Saturday 23 April 2016

solladi abirami................(sivakami).......

Song: sollati apiraami - பாடல்: சொல்லடி அபிராமி
Movie: Athi parasakthi - திரைப்படம்: ஆதி பராசக்தி
Singers: - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1971
மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே
சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே - முழு
நிலவினைக் காட்டு உன் கண்ணாலே
சொல்லடி அபிராமி
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ?
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - இந்த
சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ?
சொல்லடி அபிராமி
வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
வாராயோ அருள் மழை தாராயோ?
வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
வாராயோ அருள் மழை தாராயோ?
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
நடுவில் நின்றாடும் வடிவழகே
கொடிகளாட முடிகளாட குடிபடை
எழுந்தாட வரும் கலையழகே
பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
கொட்டி வர மத்தளமும் சத்தமிட
வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென
வாராயோ அருள் மழை தாராயோ?
செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
ஜெயம் ஜெயம் என்றாட - இடை
சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனமென்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ
காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்
கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
வாழிய மகன் இவன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

Read more at http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/aathi-parasakthi/solladi-abirami.php#G4jdzcUvf3shDy6R.99

11 comments:

  1. இந்த பாட்டுக்கு நானே முழு பாட்டும் வரிகளில் போட நினைத்தேன்... கோபூஜிக்கு பின்னூட்டம் போடும் சிரமம் மட்டும் போதும் பாட்டோட முழு அர்த்தமும் தேடிபிடிச்சு போட அவங்க சிரமப்பட வேணாம்னு நானே ட்ரை பண்ணினேன்... ரெண்டு மூணு பாட்டு ஆடியோ.... வீடியோ... சரியா வந்திச்சு.... பாக்கிலாம் சொதப்பிகிச்சு.... வாட்....டு....டூ...?????????

    ReplyDelete
  2. பாடல்: சொல்லடி அபிராமி
    திரைப்படம்: ஆதி பராசக்தி
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: கே.வி. மஹாதேவன்
    ஆண்டு: 1971

    ooooooooooooooo

    மணியே மணியின் ஒளியே
    ஒளிரும் அணிபுனைந்த வணியே

    அணியும் அணிக்கழகே
    அணுகாதவர்க்குப் பிணியே

    பிணிக்கு மருந்தே
    அமரர் பெரும் விருந்தே

    பணியேன் ஒருவரை நின்
    பத்மபாதம் பணிந்த பின்னே

    சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில்
    சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?

    பதில் சொல்லடி அபிராமி வானில்
    சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
    பதில் சொல்லடி அபிராமி

    நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே - முழு
    நிலவினைக் காட்டு உன் கண்ணாலே

    சொல்லடி அபிராமி

    பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
    படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ?

    பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
    படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ? - நீ

    சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - நீ
    சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - இந்த
    சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ?

    சொல்லடி அபிராமி

    வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
    வாராயோ அருள் மழை தாராயோ?

    வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
    வாராயோ அருள் மழை தாராயோ?

    வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
    நடுவில் நின்றாடும் வடிவழகே

    கொடிகளாட முடிகளாட குடிபடை
    எழுந்தாட வரும் கலையழகே

    பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
    கொட்டி வர மத்தளமும் சத்தமிட

    வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென
    வாராயோ அருள் மழை தாராயோ?

    செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
    ஜெயம் ஜெயம் என்றாட - இடை

    சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
    தண்டை கலந்தாட - இரு

    கொங்கை கொடும்பகை வென்றனமென்று
    குழைந்து குழைந்தாட - மலர்ப்

    பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
    நிலவு எழுந்தாட

    விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
    கனிந்து வாராயோ

    காளி பயங்கரி சூலி மதாங்கினி
    கண்களில் தெரிகின்றாள்

    கண்கள் சிவந்திடும் வண்ணம்
    எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்

    வாழிய மகன் இவன் வாழிய என்றொரு
    வாழ்த்தும் சொல்கின்றாள்

    வானகம் வையகம் எங்கணுமே
    ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்

