Thursday, 15 September 2016

சாந்த் ஸே ஃபாரிஷ்


26 comments:

 1. சூப்ர் ஸாங்க் முன்னா...

  ReplyDelete
  Replies
  1. 3:21 முதல் காட்டப்படும் வளைகாப்புக் காட்சிகள் இனிய நினைவலைகளை எழுப்பின. நல்வாழ்த்துகள்.

   Delete
 2. ’மீனா’ என்று என்னால் அன்புடன் அழைக்கப்படும்
  ’முன்னா மெஹர் மாமியின் மும்பைப் பயண அனுபவம்’
  பகுதி-4

  பகுதி-1 க்கான இணைப்பு:
  http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_91.html

  பகுதி-2 க்கான இணைப்பு:
  http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_15.html

  பகுதி-3 க்கான இணைப்பு:
  http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_78.html

  >>>>>

  ReplyDelete
 3. (13)

  முன்னாவின் அப்பா, ஓட்டுனர் பட்டாஜி அருகில் அமர, இந்தப் பெண்கள் மூவரும் பின்னால் அமர, ரதம் போன்ற ஜிலு ஜிலு, குளு குளு வண்டி நகர ஆரம்பித்தது. முதன் முதலாக அனைவரும் மும்பைக்கு வந்துள்ளதால் அங்கு இருபுறமும் வானை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டுள்ள கட்டடங்களைப் பார்த்து அவர்களின் கழுத்தே சுளிக்கிப்போச்சுதாம்.

  முன்னாவின் அப்பா ஏதோ தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பட்டாவுடன் பேசிக்கொண்டே வர, அவருக்கு இவரின் ஆங்கிலம் சுத்தமாகப் புரியாததால், வேகமாக கார் ஓட்டுவதிலேயே கவனமாக இருந்துள்ளார். :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க அப்பா இங்கிலீஷ கூட தமிளு போலத்தான் பேசுவாங்க..

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:34

   //ஆமாங்க அப்பா இங்கிலீஷ கூட தமிளு போலத்தான் பேசுவாங்க..//

   அதனால் என்ன? எல்லோராலும் எல்லா லாங்குவேஜும் நம்ம சாரூவைப்போல சரளமாகப் பேச முடியாது.

   நான் இருமுறை மும்பை சென்ற போதும், ஒருமுறை டெல்லி போனபோதும், எல்லா இடங்களிலும் சகட்டு மேனிக்கு, எனக்குத் தெரிந்த ஹிந்தியில்தான் பேசினேன்.

   என்னுடன் கூட வந்தவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம்.

   ஆனால் அங்குள்ள கடைக்காரர்களுக்கு மட்டும் நான் சொல்லவருவது என்னவென்றே சரியாகப் புரியவில்லை. :) இதெல்லாம் சகஜம்தான்.

   Delete
  3. ஹா ஹா ஹிந்தில பேசினிங்களா... ஒருவேளை உங்க ஹிந்தி தமிழ் போல இருந்திச்சோ...

   Delete
  4. பூந்தளிர் 20 September 2016 at 22:39

   //ஹா ஹா ஹிந்தில பேசினிங்களா...//

   நாம் இருவரும் நமக்குள் பேசிக்கொள்வதுதானே ஹிந்தி என்பது???? [உதாரணமாக: தாழ்ப்பாள், துப்பட்டா etc.,]

   //ஒருவேளை உங்க ஹிந்தி தமிழ் போல இருந்திச்சோ...//

   யாரு கண்டா?

   ஒருமுறை நானும் என் சின்னப்பையனும் டெல்லிக்குப் போனோம். அங்கு ஒரு மிகப்பெரிய பஜார். அங்கு எதையும் அவர்கள் சொல்லும் விலைக்கே வாங்கி விடக்கூடாது. முடிந்தவரை பார்கெயின் செய்யணும் என என்னிடம், அங்குள்ள என் நண்பர் சொல்லி அனுப்பியிருந்தார்.

   என் பிள்ளை ஒரு குறிப்பிட்ட ஷூ வாங்க ஆசைப்பட்டான். அந்த கடைக்காரன் 2000 ரூபாய் என்று சொன்னான். இவன் 1500 ரூபாய் எனக் கேட்டுவிட்டான். அவனும் பார்ஸல் கட்டிக் கொடுத்துவிடத் தயாராக இருந்தான்.

