Monday 18 April 2016

kannum kannum kalanthu

19 comments:

  1. Song: kannum kannum kalandhu -
    பாடல்: கண்ணும் கண்ணும் கலந்து
    Movie: VAnjikottai valiban -
    திரைப்படம்: வஞ்சிக்கோட்டை வாலிபன்
    Singers: P. Leela, Jikki -
    பாடியவர்: பி. லீலா, ஜிக்கி
    Lyrics: Kothamangalam Subbu -
    இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
    Music: C. Ramachandra -
    இசை: சி. ராமச்சந்திரா
    Year: - ஆண்டு: 1958
    
    oooooooooo

    ஏனோ இன்பமே புதுமையாய்க் காண்பதேன்
    காதல் என்பது இது தானோ இது தானோ அறியேனே

    கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
    எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
    கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
    எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
    கன்னியென்றேனடி கைகளைப் பிடித்தான்
    காதலியென்றென்னை கொஞ்சியே அழைத்தான்
    கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
    எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே

    (சபாஷ் சரியான போட்டி)

    ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
    கலகலகலகலவென்று ஜோராய் கையில் வளைவீசும் பாராய்
    ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
    கலகலகலகலவென்று ஜோராய் கையில் வளைவீசும் பாராய்
    ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி
    ஆடுவேன் பாரடி இனி அனைவரும் மயங்கிட
    ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
    கலகலகலகலவென்று ஜோராய் கையில் வளைவீசும் பாராய்

    ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
    அன்பின் பாதையில் அணையிடலாமோ?
    ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
    அன்பின் பாதையில் அணையிடலாமோ?
    பேதைமையாலே மாது இப்போதே
    காதலை வென்றிட கனவு காணாதே

    சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி
    சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி
    நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
    நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி

    ஆடுமயில் எந்தன் முன்னே என்ன
    ஆணவத்தில் வந்தாயோடி?
    பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
    படமெடுத்து ஆடாதேடி நீ படமெடுத்து ஆடாதேடி

    இன்னொருத்தி நிகராகுமோ? எனக்
    கின்னொருத்தி நிகராகுமோ?
    இடி இடித்தால் மழையாகுமோ? பேதைப்பெண்ணே
    இன்னொருத்தி நிகராகுமோ?
    மின்னலுக்கு அஞ்சேனடி வீண்வாதமென்ன
    முன்னேவந்து நீ ஆடடி - இந்த
    மின்னலுக்கு அஞ்சேனடி வீண்வாதமென்ன
    முன்னேவந்து நீ ஆடடி

    oooooooooo

    அருமையான பாடல்.

    சரியான போட்டி.

    ரோஜா டீச்சருக்கும், மின்னலு முருகுவுக்கும் போல. :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. குருஜி... பாட்டுக்கு அர்த்தமெல்லா சொல்லினிக..... ஓ..கே.. எனிக்கும்.... டீச்சரம்மாவுக்கும் என்ன போட்டி எதுக்காவ போட்டி..... சிண்டு முடிக்குறீங்க குருஜி..... அந்த ரெண்டு பேரும் சூப்பரா டான்ஸு ஆடிபோட்டாக... ஆனா ப்ளாக்& ஒயிட்ல வாராகளே......

      Delete
  2. கோபூஜி.....உங்க ரசனையே சூப்பருங்கோ.......

    ReplyDelete
  3. முழு பாட்டும் அர்த்தம் தெரிந்து கேட்கும்போது நன்கு ரசிக்க முடிகிறது... அவருக்கு நன்றாக எல்லாம் தெரிகிறது.......நன்றி..... கடைசில ஏன்......மின்னலுக்கும்.... ரோஜா வுக்கும்... போட்டி என்று..... வம்புக்கு அலையணும்...... முருகு.... உனக்கும்.... என்கும் எதில் போட்டி..... உன் குருஜி சொல்லி இருப்பதற்கு நீயே வந்து கார சாரமா பதில் சொல்லு......

    ReplyDelete
  4. அவ வந்துட்டா டீச்சரம்மா....

    ReplyDelete
    Replies
    1. இன்று முதல் முறையாக உங்க பக்கம் வரேன்... காரணம் நம் அன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய திரு கோபால் ஸார் அவர்கள்தான்.... எனக்கு தமிழ்... ஹிந்தி பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும்னு சொன்னதும் உங்க லிங்க் அனுப்பினாங்க.... சூப்பர் ஸாங்க் எல்லாம் கேட்க நல்ல வாய்ப்பு. இனி அடிக்கடி என்னை இங்கே சந்திக்கலாம்........

