Thursday, 15 September 2016

என்ன சொல்ல போகிறாய்


37 comments:

 1. இந்த பாட்டும் நல்லா இருக்கு.

  ReplyDelete
 2. ’மீனா’ என்று என்னால் அன்புடன் அழைக்கப்படும்
  ’முன்னா மெஹர் மாமியின் மும்பைப் பயண அனுபவம்’
  பகுதி-3

  பகுதி-1 க்கான இணைப்பு:
  http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_91.html

  பகுதி-2 க்கான இணைப்பு:
  http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_15.html

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. பயணக்கட்டுரை 1---2-- எல்லாத்துலயுமே கமெண்ட் போட்டிருந்தேன்.. எல்லாத்தையுமா காக்கா ஊஷ் ஆயிடிச்சி...

   Delete
  2. பூந்தளிர் 20 September 2016 at 22:24

   //பயணக்கட்டுரை 1---2-- எல்லாத்துலயுமே கமெண்ட் போட்டிருந்தேன்.. எல்லாத்தையுமா காக்கா ஊஷ் ஆயிடிச்சி...//

   ஐயோ .... பாவம்.

   எதுவும் உன்னுடையது என்றாலே அந்தக் காக்காய்க்குக்கூட பிடித்துப்போய் விடுகிறது, என்னைப்போல.

   ஒரே கொத்தாகக் கொத்துக்கொண்டு போய் விடுகிறது, என்னைப் போல அல்லாமல்.

   இதற்கெல்லாம் அந்தக் காக்கா மட்டுமே அதிர்ஷ்டம் செய்துள்ளது.

   Delete
  3. ஐயய்யோ நாம போடற கமெண்ட காக்கா தூக்கி போயிடுமா...

   Delete
  4. happy 23 September 2016 at 21:58

   //ஐயய்யோ நாம போடற கமெண்ட காக்கா தூக்கி போயிடுமா...//

   ஆமாம். சமயத்தில் நம் கமெண்ட்ஸ் அந்தக் காக்காய்களுக்கு, வெயிலில் பிழிந்து உலர்த்தியுள்ள வடாமாகக் காட்சியளிக்கும் போலிருக்கு.

   டக்குன்னு கொத்திக்கிட்டுப் போய்விடும்.

   அதுவும் எங்கட ’பூந்தளிரோடது’ என்றால் அதன் டேஸ்டே தனி அல்லவா ! :) நிச்சயமாகக் கொத்திக்கொண்டு போய் இருக்கும்தான்.

   Delete
 3. (9)

  பட்டாஜி என்பவர் சாரூஜியின் அன்புக் கணவர். மிகவும் நல்லவர். ஓரளவு நல்ல வசதி வாய்ப்புக்களுடன், மும்பையில் ஓர் பிரபலமான கம்பெனியில் மிக உயர்ந்த பதவி வகிப்பவர். ஆனாலும் அவருக்கு தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது. மற்ற வட இந்திய மொழிகள் பலவும் அறிந்தவர்.

  அவருடன் முன்னா க்ரூப் ஆசாமிகள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். இந்த முன்னா க்ரூப்பில் நம் முன்னாவுக்கு மட்டுமே ஓரளவுக்கு ஆங்கிலம் பேச வரும். மற்றவர்களால் தமிழ் மட்டுமே சரளமாகப் பேச முடியும்.

  இருப்பினும் மஹா புத்திசாலியான நம் அன்புக்குரிய சாரூஜி என்னமாய் திட்டமிட்டு ஒவ்வொரு காயையும் நகர்த்தி இருக்கிறாள் என்பதை நாம் இப்போது, ஒவ்வொன்றாகக் கேட்டு மகிழப்போகிறோம்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஐயயோ ஒரு பக்கெட் ஐஸை தூக்கி தலைமேல கவுத்துறிங்களே கோபால்ஜி...

