Friday, 16 September 2016

Dil dadap


30 comments:

 1. ’மீனா’ என்று என்னால் அன்புடன் அழைக்கப்படும்
  ’முன்னா மெஹர் மாமியின் மும்பைப் பயண அனுபவம்’
  பகுதி-6

  பகுதி-1 க்கான இணைப்பு:
  http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_91.html

  பகுதி-2 க்கான இணைப்பு:
  http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_15.html

  பகுதி-3 க்கான இணைப்பு:
  http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_78.html

  பகுதி-4 க்கான இணைப்பு:
  http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_22.html

  பகுதி-5 க்கான இணைப்பு:
  https://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_49.html

  >>>>>

  ReplyDelete
 2. (21)

  ”நான் என் அளவில், எனக்குள் இங்கு ஜோஸ்யம் பார்த்ததில், எங்கட சாரூஜி இப்போ முழுகாம இருக்கக்கூடும் என எனக்குத் தோன்றுகிறது”, என முன்னா இங்கிருந்து புறப்படும் போதே அவள் காதில் (வைரத்தோடு போல) நான் மிகவும் இரகசியமாகப் போட்டிருந்தேன்.

  அதனாலும், ஒருவேளை சாரூஜியால் இரயில்வே ஸ்டேஷனுக்கு, தன்னை வரவேற்க நேரில் வர முடியாமல் போய் இருக்கலாம் என்பதை முன்னாவும் புரிந்துகொண்டிருப்பாள் என நினைக்கிறேன்.

  இப்போத்தான் நம் முன்னா, நேருக்கு நேர் பார்த்துவிட்டாளே ... அந்தத் தொந்திப்பிள்ளையாரை .... அதுவும் மிகச்சரியாக பிள்ளையார் சதுர்த்தி (05.09.2016) க்கு ஒரு நாள் முன்பே! :)

  என் ஜோஸியம் பலித்துள்ளது கேட்க எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே !

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா கோபூஜி.. நூலு விடாதிங்க...

   Delete
 3. (22)

  அவர்கள் பங்களா வீட்டுக்குள் நுழைந்ததுமே ஹாலில் நிறைய மிகப்பெரிய ஸோபா செட்டுக்கள். மிகவும் புஸு-புஸுன்னு ஸாப்டாக இருந்துள்ளன. அதில் உட்கார்ந்தால் அப்படியே ஆளை உள்ளே இழுத்துக்கொள்வது போலவும் இருந்துள்ளன.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க.. ஸோபால உக்காந்தா உள்ளயே இளுக்குது

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:46

   //ஆமாங்க.. ஸோபால உக்காந்தா உள்ளயே இளுக்குது//

   எனக்கு இதுபற்றி மிக நன்றாகவே தெரியும். இங்கு திருச்சி வருமான வரி இலாகாவை நன்கு புதுப்பித்து முழுவதும் ஏ.ஸி. ஆக்கி இதுபோன்ற சோஃபாக்கள் நிறையவே போட்டு அமர்க்களப் ப-டு-த்-தி உள்ளனர்.

   நான் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் அங்கு என் வருமான வரி ரிடர்ன் சமர்ப்பிக்கச் சென்று வந்துகொண்டிருக்கிறேன்.

   ஒரு முறை அதில் அமர்ந்த என்னால், என் பாடி வெயிட்டால், அதிலிருந்து என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. இதுபோன்ற என் கஷ்டங்களை உணர்ந்த, அங்கிருந்த வேறு சிலர் என் கமுக்கட்டைகளை நன்கு பலமாகப் பிடித்துக்கொண்டு, என்னை ஒரே கட்டாகக் கட்டிப்பிடித்து தூக்கி எழுப்பிவிட்டனர்.

   இதுபோன்று நம்மை ஒரேயடியாக உள்ளே இழுத்துக்கொள்ளும் சோஃபாக்களில் அமர நான் எப்போதுமே விரும்புவது இல்லை.

   என் அலுவலகத்தில் இருந்த சோஃபாக்களும், குஷன் சேர்களும் இன்னும் மிக அருமையாக கும்மென்று தூக்கலாக இருக்கும். அவற்றில் உட்காரவே மிகவும் கம்பீரமாக இருக்கும்.