      Delete
    2. ப்ராப்தம் 18 April 2016 at 23:10

      வாங்கோ சாரூ ..... வணக்கம்மா.

      //இன்று முதல் முறையாக உங்க பக்கம் வரேன்... காரணம் நம் அன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய திரு கோபால் ஸார் அவர்கள்தான்.... எனக்கு தமிழ்... ஹிந்தி பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும்னு சொன்னதும் உங்க லிங்க் அனுப்பினாங்க.... சூப்பர் ஸாங்க் எல்லாம் கேட்க நல்ல வாய்ப்பு. இனி அடிக்கடி என்னை இங்கே சந்திக்கலாம்........//

      ஆஹா, அடிக்கடி ‘ப்ராப்தம்’ அவர்களை இங்கு நான் சந்திக்கப் ப்ராப்தம் அமையப்போவதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

      எங்கட ரோஜா டீச்சரும் நீங்களும் வட இந்திய மொழிகள் பலவற்றிலும் எக்ஸ்பர்ட் என்பதை அறிய எனக்கு மேலும் மகிழ்ச்சியே.

      வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      WELCOME CHAAROO - அன்புடன் கோபு :)))))))))))))

      Delete
  5. ப்ராபதம் மேடம் வாங்க... கோபூஜி தயவுல எனக்கும் நிறய ஃப்ரெண்ட்ல்லாம் கிடைக்குறாங்க... என் கமெண்ட்ஸ் பாக்ஸும் கலகலப்பா ஆயிடிச்சி.. தாங்க்ஸ் கோபூஜி....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 19 April 2016 at 05:15

      //ப்ராப்தம் மேடம் வாங்க... கோபூஜி தயவுல எனக்கும் நிறய ஃப்ரெண்ட்ல்லாம் கிடைக்குறாங்க... என் கமெண்ட்ஸ் பாக்ஸும் கலகலப்பா ஆயிடிச்சி.. தாங்க்ஸ் கோபூஜி....//

      எங்கட நம்மாளு ரோஜா டீச்சரும், இவங்களும் ஒரே மாநிலத்தில்தான் ஆனால் வெவ்வேறு ஊர்களில் இருக்காங்க.
      இருவர் ஊர்களும் பக்கம்தான். இரயிலில் போனால் 2 மணி நேரப்பயணம்தான்.

      இவங்களும் அவங்கள மாதிரியே தங்கமானவங்கதான். :) இருவருமே பல மொழிகள் தெரிந்தவங்க :))

      ஆனாக்க எங்கட ரோஜா டீச்சர் அளவுக்கு இன்னும் இவங்களிடம் எனக்கு அதிகமாகப் பழக்கம் + பரிச்சயம் ஆகவில்லை.

      உங்களைப்போலவே A Good Friend & My Well Wisher. அவ்வளவுதான், முன்னா. :)

      இவங்களையும் நாம் ’மேடம்’ என்றெல்லாம் அழைக்க வேண்டாம். ப்ராப்தம் என்றே சொல்லுங்கோ போதும்.

      நான் மட்டும் ’சாரூ’ CHAROO என்று செல்லமாக அழைக்க PERMISSION வாங்கியுள்ளேன். :)

      Delete
    2. எப்டி எப்டி ஆனாக்க எங்கட ரோஜா டீச்சர் அளவுக்கு இன்னும் இவங்களிடம் எனக்கு அதிகமாகப் பழக்கம் + பரிச்சயம் ஆகவில்லை. அப்படியா??? (ரோஜா டீச்சர் அள்வுக்கு வேறு யாரிடமும் பழக்கம் ஆகக்கூடாதே.........)

      Delete
    3. பூந்தளிர் 22 April 2016 at 05:03

      (ரோஜா டீச்சர் அளவுக்கு வேறு யாரிடமும் பழக்கம் ஆகக்கூடாதே.........)

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அதெல்லாம் அப்படியெல்லாம் ஆக சான்ஸே இல்லை.

      DON'T WORRY DEAR ......

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/04/unakum-enakumthan-poruththam.html

      தினமும் ஒருமுறை இந்த என் நேயர் விருப்பப்பாடலை கேண்டுக்கொண்டே இரு. ( உனக்கும் எனக்கும்தான் பொருத்தம் ....... )

      அப்போதுதான் இதுபோன்ற அனாவஸ்யமான சந்தேகங்களெல்லாம் வரவே வராது. :))))))

      OK .... Bye for now !