   Delete
  2. ப்ராப்தம் 17 September 2016 at 05:51

   //ஐயயோ ஒரு பக்கெட் ஐஸை தூக்கி தலைமேல கவுத்துறிங்களே கோபால்ஜி...//

   இல்லை சாரூ. உனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆகி இன்னும் (அதாவது As on 3rd & 4th September) நான்கு மாதங்கள் கூட முழுசாக முடியவில்லை.

   நீ ஒரு தமிழ் வலைப்பதிவர் என்றோ, நாங்களெல்லாம் உனக்கு வலைப்பதிவு நண்பர்கள் என்றோ நிச்சயமாக அவருக்குத் தெரிந்திருக்க நியாயமே இல்லை.

   இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில், நீ இவர்களின் வருகையைப்பற்றி அவரிடம் எடுத்துச்சொல்ல நிச்சயமாகத் தயங்கித்தான் இருந்திருப்பாய். அவர் என்ன சொல்வாரோ, அவர் இதனை எப்படி எடுத்துக்கொள்வாரோ என்ற ஒரு சிறு தயக்கம் உனக்குள் நிச்சயமாக இருந்திருக்கும்தான். இதை நீ என்னிடம் சொல்லாவிட்டாலும்கூட, இதனை என்னால் நன்கு கற்பனை செய்து உணர முடிகிறது, சாரூ.

   இருப்பினும் உன் இந்த சாமர்த்தியமான முயற்சி எப்படியோ கடைசியில் வெற்றிகரமாகவே முடிந்துள்ளது. அதைத்தான் நான் ’காய் நகர்த்தல்’ எனச் சொல்லியுள்ளேன்.

   உன் அன்புக்கணவர் போல எல்லாக் கணவன்மார்களும் இதனை சுலபமாக ஏற்றுக்கொண்டு, சம்மதிப்பார்கள் என நாம் நினைக்கவோ எதிர்பார்க்கவோ முடியவே முடியாது. உலகம் பலவிதம் என உனக்கே தெரியும்.

   அதனால், நிஜமாலுமே நான் ஒரு பக்கெட் என்ன .... 108 பக்கெட்டுகள் ஐஸைக் கூட உன் தலையில் கொட்டி சாரதா அம்பாளுக்கு அபிஷேகம் போலச் செய்யலாம்தான்.

   இப்போது நீ இருக்கும் நிலையில் அதுபோல எதுவும் நான் செய்யக்கூடாது. இதனால் உனக்கு மட்டுமல்ல, உன் வயிற்றிலிருக்கும் எங்கள் தங்கங்களுக்கும் சளி பிடித்துவிடும்.

   எதையும் மிகைப்படுத்தி நான் சொல்லவே இல்லை என்பதை மட்டும் நீ உனக்குள் புரிந்துகொள்ளவும். அதுவே எனக்குப்போதும்.

   Delete
  3. சாரூ...கிருஷ் சரியாதான் உங்க இருவரைப்பத்தியும் சொல்லி வராங்க.. மிகைப்படுத்தி எதையுமே சொல்லமா...

   Delete
  4. பூந்தளிர் 20 September 2016 at 22:27

   //சாரூ...கிருஷ் சரியாதான் உங்க இருவரைப்பத்தியும் சொல்லி வராங்க.. மிகைப்படுத்தி எதையுமே சொல்லமா...//

   நீயாவது இதை மிகைப்படுத்தாமல், மிகவும் கரெக்டாகச் சொல்லியுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.

   Delete
 4. இந்த பாட்டு பிடிச்சிருக்கு..நல்லா இருக்கு.

  ReplyDelete
 5. (10)

  நம் முன்னா தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி என்னும் ஊரில் வசித்து வருபவர். ஏதோ ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் அறிகிறேன். இந்த ஊரில்தான் வைகை நதி பாய்ந்து அதன்பின் வங்காள விரிகுடா கடலில் கலப்பதாகத் தெரிகிறது. முன்னாவின் குடும்பம் மிகப்பெரியது. அப்பா, அம்மா, ஓர் அக்கா, ஓர் தங்கை, ஓர் அண்ணன், அண்ணி, அவர்களுக்கு ஓர் குழந்தை என முன்னாவையும் சேர்த்து மொத்தம் இன்றைய தேதியில் மொத்தம் எட்டு நபர்கள் உள்ள மிகப்பெரிய, நடுத்தர வர்க்கக் குடும்பம்.