   அதைவிட நான் மிகவும் விரும்புவது, துபாயில் என் மகனின் நண்பர் ‘கிரி’ என்பவர் வீட்டில் உள்ள மிகவும் ஒய்யாரமான சோஃபா வை மட்டும் தான்.

   அதன் படத்தினை இதோ இந்த என் பதிவினில் காட்டியுள்ளேன். அவசியமாகப் பாருங்கோ.

   http://gopu1949.blogspot.in/2015/01/19_4.html

   அதில் உள்ள செளகர்யங்கள் உலகில் உள்ள எந்த ஒரு சோஃபாவிலும் இருக்கவே முடியாது என என்னால் அடித்துச் சொல்ல முடியும். :)

   Delete
 4. (23)

  சுவற்றிலே ஹோம் தியேட்டர்ன்னு சொல்லுவாங்களே, அதுபோல மிகப்பெரிய டி.வி. இருந்துள்ளது.

  பைபர் கிளாஸுடன் கூடிய கண்ணாடி ஜன்னல்கள் + அவற்றில் அழகழகான திக்கான கலர்ஃபுல்லான ஸ்க்ரீன்கள் என அனைத்தும் ஜோராக ஜகத்ஜோதியாகக் காட்சி அளித்துள்ளன.

  மிகவும் பிரும்மாண்டமான மாஸ்டர் பெட் ரூம். அதைத் தவிர, மிகப்பெரிய நான்கு பெட் ரூம்கள். எல்லாமே ஏ.ஸி + பாத் அட்டாச்ட் ஆக இருந்துள்ளதைப்பார்த்து இவர்கள் அப்படியே ஆடிப்போய் இருப்பார்கள் எனத் தெரிகிறது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. டி.வி. போட்டா தியேட்டருலயே படம் பாக்குறாப்ல இருக்குது.. டிஜிட்டல் ஸவுண்ட் ஸிஸ்டம்வேன... செம...செம..

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:48

   //டி.வி. போட்டா தியேட்டருலயே படம் பாக்குறாப்ல இருக்குது.. டிஜிட்டல் ஸவுண்ட் ஸிஸ்டம்வேற... செம...செம..//

   இங்கும் வஸந்த் & கோ போன்ற மிகப்பெரிய டீலர்களிடம் அது விற்பனைக்கு உள்ளது. அதன் விலை ஒரு லக்ஷமோ ஒன்றரை லக்ஷமோ சொன்னார்கள்.

   பல கோடி ரூபாய்கள் போட்டு வீடு கட்டினால்தான், லக்ஷக்கணக்கான ரூபாயில் விற்கப்படும் அந்த டி.வி.யை வாங்கி வைக்க பொருத்தமாக இருக்கும்.

   எனக்கென்னவோ இதுபோன்ற பொருட்களை, விலை கொடுத்து வாங்கி, நம் வீட்டுக்குக் கொண்டுவருவதைவிட கடைகளில் போய்ப் பார்த்துவிட்டு, அங்கேயே கொஞ்ச நேரம் நின்று ரஸித்து மகிழ்ந்து விட்டு வரவே மிகவும் பிடிக்கிறது.

   அது அது, அங்கு அங்கு, இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் மட்டுமே அழகு என்று நினைப்பவன் நான் !

   டி.வி. மட்டுமல்ல. புடவையும் கூட, ஜவுளிக்கடையின் வாசலில் கண்ணாடிக்குள் நிற்கும் பொம்மைக்குக் கட்டியிருக்கும்போது, அது கசங்காமல் கொள்ளாமல், அழுக்காகாமல், நம் கண்களுக்குப் பார்க்க கலர் கலராக மிக அழகாக இருக்கும்.

   இதைப்பற்றி என் கதை ஒன்றினில் கூட மிகவும் விவரித்து சுவாரஸ்யமாக நான் எழுதியுள்ளேன். உன்னிடம் அதையெல்லாம் சொல்லி, அதன் இணைப்புகளையெல்லாம் கொடுத்துப் பிரயோசனமே இல்லை என்பதையும் நான் நன்கு உணர்ந்துள்ளேன்.