    அன்னை தெரிகின்றாள்
    என் அம்மை தெரிகின்றாள்

    அன்னை தெரிகின்றாள்
    என் அம்மை தெரிகின்றாள்

    ஓம் சக்தி ஓம் சக்தி
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

    ooooooooooooooo

    இதில் ’அபிராமி’ என்று வரும் இடங்களிலெல்லாம் ’சிவகாமி’ என மாற்றிக்கொள்ளுங்கோ .... டீச்சர். :)))))

    ReplyDelete
  3. என் நேயர் விருப்பமாக இந்தப்பாடலைப் போட்டு இன்று வெளியிட்ட முன்னாக்குட்டிக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  4. இந்தப்பாடலுக்கான கதையை இங்கு நான் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.

    முன்னாக்குட்டி, முருகுக்குட்டி, சாரூஊஊஊ க்குட்டி முதலியவர்களும், முக்கியமாக எங்கட டீச்சரம்மாவும் உன்னிப்பாகக் கேட்டுக்கொள்ளவும்.

    கதை தொடரப்போகிறது. எல்லோருடைய காதுகளும் என் வாய் அருகில் நெருங்கி இருக்கட்டும். நான் ஒன்றும் உங்கள் காதைக்கடித்துவிட மாட்டேன். கம்மல்களைக் கழட்டி விட மாட்டேன். அதனால் கவலையே வேண்டாம். >>>>>

    ReplyDelete
  5. என்னைப்போல ஓர் அப்பாவி அம்பாள் பக்தன்.

    அபிராமி-சிவகாமியிடம் அபாரமான அஸாத்ய பக்தி கொண்டவன்.

    எப்போதும் ஒரு அம்பாள் கோயில் சந்நதிக்கு எதிரே (சிவன் கோயில் நந்திபோல) அமர்ந்திருப்பான். அம்பாள் மேல் ஏதாவது பக்திப்பாடல்கள் பாடிக்கொண்டே இருப்பான் .... அல்லது கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்துகொண்டே இருப்பான்.

    அவனைப்பற்றி அங்குள்ள எல்லாப் பொது ஜனங்களுக்கும், பக்தர்களுக்கும் ஓரளவு நன்றாகவே தெரியும் ..... அவன் ஒரு அபிராமி/சிவகாமி பித்தன் என்று.

    ஒருநாள் அந்த அம்பாளை தரிஸிக்க அந்த ஊர் ராஜா தன் பரிவாரங்களுடன் அந்த குறிப்பிட்ட அம்பாள் கோயிலுக்கு விஜயம் செய்கிறார். இந்த அபிராமி பட்டர் (பித்தன்) அங்கு அம்பாள் எதிரில் தியானத்தில் அமர்ந்திருக்கிறான். அவனை ராஜா வருகைக்காக அப்புறப்படுத்த நினைத்தும் யாராலும் அது முடியவே இல்லை. சரி என்று கடைசியில் அவனை அப்படியே விட்டு விடுகிறார்கள். ராஜாவும் கோயிலுக்கு உள்ளே வந்து விட்டார்.

    ”இவன் யார்?” என்று அங்குள்ளோரிடம் கோபமாகக் கேட்கிறார் ராஜா.

    ”அவன் ஒரு பைத்தியம், பித்தன். ஏதாவது அம்பாள் மேல் பாடிக்கொண்டே இருப்பான் ... அல்லது கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருப்பான்” எனச் சொல்லி விடுகிறார்கள் எல்லோரும்.

    அவனை ஏன் இங்கிருந்து துரத்தவில்லை என ராஜா மிகவும் கோபப்படுகிறார். அவனை எங்களால் துரத்தி விட இயலவில்லை என அனைவரும் ராஜாவிடம் பயந்துகொண்டே பெளவ்யமாக விளக்கிச் சொல்கிறார்கள்.

