Monday 12 September 2016

ezu swarangalukul



11 comments:

  1. ஆ......... ஆ...........
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி

    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் (ஏழு)

    காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி ஆ.....
    காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
    கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி
    கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி

    ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
    ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன்
    இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
    இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (ஏழு)

    எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஆ.........
    எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் - நீ
    எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
    நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
    நமக்காக நம் கையால் செய்வது நன்று
    நமக்காக நம் கையால் செய்வது நன்று

    ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை ஆ.........
    ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
    அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
    பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்

    பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
    பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம்

    நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
    நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க

    வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
    வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல

    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

    ReplyDelete
  2. திரைப்படம்: அபூர்வ ராகங்கள்

    பாடியவர்: வாணி ஜெயராம்

    ReplyDelete
  3. நல்ல படம். நல்ல அர்த்தமுள்ள பாடல்.

    இதில் வீடியோ ஏனோ வேலை செய்யவில்லை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. ஓர் மகிழ்ச்சியான செய்தி !
    ============================

    ’மீனா’ என்று என்னால்
    அன்புடன் அழைக்கப்படும்

    ’முன்னா மெஹர் மாமியின்
    மும்பைப் பயண அனுபவம்’

    பற்றிய குறிப்புகள்
    வெகு விரைவில் இங்கு
    இந்தப்பின்னூட்டப்பகுதியிலேயே
    என்னால் வெளியிடப்பட உள்ளன.

    ஆவலுடன் காத்திருங்கள் !

    ReplyDelete
  5. மீனா மற்றும் அவளின் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய ‘பக்ரீத் நல்வாழ்த்துகள்’.

    ReplyDelete
  6. புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாள்.

    ஏழைக்கு உணவளியுங்கள்.
    இனிமையான சொற்களையே பேசுங்கள்.
    உள்ளத்திலிருந்து பகைமையை நீக்குங்கள்.
    பிறரைப்பற்றி குறை கூறாதீர்கள்.
    தான தர்மம் செய்யுங்கள்.
    தவறிழைப்போரை மன்னித்து விடுங்கள்

    போன்ற திருக்குரானின் உயரிய போதனைகளை மனதில் நிலை நிறுத்தி உண்மையுடனும், கருணையுடனும் வாழ்ந்தால், உலகில் அன்பும், அறமும், மனித நேயமும் தழைத்தோங்கும்.

    இஸ்லாமியப்பெருமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய திருநாளில் உலகெங்கும் இறை உணர்வும், தியாக சிந்தனைகளும் பரவட்டும். அமைதியும் மகிழ்ச்சியும் மலரட்டும்.

    இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. முன்னா ஈத் முபாரஹ்......

    ReplyDelete
  8. முன்னா உங்களுக்கும் உங்க ஆத்துல எல்லாருக்கும் பக்ரீத் நல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துகள் படிக்கவே ஹாப்பியா இருக்குது...

      Delete