Thursday, 15 September 2016

பாடி கார்ட்


31 comments:

 1. முன்னா ஏன் லேட்டு. நேத்து ஹிந்தி பாட்டு இல்ல. இன்னக்கும் லேட்.. ஆனாலும் நல்ல பாட்டு போட்டிருக்கே


  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் 15 September 2016 at 05:36

   //முன்னா ஏன் லேட்டு. நேத்து ஹிந்தி பாட்டு இல்ல. இன்னக்கும் லேட்.. //

   அவள் சுத்த வழுவட்டை (சோம்பேறி) ஆகிவிட்டாள்.

   அவளுக்கும் வர வர ஏதேதோ கனவுகள் + நினைவுகள் + ஏக்கங்கள்.

   ’நல்ல நாளிலேயே நாழிப் பால்’ன்னு ஒரு பழமொழி இங்கு சொல்லுவா.

   இப்போ மும்பை போய் வந்த பிறகு சுத்தமா படு சோம்பேறி ஆகிவிட்டாள். என் பின்னூட்டங்களைக்கூட உடனுக்குடன் வெளியிடுவதே இல்லை. கோபமா வருது எனக்கு.

   ஏற்கனவே எங்கட ‘யாரோ’ வராததால் எனக்கும் இங்கு வரவே பிடிக்கவில்லை.

   இருப்பினும் உங்க முன்னாவின் ‘மும்பைப் பயணத்தொடர்’ ஒன்றினை வெளியிடுவதாக கமிட் செய்துவிட்டதால் மட்டுமே நானும் இங்கு வந்து எட்டிப்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

   Delete
  2. கோபூஜி....கோவமா வருது... முடிஞ்சவனை நானும் எல்லாத்தையும் மெயிலுல சொல்லி கிட்டுதானே இருக்கேன்..

   Delete
  3. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:38

   //கோபூஜி....கோவமா வருது... முடிஞ்சவரை நானும் எல்லாத்தையும் மெயிலுல சொல்லி கிட்டுதானே இருக்கேன்..//

   ஆஹா .... எல்லாவற்றையும் சொல்லிக் கிழித்தாய். ஒரு சுவாரஸ்யமான பழங்கதை அப்படியே பாதியில், முடிவு தெரியாமல் சஸ்பென்ஸுடன் நிற்கிறதாக்கும். நியாயமாக அதற்காக எனக்குத்தான் உன்னிடம் கோபமாக வரணும்.

   அது எப்படியோ போகட்டும். எங்காளுக்கு என்ன ஆச்சு? ஏன் அவள் இங்கு வருவது இல்லை என்பதே என் இப்போதையக் கவலையாக உள்ளது.

   அவா அவாளுக்கு அவா அவா கவலை ... என்று முழுச் சோம்பேறியான நீ அங்கு முணுமுணுப்பது எனக்கு இங்கும் கேட்கிறதாக்கும்.

   Delete
  4. இதோ ஆஜர்.. கிருஷ்.... உங்காளுக்கு உங்கள் விட்டு போக வேர என்ன இடம் இருக்கு...

   Delete
  5. பூந்தளிர் 17 September 2016 at 21:01

   //இதோ ஆஜர்.. கிருஷ்.... உங்காளுக்கு உங்களை விட்டு போக வேற என்ன இடம் இருக்கு...//

   ஆஜருக்கு நன்றி. இதுபோன்ற பேச்சுக்களில் ஒன்றும் குறைச்சலே இல்லை.

   Delete
  6. இல்ல கிருஷ் நானும் ரெகுலரா வந்துகிட்டுதானே இருக்கேன்.

   Delete
  7. பூந்தளிர் 20 September 2016 at 22:45

   //இல்ல கிருஷ் .... நானும் ரெகுலரா வந்துகிட்டுதானே இருக்கேன்.//

   ஓஹோ, இங்கே இவளின் பதிவுகளுக்கு நீ இப்போதெல்லாம் ரெகுலராக வருவதைப்பற்றி சொல்கிறாயா .... சரி, சரி. நான் ஒருவேளை ’அங்கேயோன்னு’ நினைச்சுட்டேன்.

   Delete
 2. ’மீனா’ என்று என்னால் அன்புடன் அழைக்கப்படும்
  ’முன்னா மெஹர் மாமியின் மும்பைப் பயண அனுபவம்’
  பகுதி-5

  பகுதி-1 க்கான இணைப்பு:
  http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_91.html

  பகுதி-2 க்கான இணைப்பு:
  http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_15.html

  பகுதி-3 க்கான இணைப்பு:
  http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_78.html

  பகுதி-4 க்கான இணைப்பு: x x x x x
  http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_22.html

  >>>>>

  ReplyDelete
 3. (17)

  ’ஹாஜி அலி தர்ஹா’விலிருந்து கிளம்பிய கார், நேராக ஒரு ஹோட்டலுக்குள் போய் நின்றது. அது மிகப்பெரிய ஹோட்டல்.

