும்பை தினசரிகளில், படங்களுடன் முக்கியச் செய்தியாக இடம் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அன்றைய பிரபல மும்பை தினசரிகளில், படங்களுடன் முக்கியச் செய்தியாக இடம் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். :)

      =

      அன்றைய பிரபல மும்பை தினசரிகளில், படங்களுடன் முக்கியச் செய்தியாக இடம் பெ-ற்-றி-ரு-ந்-த-து என்பது குறிப்பிடத்தக்கதாகும். :)

      Delete
  14. (39)

    குழந்தை ப்யூஷுக்கு ’முன்னா’ என்று சொல்ல வராததால் ‘மூனா’ என்று சொல்லி அவளைக் கூப்பிட்டு வந்தானாம்.

    முன்னா, மூனா, மீனா, மெஹர், மெஹருன்னிஸா என எத்தனை எத்தனை பெயர்கள் !!!!!.

    ’சிப்பிக்குள் முத்து’ பதிவர், இவ்வாறு மிகவும் பெயர் போனவராக மாறி வருகிறார் என்பது இதன்மூலம் நமக்கும் தெரிய வருவதில் சந்தோஷமே.

    >>>>>

    ReplyDelete
  15. (40)

    இதற்கிடையில் சாரூஜியுடன் ஆபீஸில் ஒன்றாக சேர்ந்து வேலை பார்த்துள்ள, நான்கு பெண்களும் அந்தப் பார்க்குக்கு அப்போது வந்துவிடவே இன்னும் இவர்களுக்குள் கலகலப்பும் சலசலப்பும் அதிகமாகிவிட்டதாம். மெத்தென்ற புல் தரையில் ரெளண்டாக அமர்ந்து அரட்டை அடித்தார்களாம்.

    மொழிப்பிரச்சனையால் அனைத்து மொழிகளும் அறிந்த எங்கட சாரூஜி ஒவ்வொருவரையும் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாளாம்.

    அவசியமாக அனுப்பப்பட வேண்டிய போட்டோக்கள் எனக்கு ஏதும் அனுப்பப்படாவிட்டாலும் கூட, அந்த நான்கு தோழிகளின் போட்டோக்களும், ஏனோ எனக்கும் அனாவஸ்யமாக அனுப்பப்பட்டிருந்தன.

    அதில் முதலில் இருப்பவள் நம் முன்னா, அடுத்து இருப்பவள் முன்னாவின் அக்கா, அதற்கடுத்து இருப்பவர் முன்னாவின் அம்மா, கடைசியில் நிற்பது நம் சாரூஜி என உத்தேசமாக, எனக்குள் நானே ஒரு கற்பனை செய்துகொண்டு மகிழ்ந்து கொண்டேன்.

    நான் வேறு என்னதான் செய்ய முடியும் ????



    >>>>> மீதி விஷயங்கள் நாளையும் தொடருமாக்கும் ! ஜாக்கிரதை !! >>>>>

    ReplyDelete
    Replies
    1. பெரிப்பா இந்த பயண கட்டுரை முதல் பகுதிலேந்து படிச்சுட்டு வரிசையா எல்லாத்துக்கும் கமெண்ட் போடுறேன்..

      Delete
    2. happy 17 September 2016 at 05:07

      //பெரிப்பா .. இந்த பயண கட்டுரை முதல் பகுதிலேந்து படிச்சுட்டு வரிசையா எல்லாத்துக்கும் கமெண்ட் போடுறேன்..//

      நிஜம்மாவா? வெரி குட்-றா ... தங்கம். நீ அதுபோல செஞ்சாலும் செய்வாய். எனக்கு நம்பிக்கையுள்ளது. :)

      இந்தப் பதிவர் காட்டில் நல்ல (பின்னூட்ட) மழை பெய்ய உள்ளது. கொடுத்து வைத்தவள் .... அந்த மீனா.

      Delete
  16. இந்த பாட்டு கேக்கவே நல்லா இருக்கு.. டான்ஸ் பாத்தா சிரிப்பாணி பொத்துக்குது..

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 17 September 2016 at 05:19

      //இந்த பாட்டு கேக்கவே நல்லா இருக்கு..//

      உண்மையிலேயே மிகவும் நல்ல பிரபலமான அந்தக்காலப் பாடல் .... டி.ஆர். மஹாலிங்கத்தின் கணீர் குரலில்.

      //டான்ஸ் பாத்தா சிரிப்பாணி பொத்துக்குது..//

      டான்ஸ் ஆடும் குட்டிகள் அனைவருமே நம் ஹாப்பி போல அழகா பாவாடை, சட்டை, தாவணி போட்டுக்கிட்டு, தலை நிறைய பூ வெச்சுக்கிட்டு, பின்னால் மிக நீண்ட சடையை ஒற்றைப்பின்னலாகப் பின்னிக்கொண்டு, அதன் கீழே குஞ்சலம் வைத்துக்கொண்டு ஆடும் போதும், அந்த குஞ்சலங்கள் எங்கெங்கோ சுழன்று மாற்றி மாற்றி டமாரம் :) அடிக்கும்போதும், அவற்றைப் பார்க்கும் நமக்கு சிரிப்பாணி பொத்துக்கொண்டு ஹாப்பியோ ஹாப்பியாகத்தான் இருக்கும்.

      Delete
  17. எங்கேந்து தேடிபிடிச்சு இவ்வளவு பழய பாட்டு போடுறே.. கிருஷ்... முன்னா...மும்பை பயணம் இவ்வளவு பதிவு போட்டுட்டிங்களா.. முதல்லேந்து வறேன்

    ReplyDelete