  பரமக்குடியிலிருந்து 01.09.2016 காலையில் கிளம்பி, சுமார் 7-8 மணி நேரங்கள் பயணம் செய்து, கோயம்பத்தூரை அடைந்து, அங்கு கோவையிலிருந்து 01.09.2016 வியாழக்கிழமை இரவு கிளம்பிய நாகர்கோயில் எக்ஸ்ப்ரஸ் இரயிலில் ஏறி, சுமார் 36+ மணி நேரங்கள் பயணம் செய்து, மும்பை தாதர் ஸ்டேஷனில் 03.09.2016 சனிக்கிழமை காலை 8 மணிக்கு மிகச்சரியாக இறங்கியுள்ளனர்.

  கோச் நம்பர் ஸீட் நம்பர் முதலியனவற்றை ஏற்கனவே சாரூஜி, முன்னாவிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளதால், சாரூஜியின் அன்புக்கட்டளைக்கு இணங்க, சாரூஜியின் கணவர் பட்டாஜி அவர்கள், அங்கு மும்பை தாதர் ஸ்டேஷன் ப்ளாட்ஃபார்மில், கரெக்டாக வந்து முன்னா க்ரூப்புக்காகக் காத்திருந்துள்ளார்.

  சாருஜி ஏற்கனவே முன்னேற்பாடாகச் சொல்லி வைத்திருந்தபடி, இந்தப்பெண்கள் மூவரும் கருப்பு நிறத்தில் பர்தா போட்டுக்கொண்டு, பட்டாஜிக்குக் காட்சியளிக்க வேண்டும்.

  ஆனால் அங்கு அந்தக்கோச்சின் வெளியே இரண்டு பெண்மணிகள் மட்டுமே கருப்பு நிற பர்த்தாக்கள் அணிந்து பட்டாவுக்குக் காட்சியளித்து, அவரை சற்றே குழப்பி விட்டுள்ளனர்.

  அதே சமயம் மற்றொரு கருப்பு நிற பர்த்தாவில் இருக்க வேண்டிய நம் முன்னாவும், அவளின் அப்பாவும் இரயிலிலிருந்து தங்கள் லக்கேஜ்களை இறக்குவதில் மும்முரமாக இருந்துள்ளனர்.

  இது தெரியாமல் முன்னாவின் அக்காவிடம் போன பட்டாஜி ஒரு புன்னகையுடன் தன் கரங்களை நீட்டி “ஆர் .... யூ .... முன்னா? .... ஐ ஆம் பட்டா, சாரூஸ் ஹஸ்பண்ட்” என ஆங்கிலத்தில் ஏதோ சொல்லியுள்ளார்.

  இதைக்கேட்ட, அந்த முன்னாவின் அக்கா அப்படியே பயந்து நடுங்கிப்போய், தன் அம்மாவின் பின்புறம் ஒளிந்து கொண்டபடி முன்னாவை நோக்கி “முன்னா ... முன்னா .... யாரோ ஒரு ஆளு வந்து என்னவோ கேட்குது ..... ஓடியா” எனத் தமிழில் கூச்சலிட்டு இருக்கிறாள். :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா.. ஆமா கோபூஜி.. அக்கா புது ஆளு அவகிட்டால பேசினதும் பயந்துகிட்டா..

   Delete
  2. ஆமா வீட்டுக்கு வந்ததுமே பட்டா சொல்லி சொல்லி சிரிச்சாங்க.

