Thursday 21 April 2016

paattukku paateduthu

5 comments:

  1. பாடல்: பாட்டுக்குப் பாட்டெடுத்து
    படம் : படகோட்டி (1964)
    பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
    இயற்றியவர் : வாலிபக் கவிஞர் வாலி
    இசை : மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.இராமமூர்த்தி


    oooooooooooooooooooooo

    பாட்டுக்குப் பாட்டெடுத்து
    நான் பாடுவதைக் கேட்டாயோ?
    துள்ளி விழும் வெள்ளலையே
    நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ?
    பாட்டுக்குப் பாட்டெடுத்து
    நான் பாடுவதைக் கேட்டாயோ?
    துள்ளி விழும் வெள்ளலையே
    நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ?
    கொத்தும் கிளி இங்கிருக்க
    கோவைப் பழம் அங்கிருக்க
    கொத்தும் கிளி இங்கிருக்க..ஹோய்..
    கோவைப் பழம் அங்கிருக்க
    தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
    தூது சொல்ல மாட்டாயோ?
    தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
    தூது சொல்ல மாட்டாயோ?
    கொத்தும் கிளி இங்கிருக்க
    கோவைப் பழம் அங்கிருக்க..ஹோய்..
    தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
    தூது சொல்ல மாட்டாயோ?
    இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
    இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
    இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான்
    ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டுப் போனானே
    ஓடம் விட்டுப் போனானே..
    ஹோய்..ஹோய்..ஓடம் விட்டுப் போனானே
    ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
    ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு
    மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
    பின்னலாய் ஜடைப் போட்டு என் மனச எடைப் போட்டு
    மீன் புடிக்க வந்தவளே நான் புடிக்கப் போனேனே
    மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே
    ஆசைக்கு ஆசை வச்சேன்
    நான் அப்புறந்தான் காதலிச்சேன்..ஹோய்..
    ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு
    வாழைப்பூத் திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
    ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
    ஏத்தி வச்ச கைகளிலே என் மனசை நான் கொடுத்தேன்
    நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
    நான் மட்டும் இங்கிருக்க...ஓ..ஓ..நான் மட்டும் இங்கிருக்க
    தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
    சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ?
    பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ?
    சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ?
    பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ?
    ஓ..ஓ..ஓ....

    oooooooooooooooooooooo

    ReplyDelete
  2. அழகான அர்த்தமுள்ள இனிய பாடல். காட்சிகளும் குளுமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. இதேபோல ஒரு பாட்டு போட்டுபிட்டல்லா... முன்னா....... தொட்டால் பூமலரும்........

    ReplyDelete
  4. பாட்டும் மயுசிக்கும் நல்லா இருக்கு..... வார்த்தைகள் ”யாரோ” வந்து சொன்னா தான் புரிஞ்சிக்க முடியும்

    ReplyDelete
  5. அதான் கோபால்ஜி... முழு பாட்டுமே சொல்லிட்டாங்களே.......

    ReplyDelete