Tuesday 19 April 2016

thottal poo malarum

6 comments:

  1. படம்: படகோட்டி (1964)
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா
    வரிகள்: வாலி

    ராகம் : சுத்ததன்னியாசி

    ooooooooooooooooooooo

    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான் மலர்வேன்
    சுட்டால் பொன் சிவக்கும்
    சுடாமல் கண் சிவந்தேன்

    தொட்டால்…

    கண்கள் தொடாமல்
    கைகள் படாமல்
    காதல் வருவதில்லை ஹோ!
    காதல் வருவதில்லை

    நேரில் வராமல்
    நெஞ்சை தராமல்
    ஆசை விடுவதில்லை ஹோ!
    ஆசை விடுவதில்லை

    தொட்டால்…

    இருவர் ஒன்றானால்
    ஒருவர் என்றானால்
    இளமை முடிவதில்லை ஹோ!
    இளமை முடிவதில்லை

    எடுத்து கொண்டாலும்
    கொடுத்து சென்றாலும்
    பொழுதும் விடிவதில்லை ஹோய்
    பொழுதும் விடிவதில்லை

    தொட்டால்…

    பக்கம் இல்லாமல்
    பார்த்து செல்லாமல்
    பித்தம் தெளிவதில்லை ஹோய்
    பித்தம் தெளிவதில்லை

    வெட்கம் இல்லாமல்
    வழங்கி செல்லாமல்
    வர்க்கம் தெரிவதில்லை ஹோய்
    வர்க்கம் தெரிவதில்லை

    தொட்டால்…

    பழரச தோட்டம்
    பனிமலர் கூட்டம்
    பாவை முகமல்லவா ஹோ
    பாவை முகமல்லவா

    அழகிய தோள்கள்
    பழகிய நாட்கள்
    ஆயிரம் முகமல்லவா ஹோய்
    ஆயிரம் முகமல்லவா

    ooooooooooooooooooooo

    மிகவும் அருமையான + எனக்குப் பிடித்த பாடல்.

    பாடலை வெளியிட்டு மீண்டும் என்னைக் கேட்கச்செய்த ‘முன்னாக் குட்டி’க்கு என் அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  2. இந்தப்பாடலை ஏனோ என்னால் FULL SOUND இல் கேட்க முடியவில்லை.

    எவ்வளவு அழகான பாடல் வரிகள்.

    முதல் இரண்டு வரிகளிலேயே ஒரு பெண் தான் சொல்ல வேண்டியதை அழகாக குறிப்பாக உணர்த்தி அசத்தி விடுகிறாள் பார்த்தீர்களா?

    அப்படியும் புரியாதவர்களுக்காக ’தொடாமல் நான் மலர்வேன்’ என்ற வரிகளை மட்டும் விளக்கி நான் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். எல்லோரும் அவசியமாகப் படிக்க வேண்டும் - ஜொள்ளிட்டேன் ..... ஸாரி ..... சொல்லிட்டேன்.

    இதோ அதற்கான இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html

    கதையின் தலைப்பு:

    ’ஆப்பிள் கன்னங்களும் .... அபூர்வ எண்ணங்களும்’

    ReplyDelete
  3. பாட்டு மியூஸிக் நல்லா இருக்கு.. கோபால் ஸாரின் முழு பாட்டு பதிவு ப்ளஸ் பாயிண்ட்....

    ReplyDelete
    Replies
    1. //ப்ராப்தம் 20 April 2016 at 05:48
      பாட்டு மியூஸிக் நல்லா இருக்கு.. கோபால் ஸாரின் முழு பாட்டு பதிவு ப்ளஸ் பாயிண்ட்....//

      தேங்க் யூ சாரூஊஊஊஊ. அந்த நான் சொன்ன என் கதையைப் படித்து கருத்து எழுதக்கூடாதாஆஆஆஆ?

      Delete
  4. முன்னா நீ போடுற அல்லா தமிளு பாட்டும் எங்கட குருஜிக்கு புடிச்ச பாட்டா போடுறே... முளுபாட்டும் சொல்லி போடுறாக......

    ReplyDelete
  5. இந்தப்பாட்டும் இன்னொரு பாட்டும் ஸேமா இருக்காப்ல இருக்கே முன்னா.... பட் நல்லா இருக்கு..

    ReplyDelete