   நான் நடுவில் புகுந்து தடுத்துவிட்டேன். சலோ சலோ எனச் சொல்லி என் பையனை அங்கிருந்து ஓட்டிக்கொண்டு, வேறு கடைகள் பக்கமாகச் சுற்றி வந்தேன்.

   எங்களை நீண்ட நேரம் துரத்திக்கொண்டே, அந்தக்கடைப்பையன் அதே ஷூக்களுடன் வந்தான்.

   நான் ஒரு மாதிரி ஹிந்தியில் .... கியா ஜி ... உஸ்கா பிரைஸ் பஹூத் ஜாஸ்தி ஹை ... நஹி .. நஹி .. தோ செள ருபாயா ஒன்லி .. என்றெல்லாம் ஹிந்தியில் வெளுத்து வாங்கி, கடைசியில் அவன் 2000 ரூபாய் சொன்ன அதே ஷூக்களை 200 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்து விட்டேன். என் பையனுக்கு அன்று ஒரே ஆச்சர்யம்.

   இதுபோல பல சாமான்கள் அந்த பஜாரில், அன்று பார்கெயின் செய்து வாங்கினேன். அசந்தால் நம்மை ஒரேயடியாக ஏமாற்றி விடுவார்கள் எனத் தெரிந்துகொண்டோம்.

   இன்று அதே என் பையன் தன் புத்தம் புதிய சொந்த ஏ.ஸி. காருக்கு, தினமும் 500 அல்லது 1000 என பெட்ரோல் போட்டுக்கொண்டு, ஜாலியாக அவனுடைய பெண்டாட்டி + சின்னக்குழந்தைகளுடன், ஊரைச் சுற்றி வருகிறான். எதற்குமே அவன் இன்று கணக்குப் பார்ப்பது இல்லை. என் பிள்ளைகள் மூவருமே அப்படித்தான். நல்ல செலவாளிகள்.

   அவர்களின் அப்பா அவர்களை அப்படிச் செல்லம் கொடுத்து வளர்த்து இன்று செல்வந்தர்களாகவே வைத்துள்ளார்.

   என் அப்பா அப்படி இல்லை. அதனால் நான் இன்றும் கொஞ்சம் யோசித்தே செலவு செய்பவனாக உள்ளேன். :)

   Delete
  5. ஹை.... பெரிப்பா ஹிந்தி அரைகுறையா தெரிஞ்சுகிட்டே 2000---ரூவா ஷூவ...200--- ரூவாக்கு பேரம் பேசி வாங்கினிங்களா... அப்ப உங்களுக்கு ஹிந்தி நல்லாவே தெரிஞ்சிருக்குனுதானே அர்த்தம்

   Delete
  6. happy 23 September 2016 at 22:06

   //ஹை.... பெரிப்பா ஹிந்தி அரைகுறையா தெரிஞ்சுகிட்டே 2000---ரூவா ஷூவ...200--- ரூவாக்கு பேரம் பேசி வாங்கினிங்களா... அப்ப உங்களுக்கு ஹிந்தி நல்லாவே தெரிஞ்சிருக்குனுதானே அர்த்தம்//

   எனக்கு ஹிந்தி ’தோடாத்தோடா மாலும்’.

   அதாவது கொஞ்சம் கொஞ்சம் மட்டுமே தெரியும் என்று நான் சொல்லியுள்ளேன்.

   ஹிந்தியில் ஆரம்பப்படிப்பான ’ப்ராத்மிக்’ மட்டும் நான் படித்து பாஸ் செய்துள்ளேன். ஹிந்தி எழுத்துக்களை என்னால் எழுத்துக்கூட்டி இப்போதும் வாசிக்க முடியும்.

   நான் 10வது 11வது படிக்கும்போது ஒரு ஹிந்தி பண்டிட் D.RADHAKRISHNAN என்ற பெயரில் இருந்தார். அவர் நன்றாக சின்ஸியராக ஹிந்திப் பாடங்கள் சொல்லித் தருவார். அவர் வெரி ஸ்ட்ரிக்ட் ஆசாமியும்கூட.

   அப்போது ஹிந்தியில் 0 மார்க் வாங்கினாலும் பாஸ் போட்டு விடுவார்கள். எங்களது படிப்பில் ஹிந்தி ஒரு கட்டாய பாடமே இல்லை. சும்மா ’நாம்கே வாஸ்தே’ மட்டுமே. அதாவது விருப்பமிருந்தால் படிக்கலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.