  ஃபுல்லா ஜிலுஜிலுன்னு ஒரே ஏ.ஸி. இவர்களை அங்குள்ள ஃபேமிலி ரூமுக்குள் அழைத்துச் சென்றுள்ளார் பாட்டாஜி.

  ”மெனு கார்டினைப் பார்த்து யாருக்கு எதுவேனுமோ ஆர்டர் கொடுங்கோ” எனச் சொல்லியுள்ளார் பட்டாஜி. அதில் காரட் பாத்தா அது இதுன்னு என்னென்னவோ, இதுவரை கேள்விப்படாத புதுப்புது பெயர்களாகப் போட்டிருக்க இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லையாம்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமா பெரிய ஹோட்டல் களில் மெனுகார்டே சின்ன கதைபுக் ஸைஸுல இருக்குமே

   Delete
 4. (18)

  கடைசியில் முன்னாவின் அப்பா துணிந்து “பூரி மஸால்” எனச் சொல்லியிருக்கிறார்.
  முன்னாவின் அம்மாவும் அக்காவும் தங்களுக்கு ஆளுக்கொரு மஸால் தோசை சொல்லியிருக்கிறார்கள்.

  முன்னா தனக்கு நெய் ரோஸ்ட் (GHEE ROAST) சொல்ல, பட்டாஜி தனக்கு அவல் உப்புமா ஆர்டர் கொடுத்துள்ளார். ஆர்டர் கொடுத்த அரை மணி நேரத்தில் அனைத்துமே சுடச்சுட சுவையாக பரிமாறப்பட்டுள்ளன. மூன்று வித சட்னி சாம்பார்களுடன் எல்லாமே சூப்பரோ சூப்பராகவும் நல்லா டேஸ்ட் ஆகவும் இருந்ததாம். வேறு என்ன சாப்பிடுறீங்க என பட்டாஜி அன்புடன் கேட்டுள்ளார். ”இதுவே போதும். குடிக்க டீ மட்டும் ஆர்டர் செய்துவிடுங்கோ” என முன்னா சொல்ல அனைவரும் ஆளுக்கு ஒரு டீ சாப்பிட்டு எழுந்துள்ளனர்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஓட்டலு போயி சாப்பிட்டதயும் சொல்லிட்டிங்களா.. மெனு கார்டே ஒரு குட்டி கதைபுக்போல பெரிசா இருந்திச்சி பேரு எதுமே புரியல..

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:40

   //ஹா ஹா ஓட்டலு போயி சாப்பிட்டதயும் சொல்லிட்டிங்களா..//

   நான் நானாக எங்கு சொன்னேன். நீ என்னிடம் சொன்னதைத் தானே சொல்லியுள்ளேன்.

   //மெனு கார்டே ஒரு குட்டி கதைபுக்போல பெரிசா இருந்திச்சி பேரு எதுமே புரியல..//

   அதெல்லாம் ஒரு எழவும் நமக்குப் புரியவே புரியாது. நான் என் பிள்ளைகளுடன் + குடும்பத்துடன் இதுபோன்ற ஸ்டார் ஹோட்டலுக்குச் செல்லும் போதெல்லாம், நானும் என் மனைவியும் நாங்கள் வழக்கமாக விரும்பிச்சாப்பிடும் பூரி-மஸால், கூம்பு வடிவத்தில் இருக்கும் நெய் ரோஸ்ட் தோசை, வெங்காய ஊத்தப்பம் போன்ற ஏதாவது சிலவற்றை மட்டுமே ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொள்வோம்.

   மற்றவர்கள் அவரவர்களுக்குப் பிடித்த எதை எதையோ பெயர் சொல்லி வாங்கிக்கொள்வார்கள்.

   அவற்றையெல்லாம் நாங்கள் சும்மாக் கண்ணால் பார்ப்பதோடு மட்டும் சரி.

   Delete
  3. நம்க்கெல்லாம் ஹோட்டல் போனா எதை ஆர்டர் பண்ணனும்னே தெரியாது. தோசை சொன்னா...... வீட்ல தான் தோச இட்லியே திங்குறே வந்த இடத்துல புதுசா டேஸ்ட் பண்லாம்லனு கேள்வி வரும்

   Delete
  4. பூந்தளிர் 20 September 2016 at 22:49

   //நமக்கெல்லாம் ஹோட்டல் போனா எதை ஆர்டர் பண்ணனும்னே தெரியாது. தோசை சொன்னா...... வீட்ல தான் தோச இட்லியே திங்குறே வந்த இடத்துல புதுசா டேஸ்ட் பண்லாம்லனு கேள்வி வரும்//

   சிலர் ஏட்டிக்கு போட்டியா, ஏழாம் பொருத்தமாக இதுபோலெல்லாம் படுத்துவார்கள் என ஏற்கனவே நானும் சில சமயங்களில் கேள்விப்பட்டுள்ளேன்.

