Tuesday 26 April 2016

viziye kathai ezuthu

16 comments:

  1. மியூஸிக்...பாடல் வரிகள்... ரொம்ப நல்லா இருக்கு...

    ReplyDelete
  2. பாட்டு ரொம்ப நல்லா இருக்கு முன்னா....

    ReplyDelete
  3. ஏன் முன்னா... ஒனக்கு எம் சி ஆரு ன்னா ரொம்ப இஸ்டமோ..... அந்தாளு பாட்டாவயே போடுறே..... பாட்டு இன்னாவோ நல்லாதா கீது....

    ReplyDelete
  4. பாடல்: விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
    படம்: உரிமைக்குரல்
    இசை: மெல்லிசை மன்னர்
    இயக்கம்: ஸ்ரீதர்
    பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
    வரிகள்: கண்ணதாசன்

    oooooooooooooooooooooo

    விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
    மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
    உனக்காகவே நான் வாழ்கிறேன்

    (விழியே கதை எழுது…)

    மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
    மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
    மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
    வானத்தை யார் மூடக்கூடும்
    உனக்காகவே நான் வாழ்கிறேன்

    (விழியே கதை எழுது…)

    கோவில் பெண் கொண்டது
    தெய்வம் கண் தந்தது
    பூஜை யார் செய்வது – இந்தப்
    பூவை யார் கொள்வது
    ஊமைக்கு வேறேது பாஷை?
    உள்ளத்தில் ஏதேதோ ஆசை
    உனக்காகவே நான் வாழ்கிறேன்

    (விழியே கதை எழுது…)

    தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
    காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
    எண்ணத்தில் என்னென்ன தோற்றம் – என்
    நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
    உனக்காகவே நான் வாழ்கிறேன்

    (விழியே கதை எழுது…)

    oooooooooooooooooooooo

    ReplyDelete
  5. நல்ல அர்த்தம் உள்ள பாடல்.

    இதில் கடைசி வரிகளான ‘உனக்காகவே நான் வாழ்கிறேன்’ என்பது எனக்கு எதை எதையோ நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

    பகிர்வுக்கு நன்றிகள், முன்னாக்குட்டி.

    ReplyDelete
  6. யா...... உனக்காகவே.. ( மட்டுமே)....... நான்... வாழ்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 27 April 2016 at 22:02

      //யா...... உனக்காகவே.. ( மட்டுமே)....... நான்... வாழ்கிறேன்.....//

      யா ..... கிருஷ்ஜி மேலே என்னே ஒரு பிரேம பக்தி .... ஆண்டாள் + மீராபாய் போல ..... தேங்க் யூ டா. :)

      Delete
    2. ஆண்டாள்..... மீரா.... ஓ..கே... ஏன் ராதையை... சொல்லாம விட்டீங்க அவளும் உணமையான அன்புடனும்...
      எந்த எதிர் பார்ப்பும் இல்லாம
      " கிருஷ்" ண பிரேமியா இருந்தவ தானே.........

      Delete
    3. பூந்தளிர் 28 April 2016 at 22:28

      //ஆண்டாள்..... மீரா.... ஓ..கே... ஏன் ராதையை... சொல்லாம விட்டீங்க அவளும் உணமையான அன்புடனும்... எந்த எதிர் பார்ப்பும் இல்லாம
      " கிருஷ்" ண பிரேமியா இருந்தவ தானே.........//

      நீங்க சொல்வது மிகவும் கரெக்ட் ரோஜா டீச்சர்.

      தாங்கள் தான் அந்த ‘ராதை’யாக்கும்.

      ’ராதே உனக்குக் கோபம் ஆகாதடீ ......’ என்ற ஒரு இனிமையான பாடல் உள்ளது. அதை ஒருநாள் முன்னாக்குட்டியை விட்டு வெளியிடச் சொல்கிறேன்.

      அதனால் கோச்சுக்காதே My Dear ராதை :)))))

      Delete
    4. இங்க ராதை.... அங்க ராஜாத்தியா...... இன்னும்..... எவ்வளவு பெயர்கள் ஸ்டாக்ல வச்சிருக்கீங்கப்பா.......

      Delete
    5. பூந்தளிர் 30 April 2016 at 05:58

      //இங்க ராதை.... அங்க ராஜாத்தியா...... இன்னும்..... எவ்வளவு பெயர்கள் ஸ்டாக்ல வச்சிருக்கீங்கப்பா.......//

      அதெல்லாம் நிறையவே ஸ்டாக்கில் இருக்குது. அப்பப்போ மாற்றி மாற்றிக் கொஞ்சிக் கொண்டே இருப்பேனாக்கும்.

      ஒரே பெயரில் அழைத்து வந்தால் அது அவ்வளவு நல்லா இருக்காது. நாளடைவில் அலுத்துப்போகும் அல்லவா, அதனால் மட்டுமே. :)))))

      Delete
  7. இந்த பாட்டும் ரொம்ப நல்லா இருக்கு....

    ReplyDelete
  8. எல்லாரும் வாங்க வாங்க..... கோபூஜி... நீங்க வந்தாதான்.... கலகலப்பா இருக்குதுஜி........

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 27 April 2016 at 23:12

      //எல்லாரும் வாங்க வாங்க..... கோபூஜி... நீங்க வந்தாதான்.... கலகலப்பா இருக்குதுஜி........//

      எனக்கும் தினமும் இங்கு வந்தால்தான் கலகலப்பா மனதுக்கு சற்றே மகிழ்ச்சியா இருக்குது, முன்னா. இருப்பினும் கொஞ்சம் பயமாகவும் உள்ளது. பலரும் கூடும் இடமல்லவா.

      அதனால் பல்லைக்கடித்துக்கொண்டு, பலவற்றை நான் அடக்கி வாசிக்க வேண்டியும் உள்ளது. சுதந்திரமாக என் போக்குப்படி எழுத முடிவது இல்லை.

      புரிந்துகொள்ளுங்கோ, முன்னாக்குட்டி.

      Delete
  9. இங்கூட்டு ஆரது பலரும் கூட்டம் போடுறாக குருஜி.. நாம 5--- பேரு மட்டிலும்தானே.. அலப்பர பண்ணிபோட்டுகிட்டு இருக்கோம் சும்மா பயந்துகிடல்லா வாணா... வெளங்குதா......

    ReplyDelete
    Replies
    1. mru 30 April 2016 at 00:40
      இங்கூட்டு ஆரது பலரும் கூட்டம் போடுறாக குருஜி.. நாம 5--- பேரு மட்டிலும்தானே.. அலப்பர பண்ணிபோட்டுகிட்டு இருக்கோம் சும்மா பயந்துகிடல்லா வாணா... வெளங்குதா......//

      ஓரளவுக்கு வெளங்குது. இப்போதைக்கு (இப்.... போதைக்கு) நாம் ஐவர் மட்டும்தான் இருக்கோம். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், புதிதாக இங்கு முளைக்கலாம். அதனால் நமக்குள் ஏதும் பிரச்சனை உருவாகலாம்... டா, முருகு. இது உனக்கு வெளங்குதா ?

      Delete