   Delete
  3. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 22:29

   //ஹா..ஹா.. ஆமா கோபூஜி.. அக்கா புது ஆளு அவகிட்டால பேசினதும் பயந்துகிட்டா..//

   அதனால் பரவாயில்லை. இந்த பயம் பொதுவாகப் பெண்களுக்கு நியாயமாக இருக்க வேண்டியதுதான்.

   இனி 26.09.2016 முதல் எதற்கும் பயப்படாமல் ஜாலியாக இருக்கச் சொல்லிச் சொல்லிக்கொடு, மீனா.

   -=-=-=-

   ப்ராப்தம் 17 September 2016 at 05:53

   //ஆமா வீட்டுக்கு வந்ததுமே பட்டா சொல்லி சொல்லி சிரிச்சாங்க.//

   :)))))

   Delete
  4. நல்ல காமெடியா இருக்கே...

   Delete
 6. (11)

  பிறகு முன்னாவே இரயில் பெட்டியிலிருந்து தன் லக்கேஜ்களுடன் கீழே இறங்கி வந்து தன்னை முன்னா என அறிமுகப்படுத்திக்கொண்டு மகிழ்ந்திருக்கிறாள்.

  அனைவருக்கும் கைகூப்பி நமஸ்தே சொல்லி விட்டு, ”ஐ ஆம் சாராஸ் ஹஸ்பண்ட் பட்டாச்சார்யா ... வெல்கம் டு மும்பை” எனச் சொல்லி, அவர்களை ஸ்டேஷனுக்கு வெளியே கூட்டிவர எத்தனித்துள்ளார், பட்டாஜி.

  முன்னாவின் தந்தை ஒரு இரயில்வே ஊழியர் என்பதால், முன்னா க்ரூப் ஆஸாமிகளின் இரயில்வே ஃப்ரீ பாஸ்களை காட்ட வேண்டியவரிடம் காட்டி, அதில் கையொப்பம் வாங்கிக்கொண்டு, அனைவரும் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்துள்ளனர்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. பட்டாஜிய பாத்ததுமே இவங்க தமிளரு போல இல்லியேன்னு நினைச்சுகிட்டேன் சாரூஜியும் மெயிலுல சொல்லி இருந்தாங்க. அவங்களுக்கு தமிளு தெரிாதுன்னு..

   Delete
  2. பரவால்லையே ஒரு விஷயம்கூட விடாம நினைவு வச்சு எல்லாம் சொல்லி இருக்காளே. அதையும் கஷ்டப்பட்டு கோபால்ஜி இங்கு அனைவரின் கவனத்துக்கும் பகிர்ந்து கொள்கிறார்களே.. படிக்கவே சந்தோஷமா இருக்கு..

   Delete
  3. ப்ராப்தம் 17 September 2016 at 05:55

   //பரவால்லையே ஒரு விஷயம்கூட விடாம நினைவு வச்சு எல்லாம் சொல்லி இருக்காளே.//

   முருகு கல்யாணத்திற்குப்போய் அங்கு 5 மணி நேரம் மட்டுமே தங்கிவிட்டு, அதற்கே ஐந்து மெயில்களில் அனைத்தையும் எனக்கு எழுதித்தள்ளியிருந்தாள்.

   இப்போ உங்களுடன் 35 மணி நேரம் தங்கிவிட்டு வந்து இருக்கிறாள். 35 மெயில்களாவது எனக்குக் கொடுத்து என்னை பெண்டு எடுத்துவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பாள் போலிருக்குது.

   //அதையும் கஷ்டப்பட்டு கோபால்ஜி இங்கு அனைவரின் கவனத்துக்கும் பகிர்ந்து கொள்கிறார்களே.. படிக்கவே சந்தோஷமா இருக்கு..//

   ’உனக்காக .... எல்லாம் உனக்காக’ என்றுதான் நான் இப்போது சொல்ல வேண்டியுள்ளது.

   நம் டீச்சர்-2 வை த்தான் காணோமே :(

   நாமே எழுதி நாமே படித்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது. என்ன செய்ய?