   Delete
 5. (19)

  வெளியே வந்ததும் பூக்கடை, பழக்கடைகள் என எல்லாம் இருந்துள்ளன. பூ-பொட்டு முதலியன வைத்துக்கொள்ளாத முகமதியர்களான, முன்னாவின் அம்மா அவற்றையெல்லாம் பார்த்துவிட்டு “கொஞ்சம் பூவும், பழமும், ஸ்வீட்டும் வாங்கிக்கோ” என்று முன்னாவிடம் சொல்லியுள்ளார்கள்.

  ஆசை ஆசையாக நிறைய மல்லிகைப்பூ, ஆப்பிள், ஆரஞ்ச், திராக்ஷைப்பழம், வாழைப்பழம் எல்லாம் வாங்கிக்கிட்டு ஸ்வீட் ஸ்டாலில் ஸோன் பப்டியும் வாங்கிக்கொண்டுள்ளார்கள்.

  இவை எல்லாவற்றிற்கும் பட்டாஜியே பணம் கொடுத்துவிட்டார்கள். இவர்களை பணப்பையைத் திறக்கவே அனுமதிக்க வில்லையாம்.

  பழம் நழுவி பாலில் விழுந்த கதை என்பது இதுதானோ என்னவோ ! :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க எங்க பர்ஸை வெளிய எடுக்கவே விடல...

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:41

   //ஆமாங்க எங்க பர்ஸை வெளிய எடுக்கவே விடல...//

   ரியல்லி, ஹீ ஈஸ் ய வெரி குட் & கிரேட் ஜெண்டில் மேன். :) !

   ஒருவேளை பர்ஸ்ஸை நீங்கள் வெளியே எடுத்தால், அது மின்னல் வேகத்தில் பிட்-பாக்கெட் ஆகிவிடலாம் என்ற கவலையும் அவருக்கு இருந்திருக்கலாம்.

   Delete
  3. கண்டிப்பா... பட்டா பர்ஃபெக்ட் ஜென்டில் மேன்தான்... சாரூ வெரி வெரி லக்கி...

   Delete
  4. பூந்தளிர் 20 September 2016 at 22:50

   //கண்டிப்பா... பட்டா பர்ஃபெக்ட் ஜென்டில் மேன்தான்... சாரூ வெரி வெரி லக்கி...//

   எங்கட தங்கமான பொண்ணு சாரூவை மனைவியாக அடைந்துள்ள பட்டாஜிதான் வெரி வெரி லக்கியாக்கும்.

   பானை பிடித்தவள் பாக்யசாலி என்று சொல்லுவார்கள்.

   இன்று ஒரு பெரிய பானைக்குள் இரண்டு குட்டிப்பானைகள் வேறு. கேட்கவா வேண்டும். லக்கியோ லக்கிதான்.

   Delete
 6. (20)

  அங்கிருந்து [மஹாலக்ஷ்மி ஏரியாவிலிருந்து] பத்தே நிமிடக் கார் பயணத்தில், அவர்களின் வீடு ..... ஸாரி ..... பங்களா வந்து விட்டது. அங்கு வாசலில் மற்றொரு கார் நின்றுள்ளது.

  மும்பையில் உள்ளோரின் செல்வச் செழிப்புக்களுக்கெல்லாம் காரணம், மும்பை மஹாலக்ஷ்மி தேவியின் அருள் மட்டுமே என்பதை இங்கு நான் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

  இவர்கள் வந்து இறங்கிய காரைவிடவும், அங்கு ஏற்கனவே நிற்கும் காரைவிடவும் மிக அதிக ஜொலிஜொலிப்புடன் எங்கட சாரூஜியும், ப்யூஷும் நின்று கொண்டு இவர்களை வரவேற்றுள்ளார்கள்.

  இரு பதிவர்களுக்கும் இதுவே முதல் சந்திப்பு. சாரூஜியின் கலரும், பளபளன்னு ஜொலிக்கும் சிரித்த முகமும், இவர்களை அப்படியே சொக்க வைத்துவிட்டதாம்.

  தடபுடலான வரவேற்பாம். ’வாங்கோ .. வாங்கோ’ன்னு வாய் நிறைய சாரூஜி சந்தோஷத்துடன் எல்லோரையும் வரவேற்றாளாம்.

