Friday 16 September 2016

மாமா மாமா மாமா


9 comments:

  1. மாமா மாமா மாமா மாமா மாமா மாமா
    ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா

    சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
    கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா?

    சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
    கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா?

    தாலி கட்டுமுன்னே கை மேலே படலாமா?

    மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

    வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
    எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா? ம்ம்

    வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
    எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா? கையைத்
    தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா?

    ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா

    ஊரறிய நாடறிய பந்தலிலே நமக்கு
    உத்தவங்க மத்தவங்க மத்தியிலே

    ஊரறிய நாடறிய பந்தலிலே நமக்கு
    உத்தவங்க மத்தவங்க மத்தியிலே
    ஒண்ணாகி ஆஹா

    ஒண்ணாகி உறவு முறை கொண்டாடும் முன்னாலே
    ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா? இதை
    உணராமல் ஆம்பளைங்க துடிக்கலாமா

    மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

    நாடறிய ஒண்ணாகும் முன்னாலே தூண்டி
    போடுகின்ற உங்களது கண்ணாலே

    நாடறிய ஒண்ணாகும் முன்னாலே தூண்டி
    போடுகின்ற உங்களது கண்ணாலே

    ஜாடை காட்டி ஓஹோ ஆசை மூட்டி ஓஹோ
    ஜாடை காட்டி ஆசை மூட்டி சல்லாபப் பாட்டுப் பாடி

    நீங்க மட்டும் எங்களைத் தாக்கலாமா? உள்ள
    நிலையறிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா?

    ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா

    கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு அவளைக்
    கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு

    கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு அவளைக்
    கைவிட்டு ஒம்பது மமேல் ஆசை வச்சு வண்டாக ஆஹா

    வண்டாக மாறுகிற மனமுள்ள ஆம்பிளைங்க
    கொண்டாட்டம் போடுவதப் பாத்ததில்லையா?

    பெண்கள் திண்டாடும் கதைகளைக் கேட்டதில்லையா?

    ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

    ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன் நிதமும்
    ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன்

    ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன் நிதமும்
    ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன்

    உள்ள இந்த ஒலகத்தையே உத்துப் பாக்க நீங்க இப்போ
    சொல்லுறது எல்லாமே உண்மை தான்

    கொஞ்சும் தூர நின்னு பழகுவதும் நன்மை தான் நன்மை தான்

    கட்டுப்பாட்ட மீறாமே சட்டதிட்டம் மாறமே
    காத்திருக்க வேணும் கொஞ்ச காலம் வரையில்

    கட்டுப்பாட்ட மீறாமே சட்டதிட்டம் மாறமே
    காத்திருக்க வேணும் கொஞ்ச காலம் வரையில் பிறகு
    கல்யாணம் ஆகிவிட்டால் ஏது தடை ஏது தடை

    மாமா மாமா மாமா ஆமா மாமா மாமா மாமா
    ஆமா ஆமா ஆமா போடு ஆமா ஆமா ஆமா

    ReplyDelete
  2. Song: mama mama mama - பாடல்: மாமா மாமா மாமா

    Movie: Kumudam - திரைப்படம்: குமுதம்

    Singers: T.M. Soundararajan, Jamuna Rani

    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், ஜமுனா ராணி

    Lyrics: Maruthakasi - இயற்றியவர்: மருதகாசி

    Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்

    Year: - ஆண்டு: 1962

    ReplyDelete
  3. மிகவும் அழகான + இனிமையான + அர்த்தமுள்ள பாட்டு.

    எங்கட குழந்தை ‘ஹாப்பி’ கேட்டால் மிகவும் சந்தோஷப்படுவாள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. ஆமா.... கோபு பெரிப்பா.. இந்த பாட்டு கேக்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. happy 17 September 2016 at 05:08

      //ஆமா.... கோபு பெரிப்பா.. இந்த பாட்டு கேக்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு...//

      தேங்க் யூ டா .... என் செல்லக்குட்டி / வெல்லக்கட்டி. :)

      Delete
  5. ஹாப்பி மட்டும் சந்தோஷப்படுவான்னு ஸ்பெஷலா ஏன் சொல்லுறீங்க.. கேட்கும் எல்லாருமே சந்தோஷப்படுவோம்தானே..

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 17 September 2016 at 05:21

      //கேட்கும் எல்லாருமே சந்தோஷப்படுவோம்தானே..//

      ஆம். கேட்கும் எல்லோருமே சந்தோஷப்படுவோம்தான்.

      //ஹாப்பி மட்டும் சந்தோஷப்படுவான்னு ஸ்பெஷலா ஏன் சொல்லுறீங்க..//

      :) என் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் சிற்சில பொடி வைத்த அர்த்தங்கள் இருக்கும். அது சம்பந்தபட்டவர்களுக்கு மட்டும் புரிந்து, அவர்களுக்கு அதிக சந்தோஷத்தினைக் கொடுக்கக்கூடும் அல்லவா. அதனால் மட்டுமே இப்படி எழுதியுள்ளேன் சாரூ :)

      Delete
  6. ஆமா ஆமா கிருஷ்... நீங்க சொல்லுற ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கண்டு பிடிக்க தனி டிக்ஷ்னரிதான் போடோணும்....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 17 September 2016 at 20:55

      //ஆமா ஆமா கிருஷ்... நீங்க சொல்லுற ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கண்டு பிடிக்க தனி டிக்ஷ்னரிதான் போடோணும்....//

      நன்கு தேறின பன்ருட்டி பலாச்சுளைபோல பளிச்சின்னு இப்படிச் சொல்லிவிட்டாயே ! :)

      Delete