   Delete
 5. (24)

  பிறகு கிட்சனுக்குள் நுழைந்த இவர்களுக்கு மயக்கம் வராத குறை மட்டுமே. கிட்சனில் மட்டுமே சும்மா ஒரு 20-30 பேர்கள் தாராளமாக உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இடமாம்.

  கிட்சன் மிகவும் பளபளப்பாக இருந்திருக்கும் போலிருக்குது.

  கிட்சனில் நட்ட நடுவிலே ஒரு மிகப்பெரிய டைனிங் டேபிளாம். அதில் ஒரே நேரத்தில் எட்டு பேர்கள் அமர்ந்து சாப்பிட வசதியாக குஷன் சேர்களாம்.

  நமக்கெல்லாம் இங்கு குழாயில் தண்ணீர் வருவது போல அங்கே பைப்புல சமையல் கேஸ் வருகிறதாம். கேஸ் சிலிண்டருக்கு புக் பண்ணி அது வருமா வராதான்னு காத்திருக்கவோ தரையில் சிலிண்டர்களை உருட்டவோ வேண்டாமாம்.

  நாலு பர்னர்களுடன் பிரும்மாண்டமான கேஸ் அடுப்பாம்.

  அதைப்பற்றவிட தீப்பெட்டியோ, லைட்டரோ தேவையில்லையாம். ஸ்டவ்வின் ஸ்விட்ச்சைத் திருகினால் ஆடோமேடிக் ஆக பற்றிக்கொள்ளுமாம். அது ஏதோ ஆட்டோ இக்னிஷனாம்.

  மைக்ரோ ஓவன், இன்டக்‌ஷன் ஸ்டவ், எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர்ன்னு ஏதேதோ இருக்குதாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பாத்திரங்களாம். எல்லா பாத்திரங்களும் ஷைனிங்கா இருக்குதாம்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க பைப் கேஸுன்னு சொல்லுறாங்க.. கரண்டுக்கு மீட்டரு இருக்கும்லா அதுபோல கேஸ் பைப்புல மீட்டரு இருக்குது. எவ்வளவு கேஸ் செலவாகுதுன்னு அதுல வருது.. கற்பனைல கூட நினைச்சி பார்க்கமுடியாத வசதிகள் நேரில் கண்டதும் ஆச்சரியம் பிரமிப்பு அடங்கவேல்ல
   . பட்டிகாட்டான் ஆனைய பாத்தாப்ல.... பாத்துகிட்டே இருக்கதோணிச்சி..

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:51

   //ஆமாங்க பைப் கேஸுன்னு சொல்லுறாங்க.. கரண்டுக்கு மீட்டரு இருக்கும்லா அதுபோல கேஸ் பைப்புல மீட்டரு இருக்குது. எவ்வளவு கேஸ் செலவாகுதுன்னு அதுல வருது.. கற்பனைல கூட நினைச்சி பார்க்கமுடியாத வசதிகள் நேரில் கண்டதும் ஆச்சரியம் பிரமிப்பு அடங்கவேல்ல//

   இங்கு நம் ஊரிலும் புதிதாகக் கட்டப்படும் காலனி போன்ற சில புதிய குடியிருப்புப் பகுதிகளிலும், புதிய அடுக்கு மாடி கட்டடங்களிலும் இதுபோன்ற பைப் கேஸ் கனெக்‌ஷன் வர ஆரம்பித்து விட்டது. இங்கு நானே பார்த்துள்ளேன். மீட்டர் அளவுகளின்படி கணக்கிட்டு பணம் செலுத்தினால் போதும்.

   இருப்பினும் எல்லா இடங்களுக்குமே இதுபோல் வர கொஞ்சம் வருஷங்கள் ஆகும்தான்.