    அன்று அமாவாசை தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜா அவன் தோளைத்தட்டி அவன் தியானத்தைக் கலைத்து விட்டு, ”இன்று என்ன திதி என்று உன்னால் சொல்லமுடியுமா?” எனக் கேட்கிறார்.

    ஒரு நிமிடம் கண் திறந்த அவன் இன்று ”பெளர்ணமி திதி.....டா” என சர்வ அலட்சியமாகக் கூறிவிட்டு, கண்களை மூடிக்கொண்டு, மீண்டும் தன் தியானத்தினைத் தொடர்கிறான்.

    முழு அமாவாசையான அன்று பெளர்ணமி நிலவு எப்படித் தோன்றும்?

    தன்னை அலட்சியப்படுத்திய, திமிர் பிடித்த அவனைக் கட்டிக்கொண்டு போய் தண்டனை கொடுக்க ஏற்பாடுகள் ஆகின்றன, ராஜாவின் உத்தரவின் பேரில்.

    அதாவது அன்று இரவு முழுவதும் அவனை ஓர் தொங்கும் ஊஞ்சலில் நிற்க வைக்கிறார்கள்.

    அமாவாசை இரவினில் அவன் சொன்னபடி பெளர்ணமி நிலவு அன்று தோன்ற வேண்டும். இல்லையேல் அன்று இரவு முடியும் முன்பு ஊஞ்சலுக்குக்கீழே எரியும் மிகப்பெரிய நெருப்பினில் அவனை ஊஞ்சலோடு சேர்த்து இறக்கித் தள்ளி விட்டு விடுவார்கள். இதுவே ராஜா அவனுக்கு இட்டுள்ள மிகப்பெரிய தண்டனை.

    ராஜாவும் மற்ற பொது ஜனங்களும் இதனை வேடிக்கை பார்க்க இரவில் அங்கு கூடி விடுகிறார்கள்.

    அப்போதுதான் அந்த சிவகாமி பக்தன் இந்த உருக்கமான பாடலைப் பாடுகிறான்.

    அனைவரும் மீண்டும் பாடலை ஒருமுறை போட்டுக்கேளுங்கோ.

    கீழே நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. அந்தரத்தில் அவன் தொங்கிக்கொண்டு இருக்கிறான். வாழ்வா சாவா என்ற பிரச்சனை பாவம் அவனுக்கு.

    ’தான் எப்படி அமாவாசையான இன்று பெளர்ணமி திதி என்று ராஜாவிடம் சொன்னோம் என்பதே அவனுக்குப் புரியவில்லை.’ அம்பாள் தான் தன்னை அதுபோலச் சொல்ல வைத்து இருக்கிறாள் என நினைத்துக்கொள்கிறேன். அவளை சரணம் அடைந்து தன்னைக் காப்பாற்றுமாறு கதறுகிறான் ..... அப்போது உருக்கமாக இந்தப்பாட்டினைப் பாடுகிறான்.

    பாட்டின் முடிவு வரிகளில், அவனுக்கு சிவகாமி அம்பாள் வானத்தில் காட்சியளிக்கிறாள். அது மட்டுமல்ல, தன் பக்தனைக் காப்பாற்றி, அவன் பக்தியை உலகறியச் செய்யவும் அவள் சித்தமாகிறாள்.

    அம்பாள் தனது காதினில் உள்ள தாடங்கங்களில் (காதுத்தோடு) ஒன்றினை கழட்டி ஆகாயத்தில் வீசுகிறாள். அது அப்படியே முழு நிலவாக மாறி வானத்தில் ஜொலிக்கிறது.

    ராஜா உள்பட அனைத்து பொதுஜனங்களும் அந்த அபிராமி பட்டரின் பெருமையை உணர்ந்துகொள்கிறார்கள். அவரை விடுதலைசெய்து. அவர் காலில் விழுந்து, மன்னிப்புக் கேட்கிறார்கள்.

    இந்தக் காட்சிகளை ‘ஆதி பராசக்தி’ என்ற அந்த முழுப்படத்தில் பார்த்தால்தான் ஜோராக இருக்கும்.