   Delete
  4. நம் டீச்சர்-2 வை த்தான் காணோமே :( = தவறு
   நம் டீச்சர்-1 யை த்தான் காணோமே :( = சரி

   டீச்சர்-1 ஆகிய எங்கட ராஜாத்தியைப்போய் டீச்சர்-2 எனத் தவறுதலாக இங்கு குறிப்பிட்டுள்ள ’கிருஷ்’ஷை அவங்க கட்டிப்பிடித்து, முட்டிக்கு முட்டி தட்டி, பெஞ்சின் மேல் ஏற்றி, தலையில் குட்டி, தன் ஷார்ப்பான கொம்புகளால் நன்கு முட்டோ முட்டுன்னு முட்டி, உரலில் கட்டிப்போட்டு, உலக்கையைக் கையில் பிடித்துக்கொண்டு உருவி அடித்து நொறுக்கி, இன்னும் என்னென்ன பனிஷ்மெண்ட்ஸ் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

   எப்படியாவது எங்கட ராஜாத்தி-ரோஜாப்பூ இங்கே வந்து ஒரு காட்சியளிக்க மாட்டாளா என்ற ஏக்கம் நாளுக்கு நாள் மிக அதிகமாக இருந்து வருகிறது.

   நேற்று புரட்டாஸி சனிக்கிழமை, தமிழ் மாதப்பிறப்பு, மஹாளய பக்ஷ ஆரம்பப் புண்ணியதினம் எல்லாமே சேர்ந்திருந்தது. நானும் பக்தி சிரத்தையுடன் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்துள்ளேன். அதன் பலன் அவளை இன்று இங்கு எப்படியும் வரவழைத்து விடும் என்ற நம்பிக்கை எனக்குள் உள்ளது. பார்ப்போம்.

   வாடி ... என் ... ராஜாத்தி ! ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..டா !!

   Delete
  5. எஸ்...கிருஷ்... முட்டித்தள்ள கொம்புகளை தீட்டிக்கொண்டு வந்துட்டேன்.. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக...கவனமாக இருந்துக்கோங்க.....

   Delete
  6. பூந்தளிர் 17 September 2016 at 21:10

   //எஸ்...கிருஷ்... முட்டித்தள்ள கொம்புகளை தீட்டிக்கொண்டு வந்துட்டேன்.. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக... கவனமாக இருந்துக்கோங்க.....//

   அச்சா .... பஹூத் அச்சா ....

   ’மாடே மாடே ஓடிவந்து நீயே என்னை முட்டு’ன்னு ஏதோ மராட்டிப் பழமொழி சொல்லியிருந்தாயே ... அந்த நினைவு வந்து எனக்குள் இப்போது சிரித்துக்கொண்டேன்.

   கொம்புகளை நீட்டிக்கொண்டு மாடு என்னை முட்ட வரும்போது, அதன் காம்புகளைப்பிடித்துத் திருகி நான் கடித்துப்புடுவேன்.

   மாடுதான் என்னிடம் மிகவும் ஜாக்கிரதையாக கவனமாக இருக்கணுமாக்கும்.

   Delete
  7. வந்தாச்சு... ஏற்கனவே ரெண்டு மூணு நாள்முன்ன கமெண்டும் போட்டிருந்தேன். இந்த முன்னா என்னதான் பண்றாளோ...

   Delete
  8. பூந்தளிர் 20 September 2016 at 22:30

   //வந்தாச்சு... ஏற்கனவே ரெண்டு மூணு நாள்முன்ன கமெண்டும் போட்டிருந்தேன். இந்த முன்னா என்னதான் பண்றாளோ...//

   அவள் ஒரு உலக மஹா சோம்பேறி மட்டுமே. ’நல்ல நாளிலேயே நாழிப்பால் .....’ என்று ஒரு பழமொழி சொல்லுவா.

   இப்போ அவங்க வீட்டிலே ஒரு கல்யாணம் ... அடுத்தது உடனே இவள் கல்யாணம். கேட்கணுமா.

