Friday 15 April 2016

poongaatru thirumpuma

8 comments:

  1. பூங்காற்று திரும்புமா என் பாராட்ட விரும்புமா
    தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
    எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

    ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
    ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
    அடுக்குமா சூரியன் கருக்குமா

    என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
    மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல

    இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
    ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

    ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
    சொல்லாத சோகத்த சொன்னேனடி

    சொக ரக சோகந்தானே (2)

    யாரது போரது

    குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

    (பூங்காற்று)

    உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
    நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்

    உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
    எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

    மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
    முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

    எசப் பாட்டு படிச்சேன் நானே

    பூங்குயில் யாரது

    கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

    அடி நீதானா அந்தக் குயில்
    யார் வீட்டு சொந்தக் குயில்
    ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததே ஒலகமே மறந்ததே

    நாந்தானே அந்தக் குயில்
    தானாக வந்தக் குயில்
    ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி

    ReplyDelete
  2. இநு இந்த பாட்டு ஸாஃப்ட் மியுஸிக்... காட்சிகள்... எல்லாமே நல்லா இருக்கு......

    ReplyDelete
  3. மிகவும் அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    அன்புள்ளங்களுக்குள் வயது வித்யாசமே தடை இல்லை எனச் சொல்லும் படமும், பாடலும் இது.

    பலமுறை பார்த்து நான் ரஸித்துள்ள படம் இது.

    இந்தக் கதையை முழுமையாகச் சொல்லக்கூட ஆசைதான் எனக்கு. ஆனாலும் வேண்டாம். :)

    ReplyDelete
  4. பூங்காற்று திரும்புமா என்று தொடங்கும் திரைப்பாடல் பாடல் ’முதல் மரியாதை’ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்றது.

    வைரமுத்து எழுதிய பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மலேசியா வாசுதேவனும், எஸ். ஜானகியும் பின்னணி பாடியுள்ளனர்.

    இப்பாடல், 1984 ஆம் ஆண்டு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய திரைப்பட விருதை வைரமுத்துவுக்குப் பெற்றுத்தந்தது.

    இப்பாடல் கரகரப்பிரியா இராகத்தில் பாடப்பெற்றது.

    ReplyDelete
  5. இங்கூட்டும் ஆருமே இல்ல....பாட்டு நல்லா இருக்குது... ரவிக்க போடாம எப்பூடி நடிக்க முடியுது???????

    ReplyDelete
    Replies
    1. mru 15 April 2016 at 21:21

      //பாட்டு நல்லா இருக்குது...//

      ஆமாம். நல்லாத்தான் இருக்கும்.

      //ரவிக்க போடாம எப்பூடி நடிக்க முடியுது???????//

      சினிமாவில் நடிப்போருக்கு அது என்ன பெரிய கஷ்டமாக்கும்? கேள்வியைப்பாரு ...... ! :) நறுக்குன்னு குட்டணும் போல இருக்குது. :))

      அது ஒரு கிராமத்து சூழ்நிலை கதை. இந்தப்பாடலில் வரும் சிவாஜிக்கும் அந்தக்குட்டிக்கும் சுமார் 30 வயது வித்யாசம் இருக்கும்.

      சிவாஜி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரின் மனைவி அந்தப்படத்தில் ஓர் அரக்கி போல வில்லி. அவருக்கு சற்றும் பொருத்தமில்லாதவள். குடும்ப கெளரவத்தைக் கட்டிக்காப்பதற்காக மட்டுமே, வேறு வழியில்லாமல், சிவாஜி அவளுடன் சேர்ந்து ஒரே வீட்டில், ஊருக்காக கணவன் மனைவி என்ற போர்வையுடன் வாழ நேரிடுகிறது, இருப்பினும் கணவனும் மனைவியும் மனம் கொஞ்சமும் ஒட்டாமல், தினமும் ஓயாமல் சண்டை சச்சரவுகளுடன், ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். அதன் பின்ணனியில் அவர்கள் வாழ்க்கையில் நிறைய சஸ்பென்ஸ் ஒளிந்துள்ளது.

      இந்தப் பாடலில் வரும் இந்தக்குட்டியும் சிவாஜியும் மனதளவில் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்து வாழ்பவர்கள். ஓர் மிகவும் அருமையான காதல் கதை இது. கதையில் நிறைய சஸ்பென்ஸ் உண்டு. அதையெல்லாம் தெரிந்துகொண்டு, படத்தைப் பார்த்தால் சுவாரஸ்யப்படாது. அதனால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

      Delete
  6. பாதி கதய சொல்லிபோட்டு எஸ்கேப் ஆனா எப்பூடி கோபூஜி......

    ReplyDelete
  7. கோபால் ஸார் முழுபாட்டுமே கொடுக்கறாங்க... வெரி நைஸ்

    ReplyDelete