   அதே நேரத்தில் எங்களை ஹிந்தி படிக்கவிடாமல் ‘ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்கள்’ தமிழ்நாடு முழுவதும் அன்றைய ஆளும் கட்சியான DMK அரசாங்க சப்போர்ட்டுடன் நடந்து பள்ளிகளுக்கெல்லாம் 2-3 மாதங்கள் விடுமுறை விடப்பட்டு ஏகப்பட்ட அமர்க்களங்கள் நடந்ததால், எனக்கு ஆர்வமிருந்தும் என்னால் தொடர்ந்து ஹிந்தி கற்க முடியாமல் போய் விட்டது. இதனால் நஷ்டம் நமக்குத்தான். எவ்வளவுக்கு எவ்வளவு அதிக பாஷைகள் நாம் கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்குத்தான் நல்லது.

   இன்று பல பாஷைகள் தெரிந்து வைத்துள்ள எங்கட ராஜாத்தி-ரோஜாப்பூ, சாரூஜி (டீச்சர்-1 & டீச்சர்-2) போன்றவர்களைப் பார்த்தால் எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது.

   இனி வருந்தி நாம் என்னதான் செய்ய?

   Delete
 4. (14)

  அடுத்த ஒருமணி நேரத்துல மும்பை மஹாலக்ஷ்மி .... ஏரியாவில் உள்ள ஹாஜி அலி தர்ஹா வந்தாச்சு.

  என்ன ஒரு அற்புதமான தர்ஹா.. கடல் நடுவிலே கட்டி இருக்காங்க. போகிற பாதையில் கூட தண்ணியும் அலையும் அடிக்குமாம். இரண்டு பக்கமும் கடல்தண்ணி அலையடிக்க ஒத்தயடி பாதையில் நடந்து போனது அற்புதமா இருந்திச்சாம்.

  எனக்கு அந்த தர்ஹாவின் படத்தைக்கூட எங்கட முன்னா மெயிலில் அனுப்பியிருந்தாள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. இப்ப படிக்கயிலகூட அந்த அற்புதத்த ரசிக்க முடியுது

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:35

   //இப்ப படிக்கயிலகூட அந்த அற்புதத்த ரசிக்க முடியுது//

   நான் அங்குள்ள பிரபல மும்பை மஹாலக்ஷ்மி கோயிலுக்குப் போய் வந்துள்ளேன். அதனையும் என்னால் இன்றுவரை மறக்கவே முடியவில்லை.

   இவை அனைத்துமே அவரவர்களின் அனுபவத்தில் அற்புதமான விஷயங்கள் மட்டுமேதான்.

   Delete
  3. எஸ் மூணு பக்கமும் கடல் சூழ.. நடுவில் மஹாலஷ்மி கோவில் படிகள் ஏறி மேல போகணும்.. கீழ கடலுக்குள்ள ஹாஜி அலி தர்ஹா. இருக்கு... இன்னொரு புறம் ஒரு சர்ச் கூட இருக்கு..அற்புதமான இடங்கள்...

   Delete
  4. இந்த மாதிரி இடங்களை பத்தி படிக்கும்போதே பாக்கணும்போல இருக்கே..

   Delete
  5. happy 23 September 2016 at 22:07

   //இந்த மாதிரி இடங்களை பத்தி படிக்கும்போதே பாக்கணும்போல இருக்கே..//

   மும்பை மஹாலக்ஷ்மி தேவி அருளால், உனக்கு இவற்றையெல்லாம் பார்ப்பதற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்குடா .... தங்கம். கவலைப்படாதே.

   காலம் வரும். அதுவரை பொறுமையாகக் காத்திருக்கவும்.

   Delete
 5. (15)

  பட்டாஜியும் இவர்களுடன் கூடவே தர்ஹாவுக்குள் வந்தாங்களாம். தர்ஹா உள்ளே நடுவிலே குரான் புஸ்தகம் வைத்து அதன் மேலே பச்சைக்கலரில் பட்டுத்துணி வைத்து போர்த்தி பூக்களால் அலங்கரித்து வைத்திருந்தார்களாம்.