   Delete
 7. (12)

  வெளியே வந்து பார்த்தால் கப்பல் போல மிகப்பெரியதோர் இன்னோவா சொகுசு வண்டி, உள்ளே ஏ.ஸி., டி.வி., ரேடியோ இன்னும் என்னெல்லாமோ இருந்துதாம். அதில் அனைவரையும் ஏறி வசதியாக உட்காரச்சொல்லியுள்ளார் பட்டாஜி.

  முன்னாவின் அப்பா, அம்மா, அக்கா எல்லோருக்கும் ஒரே பிரமிப்பாக ஆகி விட்டதாம். இதுபோல ஒரு சொகுசு வண்டியில் அவர்கள் இதுவரை ஏறி உட்கார்ந்ததே இல்லையாம்.

  முன்னாவின் அம்மாவுக்கு உள்ளூர ஏதோ பயமாம். “யாருடி இவரு?” என முன்னாவிடம் கேட்டுள்ளார்கள்.

  “மும்பையில் என் ஃப்ரண்ட் சாரூ என்பவள் இருக்கிறாள் என்று சொன்னேனே, அவளின் வீட்டுக்காரர்தான் இவர்” எனச் சொல்லியிருக்கிறாள் முன்னா.

  ”அதெல்லாம் சரி; இந்த ஆளுக்குத் தமிழே தெரியலையே” என பயத்தில் கொஞ்சம் கிசுகிசுத்துப் புலம்பியுள்ளார்கள், முன்னாவின் அம்மா.

  சாரூஜி முன் யோசனையுடன் ஒரு முரட்டு ப்ளாஸ்க் நிறைய கொடுத்தனுப்பியிருந்த இஞ்சி + ஏலக்காய் போட்ட, செம டேஸ்டான ’ஹை டீ’யை அனைவரும் ஆனந்தமாக அருந்தி மகிழ்ந்துள்ளனர்.

  ReplyDelete
  Replies
  1. கிட்டால இருந்து பாத்தாப்லயே எல்லா விசயங்களும் சொல்லி வறீங்க கோபூஜி...

   Delete
  2. இவ்வளவு நீண்ட ரயில் பயணம் செய்து வராங்க கண்டிப்பா களைப்பா இருப்பாங்கனுதான் டீ கொடுத்து அனுப்பினேன்... இது ஒரு பெரிய விஷயமா....

   Delete
  3. ப்ராப்தம் 17 September 2016 at 05:57

   //இவ்வளவு நீண்ட ரயில் பயணம் செய்து வராங்க கண்டிப்பா களைப்பா இருப்பாங்கனுதான் டீ கொடுத்து அனுப்பினேன்... இது ஒரு பெரிய விஷயமா....//

   தங்கமான குணத்தில், டைம்லி ஹெல்ப்பில், நீ அப்படியே என் பெரிய மருமகள் போலவே டிட்டோவாக இருக்கிறாய். அவளும் உன்னைப்போலவே அனைத்தையும் அழகாக வெகு அழகாகத் திட்டமிட்டுச் செய்யக்கூடியவள்.

   பயணக் களைப்புடன் வந்தவர்களுக்குத்தான் அந்த டீ யின் மதிப்பினை நன்கு உணர முடியும். இது ஒரு மிகப்பெரிய விஷயம் மட்டுமே, சாரூ.

   Delete
  4. என்ன ஒரு முன் யோசனைல்ல....

   Delete
  5. பூந்தளிர் 20 September 2016 at 22:31

   //என்ன ஒரு முன் யோசனைல்ல....//

   நான் ஒருவேளை அங்கு புறப்பட்டு வந்தால் நீ எனக்கு இதுபோல என்னென்ன முன்யோசனையுடன் செய்வாயோ?

