Tuesday 12 April 2016

atho antha paravai pola

10 comments:

  1. ரொம்ப நல்ல பாட்டு......

    ReplyDelete
  2. எஸ்.... ரொம்ப நல்ல பாட்டுலா..

    ReplyDelete
  3. இங்கயும் மின்னலு மொத ஆளா.... இந்த பாட்டும் நல்லா இருக்கு........

    ReplyDelete
  4. பாடல்: அதோ அந்தப் பறவை போல
    திரைப்படம்: ஆயிரத்தில் ஒருவன்
    பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    பாடியோர்: : டி.எம். சௌந்தரராஜன், குழுவினர்
    ஆண்டு: 1965

    oooooooooooooooooooo


    அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
    இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

    குழு -

    அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
    இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

    காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
    கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

    குழு - சுடுவதில்லையே

    காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
    காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

    குழு

    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

    அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
    இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

    தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
    சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

    குழு - பேசவில்லையே

    வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
    போகும்போது வேறுபாதை போகவில்லையே

    குழு

    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

    அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
    இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

    கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
    கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை

    அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
    அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

    குழு -

    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

    அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
    இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

    oooooooooooooooooooo


    ReplyDelete
  5. அழகான அர்த்தமுள்ள பாடல்.

    இனிமையான காட்சிகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. காட்சிகளும் பாடலும் ரொம்ப நல்லா இருக்கு.....

    ReplyDelete
  7. பறவையாக பிறந்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம்18 April 2016 at 23:31

      //பறவையாக பிறந்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்....//

      நல்லாத்தான் ஒரே ஜாலியாகத்தான் இருக்கும். கூடவே யாரேனும் கவட்டையால் அடித்து விடுவார்களோ எனக் கவலையாகவும் இருக்குமே !

      Delete
  8. பறவைக்காவது கவட்டை பயம் மட்டும்தானே....... மனிதர்களுக்கு யாரு முதுகில் குத்துவாங்களோன்னு ஒவ்வொரு நொடியும்... பயம்தானே.......

    ReplyDelete