   Delete
 6. இன்றுதான் இந்த பதிவு பக்கம் வந்தேன். புது முகம்தான்... கோபால்ஸார் பதிவுபக்கம் இந்த பெயர் பார்த்தேன். நான் கோபால்ஸார் பதிவு மட்டுமே படித்து வருகிறேன். சிப்பிக்குள் முத்து பேரு வித்தியாசமா இருக்கேனு வந்தேன். வந்தது நல்லதாச்சி.. எவ்வளவு அருமையான ஹிந்தி...தமிழ் பாடல்கள் கேட்க...பார்க்க கிடைக்குது... பாட்டு பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா... எனக்கும் எப்பவும் பாட்டு கேட்டுகிட்டே இருக்குற பழக்கம் இருக்குது.... இனி அடிக்கடி பாட்டுக்காகவும் கோபால் ஸாரின் கல கலப்பான பின்னூட்டங்களை படித்து ரசிக்கவும் வந்துகிட்டே இருப்பேன்...

  ReplyDelete
 7. (25)

  கிட்சன் பக்கத்திலேயே உள்ள ஸ்டோர் ரூமுக்குப்போனா, அங்கே மிகப்பெரிய ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், அக்வா வாட்டர் ஃபில்டர் அது இதுன்னு அமர்க்களமாக எல்லாமே இருக்குதாம்.

  எல்லா பெட்ரூம்களிலும் ஏராளமான அட்டாச்சுடு பாத்ரூம்களும், வெஸ்டர்ன் டைப் டாய்லட்களும் தாராளமாகவே இருப்பினும், இந்தியன் டைப் டாய்லட் ஒன்றுகூட இல்லாதது முன்னாவின் அம்மாவுக்கு மட்டும் முதலில் கொஞ்சம் குறையாக இருந்ததாம்.

  அவர்களின், சரியான புரிதல் இல்லாத, இந்த மனக் குறையைக் கேட்டதும் நம் முன்னா + சாரூஜி இருவருக்கும் ஒரே சிரிப்பாம். :)

  அவர்களுக்கு இதில் உள்ள செளகர்யா செளகர்யங்கள் என்னவென்று மிகச்சரியாகப் புரியவைத்ததும், ஊருக்குப்போனதும் முதல் வேலையாக, தன் வீட்டில் உள்ள இந்தியன் டைப் டாய்லட்டை, வெஸ்டேர்ன் டைப்பாக மாற்றிவிட்டுத்தான் மறுகாரியம் பார்க்கணும்ன்னு முடிவே செய்துட்டாங்களாம்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. கோபூஜி...நல்ல வேளை... இந்த விசயத்தை லைட்டா சொல்லிட்டு விட்டுட்டிங்க.

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:53

   //கோபூஜி...நல்ல வேளை... இந்த விசயத்தை லைட்டா சொல்லிட்டு விட்டுட்டிங்க.//

   வெஸ்டேர்ன் டாய்லெட்டில், தொடைகளை வைத்துக்கொண்டு நிம்மதியாக அமர வேண்டிய பகுதிகள் இரண்டிலும், உள்ளங்கால்களை வைத்துக்கொண்டு ஏறி அமரணுமோ, அதுபோல குரங்குபோல, உள்ளங்கால்களை வைத்து ஏறி ஒரேயடியாக உயரமாக அமர்ந்தால், அது நம்மை வழிக்கி விட்டுடாதோ என அவர்கள் ஒருவேளை நினைத்திருப்பார்களோ என்னவோ !

   அவர்கள் கற்பனையில் இதுபோல ஒருவேளை நினைத்திருந்தால், அதுவும் மிகவும் நியாயம்தானே !!

   எதிலுமே நல்லதொரு புரிதல் ஏற்படும்வரை, இதுபோன்ற சந்தேகங்கள் வருவது எங்களைப்போன்ற சாமானியர்கள் எல்லோருக்குமே இயற்கைதானே. இதில் நாம் தவறேதுமே சொல்லமுடியாது.

   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் புரிய வைக்க வேண்டியது நம் கடமையுமாகும் அல்லவா !

   Delete
 8. (26)

  சாரூஜியின் கைவண்ணத்தில் மதிய சாப்பாடாக .... முன்னா க்ரூப்புக்கு சிறப்பான விருந்தளிக்கப்பட்டன. இதனை ’படா கானா’ என ஹிந்தியில் சொல்லுவார்கள்; அதாவது தடபுடல் விருந்து என அர்த்தமாகும்

  டைனிங் டேபிள் சேரில் முன்னாவின் அம்மா தன் கால்களைத் தொங்க விட்டுக்கொள்ளாமல், மடக்கிக்கொண்டு சப்பனம் போட்டு அமர்ந்ததைப் புதுமையாகப் பார்த்த பியூஷ் என்ற சிறுவனுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லையாம். :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க கோபூஜி சாரூஜியின் கை பக்குவம் செம டேஸ்ட்டு ஃபுல் கட்டு கட்டிட்டோம்லா..