   நினைத்தாலே பயமாக்கீதூஊஊஊஊ. :)

   Delete
 8. இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
  இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
  இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
  என்ன சொல்ல போகிறாய்

  சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
  காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா

  அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
  அதை நானும் மெய்பிக்கதானே ஒரு ஆயுள் வேண்டுமே

  இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
  இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
  இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
  என்ன சொல்ல போகிறாய்
  என்ன சொல்ல போகிறாய்

  சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
  காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா

  அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
  அதை நானும் மெய்பிக்கதானே ஒரு ஆயுள் வேண்டுமே

  இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
  இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
  இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
  என்ன சொல்ல போகிறாய்
  என்ன சொல்ல போகிறாய்

  இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
  இதுதானே சொந்தம் இதயம் சொன்னதடி

  கண்ணாடி பிம்பம் கட்ட கயிறு ஒன்றும் இல்லையடி
  கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

  நீ ஒன்று சொல்லடி பெண்ணே
  இல்லை நின்று கொல்லடி கண்ணே

  எந்தன் வாழ்க்கையே உன் விழி விளிம்பில்
  எனை துரத்தாதே உயிர் கரையேறாதே

  இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
  இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
  இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
  என்ன சொல்ல போகிறாய்
  என்ன சொல்ல போகிறாய்

  சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
  காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா

  அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
  அதை நானும் மெய்பிக்கதானே ஒரு ஆயுள் வேண்டுமே

  இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
  இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
  இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
  என்ன சொல்ல போகிறாய்
  என்ன சொல்ல போகிறாய்

  விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
  பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி

  இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத
  வானம் எது கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

  பல உலக அழகிகள் கூடி
  உன் பாதம் கழுவலாம் வாடி

  என் தளிர் மலரே இன்னும் தயக்கம் என்ன
  என்னை புரியாதா இது வாழ்வா சாவா
  என்ன சொல்ல போகிறாய்
  என்ன சொல்ல போகிறாய்
  என்ன சொல்ல போகிறாய்
  என்ன சொல்ல போகிறாய்

  நியாயமா நியாயமா
  என்ன சொல்ல போகிறாய்
  என்ன சொல்ல போகிறாய்

  மௌனமா மௌனமா

  ReplyDelete
 9. அனைத்தையும் சொல்லாமல் சொல்லிவிடும் மிகவும் அர்த்தமுள்ள அழகான இனிமையான பாடல் .... பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 10. பாடல்: என்ன சொல்லப் போகிறாய்?

  திரைப்படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

  பாடியவர்: சங்கர் மஹாதேவன்

  இயற்றியவர்: வைரமுத்து

  இசை: ஏ.ஆர். ரஹ்மான்

  ஆண்டு: 1999

  ReplyDelete
 11. சாரூஜி என்ன முன்யோசனையுடன் களைத்துபோய் வருவார்கள் என்று டீயெல்லாம் கூட கொடுத்து அனுப்பி இருக்காங்களே.... டீயை விட பில்டர்காபி சூப்பரா இருக்குமே..

  ReplyDelete
  Replies
  1. happy 23 September 2016 at 22:03

   //சாரூஜி என்ன முன்யோசனையுடன் களைத்துபோய் வருவார்கள் என்று டீயெல்லாம் கூட கொடுத்து அனுப்பி இருக்காங்களே.... டீயை விட பில்டர்காபி சூப்பரா இருக்குமே..//

   போனவர்கள் எல்லோரும் சாயபூஸ் அல்லவா. அவர்களுக்கு ஒருவேளை, காஃபியைவிட டீ தான் பிடிக்குமோ என்னவோன்னு நினைத்திருப்பாள், எங்கட சாரூ.

   நானும் நீயும் போகும்போது, நமக்கு ஸ்ட்ராங் ஃபில்டர் காஃபி மட்டுமே வேண்டும் என முன்கூட்டியே ஸ்ட்ரிக்டாகச் சொல்லிவிடுவோம். :)

   Delete