    அந்த அபிராமி பட்டர் போலவே நான் இன்று சிவகாமி பக்தனாக (பித்தனாக) உள்ளேன். என்றாவது ஒருநாள் என் சிவகாமி எனக்கும் அருள் புரிவாளா? என எனக்குத் தெரியவில்லையே, டீச்சர்.

    ReplyDelete
  6. பாட்டு நல்லாதான் இருக்கு..... .. அதென்ன.... அபிராமி....... சிவகாமினெல்லாம் போட்டிருக்கே???????....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 23 April 2016 at 20:04
      பாட்டு நல்லாதான் இருக்கு..... .. அதென்ன.... அபிராமி....... சிவகாமினெல்லாம் போட்டிருக்கே???????....//

      அபிராமி, சிவகாமி, கோமதி, இராஜராஜேஸ்வரி, சாரதா, ஆனந்தவல்லி, அகிலாண்டேஸ்வரி போன்ற அனைத்துமே பார்வதி தேவியான அம்பாளின் திருநாமங்கள் ..... அதாவது பெயர்கள்.

      இவை அனைத்தும் என்னால் வாழ்க்கையில் என்றும் மறக்கவே முடியாத சூப்பர் பெயர்களும்கூட.

      போதுமாடா? :))))))

      Delete
  7. அப்பாடா.... என்ன அழகா முழு கதையும் சொல்லிட்டீங்க. சூப்பரா இருக்கு...பாட்டு கூட ஆவேசமா கோவமா பாடுறாப்ல இருக்குது....

    ReplyDelete
  8. இது இன்னா பாட்டு முன்னா..... அந்த ஆளு மேல சட்டடையே போட்டுகிடாத கோவமா பாடுறாக.... குருஜி கதை சொல்லின பொறவால கோட... எனக்கு புடிகல..... அமாசிய ஏதுக்கா பவுரணினு சொல்லிகோணும்......

    ReplyDelete
    Replies
    1. mru 23 April 2016 at 20:36

      //அந்த ஆளு மேல சட்டடையே போட்டுகிடாத//

      தீவிர அம்பாள் பக்தன் என்றால் மேல் சட்டை, பனியன், குல்லா, ஜட்டி, ஸாக்ஸ், ஷூ, செருப்பு என எதுவுமே போட மாட்டானாக்கும். அவன் மிகவும் ஜாலியாக ஃப்ரீயாகவே பிறந்த மேனிக்கு இருக்கத்தான் விரும்புவான். :)

      03.07.2016 க்குப் பிறகுதான் இதனை முருகுவும் ஒத்துக்கொள்வாள் என எனக்குத் தோன்றுகிறது. :)

      //கோவமா பாடுறாக.... குருஜி கதை சொல்லின பொறவால கோட... எனக்கு புடிகல.....//

      முருகுவுக்கு இதெல்லாம் இப்போது புடிக்காதுதான் என குருஜிக்கும் தெரியுமாக்கும்.

      //அமாசிய ஏதுக்கா பவுரணினு சொல்லிகோணும்......//

      அவனா சொன்னான்? அவனை அவ்வாறு சொல்ல வைத்தவள் அந்த அபிராமி-சிவகாமி அம்பாள் மட்டுமே. தன் பக்தனை உலகுக்கு அடையாளம் காட்ட அவள் செய்த லீலை இது. இதெல்லாம் முருகுவுக்குத் தெரிய நியாயமே இல்லை.

      எங்கட நம்மாளு ரோஜா டீச்சருக்குப் புரிந்தால் போதும். :)

      Delete
  9. ஓ.... என்கு முன்பே எல்லாரும் வந்தாச்சா..... அபிராமி பட்டர் கதை பாலகுமாரன் கண்ணோட்டத்தில் வேறவிதமாக எழுதி இருந்தார்.... அது படிச்சிருக்கேன்.. பாட்டு ஆவேசமாதான் இருக்கை....

    ReplyDelete