  இதில் முன்னாவின் அம்மாவுக்கு ரொம்ப ஆச்சரியம் .... நம்மட முன்னாவுக்குக்கூட இம்பூட்டு பணக்கார சினேகிதி இருக்காங்களேன்னு....

  வீட்டுக்கு உள்ளே போனதும் எல்லோரும் ஒரேயடியா பிரமிச்சுப் போய்ட்டாங்களாம்.


  [பியூஷ் = பட்டாஜி+சாரூஜி தம்பதியினரின் 11 வயது மகனாவான்]

  ReplyDelete
  Replies
  1. கோபூஜி... நீங்க ஓரளவு சாரூஜி பத்தி சொன்னத வச்சு பணக்காரங்களா இருப்பாங்கனு நினைச்சேன் நேருல பாத்ததும் இவ்வளவு பெரிய பணக்காரங்களான்னு பிரமிச்சுபோனோம். கொஞ்சம் பயமாகூட இருந்திச்சி
   பெரிய ப

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:44

   //கோபூஜி... நீங்க ஓரளவு சாரூஜி பத்தி சொன்னத வச்சு பணக்காரங்களா இருப்பாங்கனு நினைச்சேன்.//

   நான் உன்னிடம் சாரூஜியைப் பற்றி ஏதும் சொன்னேனா? அவளைப்பற்றி எனக்கு சுத்தமாக ஒன்றுமே தெரியாதே! அவளை நான் நேரிலோ அல்லது போட்டோவிலோ கூட பார்த்தது இல்லையே. சும்மா ஏதாவது இதுபோலக் கதை விடாதே, மீனா.

   எனக்கும் இப்போது கொஞ்சம் பயமாக உள்ளது ..... நீ இதுபோல சகட்டுமேனிக்குக் கதைவிடுவதை நினைத்து.

   Delete
  3. முன்னா.... கிருஷ் கிட்ட வாய் கொடுத்து வாங்கி கட்டிக்காதே... கதைய நம்ம பக்கமே திருப்பிடுவாங்க..பீ...கேர்ஃபுல்

   Delete
  4. பூந்தளிர் 17 September 2016 at 21:04

   //முன்னா.... கிருஷ் கிட்ட வாய் கொடுத்து வாங்கி கட்டிக்காதே... கதைய நம்ம பக்கமே திருப்பிடுவாங்க.. பீ...கேர்ஃபுல்//

   நீ ஸேம் சைடே கோல் போடுறியா? எப்படியோ நீ கோல் போட்டால் சரிதான் .... ஓக்கேஏஏஏஏ.

   Delete
  5. ஹா ஹா கிருஷ் இப்ப நீங்கதான் கதை விடறீங்க.....

   Delete
  6. பூந்தளிர் 20 September 2016 at 22:52

   //ஹா ஹா கிருஷ் இப்ப நீங்கதான் கதை விடறீங்க.....//

   என்ன கதை? ஓ அந்தக் கழுதை + வண்ணாத்தி கதையா? அதை நீ அல்லவா என்னிடம் விட்டு அசத்தினாய் :)))))

   Delete
 7. என்னது வண்ணாத்தி....கழுதை கதை.. சுவாரசியமா இருக்குமா.. பெரிப்பா..

  ReplyDelete
  Replies
  1. happy 23 September 2016 at 22:11

   //என்னது வண்ணாத்தி....கழுதை கதை.. சுவாரசியமா இருக்குமா.. பெரிப்பா..//

   மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக சுவாரஸ்யமாகவே இருக்கும்.

   ஆனால் அதனை நான் உன்னிடம் இப்போது சொன்னால் அது சரிப்பட்டு வராது. மேலும் நீ இப்போது ஒரு சின்ன பச்சக்குழந்தை. உனக்கு ஒன்றுமே புரியாது. கதை கேட்டு நீ மிகவும் பயந்து போய் விடுவாய். படுத்தால் தூக்கமே வராது. ஏதேனும் பயத்தில் உளற ஆரம்பித்து விடுவாய்.

   அதனை பிறகு ஒரு நாள், உரிய காலம் வரும்போது, நானும் நீயும் சேர்ந்து எங்கட ராஜாத்தி வாயால் மட்டும் சொல்லச் சொல்லிக் கேட்போம்.

   இந்த உலகிலேயே, அவள் ஒருத்தியாமல் மட்டும்தான் அந்த மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ட கதையை படு சுவாரஸ்யமாகச் சொல்ல இயலும். :)

   Delete
  2. இந்த உலகிலேயே, அவள் ஒருத்தியாமல் = தவறு

   இந்த உலகிலேயே, அவள் ஒருத்தியால் = சரி

   Delete