Tuesday, 5 April 2016

poongathave

11 comments:

 1. ஆஹா.... இந்த பாட்டு இப்பதான் கேக்குறேன்......என் பெயர்" பூந்தளிர்" பாக்கும் போதெல்லாம் இந்தப்பாட்டு நினைவில் வருவதாக
  " யாரோ"..... சொல்லி இருக்காங்க.......

  ReplyDelete
 2. வாங்க மேடம்...... இது எந்த " யாரோ"?????)))))

  ReplyDelete
 3. ஆஹா, இது எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். மேலும் மேலும் ஏதாவது சொல்லிக்கொண்டே போனால் சிக்கலில் மாட்டிக்கொள்வேனோ என்று பயமாக உள்ளது.

  நேயர் விருப்பமாக வெளியிட்டுள்ளவர் அதி புத்திசாலியாகத்தான் இருக்க வெண்டும். அவருக்கு என் ஸ்பெஷல் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அந்த மழலை மின்னலு முருகுவாவது வெகுளி + யதார்த்தவாதி.

  இந்த மெஹர் க்கு குறும்பு ஜாஸ்தி என நினைக்கத் தோன்றுகிறது. வாழ்க !

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஓ........ நான் என்ன குறும்பு பண்ணிட்டேன்??????

   Delete
  2. நீங்க செய்துள்ள ’குறும்பு’ எனக்குக் ’கரும்பு’ ஆக இனிக்குது. மிக்க மகிழ்ச்சிம்மா. மிக்க நன்றிம்மா. :)

   Delete
 4. படம் : நிழல்கள்
  இசை : இளையராஜா
  பாடியவர் : தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
  பாடலாசிரியர் : கங்கை அமரன்


  oooooooooooooooooooooooooooooo

  பூங்கதவே தாழ் திறவாய்
  பூங்கதவே தாழ் திறவாய்
  பூவாய் பெண் பாவாய்
  பொன் மாலை சூடிடும்
  பூவாய் பெண் பாவாய்
  பூங்கதவே தாழ் திறவாய்

  நீரோட்டம் போலோடும்
  ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
  ஆகா கா ஆனந்தம்
  ஆடும் நினைவுகள் பூவாகும்
  காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
  காதலில் ஊறிய ராகம்..ம்ம்.

  பூங்கதவே தாழ்..

  திருத் தேகம் எனக்காகும்
  தேனில் நனைந்தது என் உள்ளம்
  பொன்னாரம் பூவாழை
  ஆடும் தோரணம் எங்கெங்கும்
  மாலை சூடும் அந்நேரம்
  மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.

  பூங்கதவே தாழ்...

  oooooooooooooooooooooooooooooo

  ReplyDelete
 5. குருஜி இன்னா சிக்கலுல மாட்டிகிடுவீக?????? வெமங்கலியே.... என்னிய வெகுளின்னு சொல்லினிக அது வெங்கிகிட்டன்.. அதாவது அசட்டு பொண்ணு....... ஓ...கே...வா...... பொறவால யதார்த்தவாதினுபிட்டு இன்னாமோ சொல்லினிக.... வெளங்கலியே........ எனிக்கு வெளங்குரா போல திட்டி போடுக... குருஜி.....

  ReplyDelete
  Replies
  1. mru 6 April 2016 at 00:02

   //குருஜி இன்னா சிக்கலுல மாட்டிகிடுவீக??????
   வெளங்கலியே....//

   நீங்க வெளங்கினாலும் வெளங்காதுபோல நடித்து என் வாயைக் கிளறுவதில் கில்லாடி முருகு :)

   //என்னிய வெகுளின்னு சொல்லினிக அது வெங்கிகிட்டன்.. அதாவது அசட்டு பொண்ணு....... ஓ...கே...வா......//

   நோ .... நோ .... வெகுளி என்றால் மழலை .. குழந்தைபோல என அர்த்தமாக்கும். நீங்க சமத்தோ சமத்தூஊஊஊஊ மட்டுமே. அசட்டுப்பொண்ணுன்னு யாரேனும் சொன்னால் என் கையில் கட்டையை எடுத்துக்கொள்வேனாக்கும். :)

   //பொறவால யதார்த்தவாதினுபிட்டு இன்னாமோ சொல்லினிக.... வெளங்கலியே........//

   யதார்த்தவாதி என்றால் சூது வாது ஏதும் இல்லாமல், வெள்ளந்தியாக மனதில் பட்டதை பட் பட் டெனச் சொல்லி விடுபவள் என்று அர்த்தமாக்கும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நல்லவள் என அர்த்தமாக்கும். :)

   //எனிக்கு வெளங்குரா போல திட்டி போடுக... குருஜி.....//

   இதெல்லாம் திட்டு அல்ல. பாராட்டுகள் மட்டுமே, முருகு. உங்களைப்போய் குருஜி திட்டுவேனா?

   திட்டத்திட்ட திண்டுக்கல், வெய்ய வெய்ய வைரக்கல் எனவும் ஒரு சொலவடை இங்கு எங்கள் பக்கமெல்லாம் சொல்லுவாங்கோ.

   சொலவடை என்பது வேறு ஒரு வடையாக்கும். அந்த ஓட்டையுள்ள அல்லது ஓட்டை போடும் வடை இல்லை. பழமொழி என்று பொருள்.

   மீண்டும் சூடாக மொறு மொறுன்னு ஒரு வடை கிடைக்காதா என்ற ஏக்கம் என்னுள் வந்துவிட்டது. என்னவோ போங்கோ, முருகு. எதுவுமே பிடிக்கவில்லை, இப்போதெல்லாம்.

   அன்புடன் குருஜி

   Delete
  2. இப்பூடியே ஏதாச்சிம் சொல்லிபோட்டு சமாளிக்குறீங்க.....எனிக்கு வெளங்கி கிட ஏலலே......

   Delete
 6. ஒவ்வொருபாட்டோட ஸெலக்ஷனும் சூப்பரூ

  ReplyDelete