Sunday 10 April 2016

unnai naan santhithen

8 comments:

  1. உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
    உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
    என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
    ஆலயத்தின் இறைவன்
    உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்

    பொன்னைத்தான் உடல் என்பேன் சிறு
    பிள்ளை போல் மனம் என்பேன்
    பொன்னைத்தான் உடல் என்பேன் சிறு
    பிள்ளை போல் மனம் என்பேன்
    கண்களால் உன்னை மணந்தேன் தொட்ட
    கைகளால் நான் மலர்ந்தேன்
    உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்

    உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்

    எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன் ஒரு
    கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
    எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன் ஒரு
    கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
    சொல்லத்தான் அன்று துடித்தேன் வந்த
    நாணத்தால் அதை மறைத்தேன்
    மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்

    உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
    என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
    ஆலயத்தின் இறைவன்

    உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்

    ReplyDelete
  2. பாடல்: உன்னை நான் சந்தித்தேன்
    திரைப்படம்: ஆயிரத்தில் ஒருவன்
    பாடலாசிரியர்: கவிஞர் வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    பாடியோர்: : பி. சுசீலா
    படம் வெளிவந்த ஆண்டு: 1965

    ReplyDelete
  3. பெண் ஒருத்தி தன் மனதில் உள்ள ஏக்கங்களையெல்லாம் குழைத்து அழகாக அர்த்தத்துடன் பாடும் இனிமையான பாடல்.

    வழக்கம்போல நம் கண்களுக்கு ஜில்லென குளு குளுப்பான காட்சிகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. வாங்க கோபூஜி.......பாடலை ரசித்ததற்கு நன்றிகள்....

    ReplyDelete
  5. இது கோட நல்ல பாட்டுதா.......

    ReplyDelete
  6. இது என்ன முன்னா.... புதுசா கோபூஜி????? ஒருத்தி குருஜி..... நீ கோபூஜியா.... நான் இதல்லாம் பாத்துட்டு சும்மா இருக்கணுமா. நீங்க இருவரும் அவங்க பெயரை ஆளாளுக்கு பாதி பாதியா பிச்சு தின்னுறீங்க.. நானும் ஒரு புது பெயர ஸெலக்ட் பண்ணி வச்சிட்டேனே............

    ReplyDelete
  7. முன்னா.... நானும்..... கோபால்ஜி.....னு பேனு ஸெலக்ட் பண்ணிட்டேனே.....

    ReplyDelete