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:54

   //ஆமாங்க கோபூஜி சாரூஜியின் கை பக்குவம் செம டேஸ்ட்டு ஃபுல் கட்டு கட்டிட்டோம்லா..//

   அதில் அவளின் அன்பு அதிகமாகக் கலந்துள்ளதால் அவை நிச்சயமாக மிகவும் செம டேஸ்ட் ஆக மட்டுமே இருக்க முடியும்.

   இவ்வாறு ஒரு ஃபுல் கட்டு கட்ட அரிய பெரிய வாய்ப்புக் கிடைத்துள்ள, நீயும் உன் குடும்பத்தாரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். :)

   இதைக்கேட்ட எனக்கும் நானே அங்கு உன்னுடன் சேர்ந்து வந்து ஃபுல் கட்டு கட்டியதுபோல மகிழ்ச்சியாகவே உள்ளது.

   Delete
 9. (27)

  ஸேமியா பாயஸம், ஆலு ப்ராட்டா, பைங்கன் பார்த்தா, வெஜ்புலாவ், புலாவ் பூந்தி ராய்த்தா அப்பளம்...... இஞ்சி பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்த தயிர் சாதம்...... போன்றவைச் சாரூஜியால் மிகவும் ருசியாகச் செய்து பரிமாறப்பட்டுள்ளன.

  தயிர் சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள நம் தமிழ்நாட்டு ஐயர் மாமி ஒருவரால் செய்து கொடுத்தனுப்பப்பட்ட காரசாரமான ஜலத்தில் ஊறிய வடுமாங்கா ஊறுகாய்.

  அதன் ருசியே தனி அல்லவா! சாரூஜி மட்டுமல்லாமல், நாம் அனைவருமே அதனை மனதில் நினைத்தமாத்திரத்தில், மஸக்கைக்காரி போல ஆகிவிடுவோமே ! :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அந்த வடு மாங்காகாகவே தயிர் சோறு தின்னுகிட்டோம்..

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:55

   //உண்மைதான் அந்த வடு மாங்காகாகவே தயிர் சோறு தின்னுகிட்டோம்..//

   ஐயர்கள் வீடுகளில் பக்குவமாகப் போடும் வடுமாங்காய் என்பது உப்பு, புளிப்பு, காரம் முதலியவற்றை நன்கு உள்வாங்கிக்கொண்டு, சுருங்கிப் போய் இருக்கும். அடிக்கடி அதனை நாங்கள் எடுத்து குலுக்கிக் குலுக்கி விடுவதால், பூஞ்சக்காளான் பிடிக்காமல் நீண்ட நாட்களுக்கு அப்படியே கெடாமல் ஜோராக இருக்கும். நல்ல மணத்துடன் கூடிய ருசியான அதனைப் பிடிக்காதவர்கள் இந்த உலகில் யாருமே இருக்க முடியாது.

   Delete
 10. (28)

  பொதுவாக சாதத்தில் தயிர் கலந்து சாப்பிடும் வழக்கம் இல்லாத முன்னா க்ரூப், இந்தச் சாப்பாட்டை மிகவும் விரும்பி வளைத்துக்கட்டி, சாப்பிட்டு மகிழ்ந்ததாகக் கேள்விப்படுகிறோம்.

  எல்லாம் எங்கட சாரூஜியின் கைராசி + கை வண்ணம் .... அவற்றின் ருசிக்குக் கேட்கவா வேண்டும். சாரூஜி கையால் செய்தவற்றைச் சாப்பிடக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!