  உள்ளே நுழைந்ததுமே முன்னா க்ரூப் முட்டி போட்டு அமர்ந்து காலைத் தொழுகை செய்தார்களாம்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஐந்து நேர தொழுகை அவங்க எங்க இருந்தாலும் ரெகுலரா பண்ணிடறாங்க.. ரொம்ப நல்ல விஷயம்

   Delete
 6. (16)

  பட்டாஜி அங்குள்ள மெளல்வி ஐயாவிடம் போய் ஹிந்தியில் பேசியுள்ளார். முன்னாவின் அக்காவைக்காட்டி “இவங்களுக்கு இந்த மாதம் 26ம் தேதி கல்யாணம் வைத்திருக்காங்க. உங்க ஆசீர்வாதம் வேண்டி தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்திருக்காங்க” எனச் சொல்லி உள்ளார்.

  உடனே மெளல்வி ஐயா, தன் பக்கத்தில் இருந்த மயில் இறகு விசிறியால் முன்னாவின் அக்காவின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தடவி ஸ்பெஷலாக ஆசீர்வதித்துள்ளார்.

  பிறகு பாக்கியுள்ள மற்ற மூவருக்கும் மயில் இறகு விசிறியால் கொஞ்சம் ஆங்காங்கே மட்டும் தடவி விட்டு ஆசீர்வதித்துள்ளார்.

  கொண்டு போன கல்யாண பத்திரிகையை குரான் பாதத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள உண்டியலில் இவர்களால் இயன்ற காணிக்கையை அளித்து விட்டு, பிரார்த்தனைகள் முடிந்த மன திருப்தி + சந்தோஷத்துடன் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

  ReplyDelete
  Replies
  1. பட்டாஜி மட்டும் வல்லையினா ரொம்ப திண்டாட்டமா போயிருக்கும் அவங்க கூட வந்ததால எல்லாம் நல்லபடியா திருப்தியா சந்தோசமா நடந்திச்சி...

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:37

   //பட்டாஜி மட்டும் வல்லையினா ரொம்ப திண்டாட்டமா போயிருக்கும் அவங்க கூட வந்ததால எல்லாம் நல்லபடியா திருப்தியா சந்தோசமா நடந்திச்சி...//

   உங்களுக்கு திண்டாட்டம் ஏதும் இன்றி நல்லபடியாக திருப்தியும் சந்தோஷமும் அளித்துள்ள பட்டாஜியும், அவரைக் கீ கொடுத்து உங்களிடம் அன்று அங்கு அனுப்பியுள்ள சாரூஜியும் வாழ்க !

   Delete
  3. ஆமா...நல்ல மனம் வாழ்க.....

   Delete
 7. ஆமா..முன்னா.. இருவரையும் ஜோடி சேர்க்க முதல் காரணகர்த்தா... கிருஷ் தானே.. எல்லா பெருமையும் புகழும் கிருஷையே சேரும்..

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 17 September 2016 at 21:06

   //ஆமா..முன்னா.. இருவரையும் ஜோடி சேர்க்க முதல் காரணகர்த்தா... கிருஷ் தானே.. எல்லா பெருமையும் புகழும் கிருஷையே சேரும்..//

   ஆமாம் ஆமாம். இப்படி ஊரிலே உள்ள எல்லோரையும் ஜோடி சேர்த்துவிட்டுட்டு, எனக்கு நான் விரும்பிடும் + என்னை அதைவிட அதிகம் விரும்பிடும் ஒரு குறிப்பிட்ட ஜோடி கிடைக்காமல் .... நான் அடிக்கடித் தனி ஆளாகத் தவிப்பது எனக்கு மட்டுமே தெரியுமாக்கும்.

   Delete
  2. என்ன கோபு பெரிப்பா..... அதான் கோபு பெரிம்மா உங்களுக்கு சூப்ர்ஜோடியா கிடைச்சிருக்காங்களே...

   Delete
  3. happy 23 September 2016 at 22:09

   //என்ன கோபு பெரிப்பா..... அதான் கோபு பெரிம்மா உங்களுக்கு சூப்பர் ஜோடியா கிடைச்சிருக்காங்களே...//

   அதானே .... நான் ஒரு மக்குப்பையன் .... மறந்தே போய் விட்டேன் பாரு. நீ இப்போது இங்கு எனக்கு அவளை நினைவூட்டிவிட்டாய். அதனால் எனக்கு ஏற்பட்டுள்ள ஏதோவொரு பயத்தில் நான் இப்போது இங்கிருந்து எஸ்கேப் ஆகிக்கொள்கிறேன். :)

   Delete