Sunday 18 September 2016

என்னை தெரியுமா


5 comments:

  1. என்னை தெரியுமா என்னை தெரியுமா -
    நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
    என்னை தெரியுமா ஆஆஆ ........

    உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
    கவிஞன் என்னை தெரியுமா ஆஆ...
    என்னை தெரியுமா -

    நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
    என்னை தெரியுமா

    உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
    கவிஞன் என்னை தெரியுமா

    ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
    நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
    உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்

    நான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன்
    நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்

    ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம்
    வாழ்வை சோலை ஆக்கலாம்

    இந்த காலம் உதவி செய்ய -
    இங்கு யாரும் உறவு கொள்ள

    அந்த உறவு கொண்டு மனித இனத்தை அளந்து பார்க்கலாம்
    இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்
    இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்

    என்னை தெரியுமா -

    நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
    என்னை தெரியுமா

    உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன்
    என்னை தெரியுமா

    ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
    நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
    உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்

    ஒரு சிலையை கண்டேனே அது சிரிக்க கண்டேனே
    இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே

    வானிலே ஒரு நிலா நேரிலே இரு நிலா
    காதல் அமுதை பொழியலாம்

    அவள் அருகில் வந்து பழக -
    நான் மெழுகு போல உருக

    இதழ் பிழிய பிழிய தேனை எடுத்து எனக்கு தந்தாளே
    கொடுத்ததை நினைக்கலாம் கொடுத்தவள் மறக்கலாம்
    கொடுத்ததை நினைக்கலாம் கொடுத்தவள் மறக்கலாம்

    என்னை தெரியுமா -
    நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
    என்னை தெரியுமா

    உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன்
    என்னை தெரியுமா

    ReplyDelete
  2. படம்: குடியிருந்த கோயில்

    பாடலாசிரியர்: வாலி

    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

    பாடியவர்: டி.எம். செளந்தரராஜன்

    ஜோடிகள்: எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த படம்.

    அழகான அற்புதமான வரிகள் கொண்ட இனிமையான எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    “அவள் அருகில் வந்து பழக -
    நான் மெழுகு போல உருக

    இதழ் பிழிய பிழிய தேனை எடுத்து எனக்கு தந்தாளே
    கொடுத்ததை நினைக்கலாம் கொடுத்தவள் மறக்கலாம்
    கொடுத்ததை நினைக்கலாம் கொடுத்தவள் மறக்கலாம்”

    சூப்பர் ! :)

    பகிர்வுக்கு நன்றிகள், மீனா.

    ReplyDelete
  4. கோபு பெரிப்பா பாடல் வரிகளை போட்டபிறகுதான் வரணும்னு நினைச்சேன் வந்துட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. happy 23 September 2016 at 21:33

      //கோபு பெரிப்பா பாடல் வரிகளை போட்டபிறகுதான் வரணும்னு நினைச்சேன் வந்துட்டேன்..//

      வெரி வெரி ஹாப்பி-டா தங்கம்.

      Delete