Wednesday 13 April 2016

poo maalaiyil or mallihai

7 comments:

  1. படம்: ஊட்டி வரை உறவு
    பாடல்: பூ மாலையில்
    பாடியவர்கள்:T.M. சௌந்தரராஜன் & P.சுசீலா
    இசை: M.S. விஸ்வனாதன்
    பாடல் வரிகள்: கண்ணதாசன்

    oooooooooooooooooooooooooooooo

    ஆ ஆ ஆ...

    ஆ ஆ ஆ...

    பூ மாலையில் ஓர் மல்லிகை
    இங்கு நாந்தான் தேன் என்றது

    உந்தன் வீடு தேடி வந்தது
    இன்னும் வேண்டுமா என்றது

    சிந்தும் தேந்துளி .......
    இதழ்களின் ஓரம்...ஆ ஆ ஆ...

    சென்றேன் .......
    ஆயிரம் நினைவுகள் ஓடும்...ஆ ஆ ஆ...

    சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்
    சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

    கரும்போ கனியோ ......
    கவிதைச் சுவையோ (2)

    விருந்தோ கொடுத்தான்
    விழுந்தாள் மடியில் (2)

    (பூ மாலையில்)

    மஞ்சம் மலர்களைத்
    தூவிய கோலம்...ஆ ஆ ஆ...

    மங்கல தீபத்தின்
    பொன்னொளிச் சாரம்...ஆ ஆ ஆ...

    இளமை அழகின் இயற்கை வடிவம்

    இரவைப் பகலாய் அறியும் பருவம்

    (பூ மாலையில்)

    ReplyDelete
  2. இந்தப்படம் 1966-இல் வெளிவந்தது. அப்போது எனக்கு ஸ்வீட் சிக்ஸ்டீன் வயது. இந்தப்படத்தை நான் தியேட்டரில் பலமுறை பார்த்துள்ளேன். இதில் வரும் அனைத்துப் பாடல்களும் மிக அருமையாகவும் இனிமையாகவும் இருக்கும்.

    முதல் பாட்டு :

    தேடினேன் ... வந்தது ...
    நாடினேன் தந்தது ...
    வாசலில் நின்றது ...
    வாழ வா என்றது ...

    K.R. VIJAYA சூப்பராக ஓர் டான்ஸ் ஆடுவா, அந்த முதல் பாட்டில். அவளுக்கும் அப்போது ஸ்வீட் சிக்ஸ்டீன் வயசுதான் இருக்கும்.

    பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. செம்ம.... ரசிகர் தான் நீங்க........

    ReplyDelete
  4. ரொம்ப நல்ல பாட்டு. ஸாஃப்ட் ம்யுஸிக் புரியும்படியான அழகான வார்த்தைகள்....

    ReplyDelete
  5. இந்த பாட்டும் நல்லா இருக்கு....

    ReplyDelete
  6. 16---- வயசிலயே இதெல்லா ரசிச்சு போட்டீகளா... ஆத்தாடியோ..........

    ReplyDelete
  7. இந்த பாட்டு கேட்டிருக்கேன்... நல்லா இருக்கு....

    ReplyDelete