  நாமும் இந்த இடத்தில் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொள்வோம். முடிந்தால் பசி ஏப்பமும் விட்டுக்கொள்வோம். :)

  நம்ம தமிழ்நாட்டுக்காரங்க சாப்பாடுல காரம் தூக்கலாத்தான் இருக்கும். ஆனால் அந்த பட்டாஜியும், அவர்கள் மகன் பியூஷ்ஷும் காரமே தொடமாட்டாங்க. அவர்கள் இனிப்பு விரும்பிகள் மட்டுமே.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க அப்பா மகன் இருவருமே ஸ்வீட் விரும்பிகளா இருக்காங்க... சாரூஜி ஸாம்பார் சாதத்துக்கே வடுமாங்கா ஊறுகா அதோட காரசாரமான தண்ணி தொட்டுக்கறாங்க

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:58

   //சாரூஜி ஸாம்பார் சாதத்துக்கே வடுமாங்கா ஊறுகா அதோட காரசாரமான தண்ணி தொட்டுக்கறாங்க//

   அவள் எங்காளு.

   என்னைப்போலவே ஸாம்பார் சாதத்துக்கும் காரசாரமான வடுமாங்காய் + அதன் ஜலத்தைத் தொட்டுக்கொள்கிறாள். எங்கள் வீட்டில் உள்ள எல்லோருமே அப்படித்தான். :)

   Delete
 11. (29)

  முன்னாவின் அம்மா சாரூஜியிடம் “ஏம்மா, இத்தனை சமையல் காரியங்களையும் நீ ஒண்டி ஆளாகவே செய்திருக்கிறாயேம்மா. உனக்கு உதவிக்கு யாரையாவது ஆட்களை வேலைக்கு வைத்துக்கொள்ளலாமே” என்று சொல்லியுள்ளார்கள்.

  அதற்கு சாரூஜி, “இல்லையம்மா, சமையல் ஒரு கஷ்டமான காரியமே இல்லை. நானே செய்துவிட முடியும்” என்று சொல்லி இருக்கிறாள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அதுவும் இல்லாம அப்பா மகன் இருவருமே காலை 8--- மணி கிளம்பி போனா..ஸாயங்காலம் 6--- மணி போலதான் வருவாங்க.. எனக்கும் வீட்ல பொளுது போகணும்லா. அதுவுமில்லாம நான் தனியே இருக்கேன்ல எந்த வேலக்கானங்கள நம்பி வீட்டுக்குள்ளார விட முடியும்..னு சொல்லுறாங்க நியாயம்தானே..

   Delete
 12. (30)

  இந்த இடத்தில் எனக்கு ஒரு மிக முக்கியமான விஷயம் என் ஞாபகத்திற்கு வருகிறது. அதனை இங்கு வருகை தரும் என் செல்லக் குட்டிகளின் நன்மையைக் கருதி நானும் இங்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

  ”அதாவது ஓர் கெட்டிக்கார + புத்திசாலியான மனைவியானவள், சமையல் அறையையும், சயன அறையையும் மட்டும் வேறு யாருக்கும் எப்போது விட்டுக்கொடுக்கவே கூடாது.

  அவை இரண்டும் மட்டுமே தன் கணவரை எப்போதும் தன் அன்புப் பிடிக்குள் வைத்துக்கொள்ள உதவக்கூடியது”

  இதை நம் குட்டிகள் யாருமே என்றுமே மறக்க வேண்டாம் என அன்புடன் வேண்டுகோள் விடுத்துக்கொள்கிறேன்.

  [ ’சமையல் அறை’ பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும். ’சயன அறை’ என்றால் தன் கணவருடன் தான் படுத்துப் பரவஸம் அடையும் + ஜிஞ்சாமிர்தம் செய்யும், பெட் ரூம் என்பதை அறிந்துகொள்ளவும். :) ]

  ReplyDelete
 13. சயன அறைக்கு இவ்வளவு விளக்கமாக....

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 17 September 2016 at 21:00

   //சயன அறைக்கு இவ்வளவு விளக்கமாக....//

   இங்கு வருகைதரும் எல்லாக்குட்டிகளும் எங்கட டீச்சர்-1 போல, சயன அறை விஷயத்தில் மஹா மஹா எக்ஸ்பர்ட் ஆகவா இருப்பாங்க?

   நானே எங்கட டீச்சர்-1 இடம்தானே, இதுவரை பல புதிய புதிய ஆச்சர்யமான விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன்.

   Delete