      Delete
  6. இன்று 19.04.2016 செவ்வாய்க்கிழமை நம் மின்னலு முருகுவுக்கு பிறந்தநாள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    எல்லோரும் ‘மின்னலு முருகு’வை நன்றாக வாழ்த்துங்கோ.

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ..... மின்னலு முருகு. நலமுடனும், வளமுடனும், வம்புடனும் பல்லாண்டு வாழ்க! :)

    அன்புடன் குருஜி.

    ReplyDelete
    Replies
    1. கோபூஜி.... ஆனாலும் நீங்க..... வாழ்த்தும்போதுகூட.... வம்புடன்...... என்று வாழ்த்துறீங்களே......

      Delete
    2. //சிப்பிக்குள் முத்து.19 April 2016 at 21:17
      கோபூஜி.... ஆனாலும் நீங்க..... வாழ்த்தும்போதுகூட.... வம்புடன்...... என்று வாழ்த்துறீங்களே......//

      அவள் மிகவும் வம்புக்காரி ஆச்சே!

      வம்பு = மின்னலு முருகு; மின்னலு முருகு = வம்பு
      என்று நீங்கள் பலரும் என்னிடம் புகார் அளித்துள்ளீர்களே!

      ’வம்பு’தான் அவளின் பலமே ஆகும். ’வம்பு’ மட்டும் அவளிடம் இல்லாவிட்டால் இந்த அளவுக்கு அவள் நம் எல்லோரிடமும் புகழ் பெற்றிருக்க முடியாது.

      பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என ஆகியிருப்பாள்.

      அவள் எனக்கு கொச்சைத் தமிழில் எழுதியிருந்த ’நேயர் கடிதம்’ தான் அவளை அனைவருக்குமே தனி அடையாளம் காட்டி சிறப்பித்து பேரும் புகழும் அவளுக்குப் பெற்றுத்தந்தது. அதற்கான இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html

      அதிலுள்ள மொத்த கமெண்ட்ஸ் எண்ணிக்கை: 133

      படிச்சுப்பாருங்கோ !

      கொஞ்சம் வம்பானவள் என்றாலும் என்னிடம் மிகவும் அன்பானவள் மட்டுமே. வாழ்க அந்த வம்புக்காரி .... மின்னலு முருகுப்பொண்ணு.

      Delete
    3. குருஜி ஆனாகூடி இன்னா அக்குறும்பு ஒங்களுக்கு....... பச்ச புள்ளய கிள்ளி விட்டுபோட்டு தொட்டிலயும் ஆட்டுறீங்களே...எங்கட பர்த்டே இங்குட்டு ஏன் சொல்லினிக??????

      Delete
    4. //mru 21 April 2016 at 21:40
      குருஜி ஆனாகூடி இன்னா அக்குறும்பு ஒங்களுக்கு....... பச்ச புள்ளய கிள்ளி விட்டுபோட்டு தொட்டிலயும் ஆட்டுறீங்களே...எங்கட பர்த்டே இங்குட்டு ஏன் சொல்லினிக??????//

      சொன்னால் என்ன முருகு? உங்க பர்த் டே தானே சொல்லியுள்ளேன். வயதையாச் சொன்னேன்? அது எப்போதும் ஸ்வீட் சிக்ஸ்டீன் மட்டுமே ஆச்சே ! :)

      எல்லோரும் வாழ்த்தினா நல்லது தானே முருகு. நாங்க எல்லோரும் உங்களிடம் ஸ்வீட்டா கேட்கப்போறோம்? டோண்ட் வொர்ரி ...... மின்னலு.

      Delete
  7. ஆஹா மின்னலு ஹாப்பி பர்த் டே..... ஒங்கட குருஜி கிட்டால மட்டிலும் ரகசியமா சொல்லிகினியா......... இரு.... இரு.......கவனிச்சு போடுறேன்......

    ReplyDelete
  8. மின்னலு எங்க போயி ஒளிஞ்ச்கிட்டே ஹேப்பி பர்த்டே ஸ்வீட்டி....

    ReplyDelete
  9. முருகு மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ்... ஆஃப் த டே.... லேட்டா விஷ் பண்ணுறேன்னு கோவப்படாதே.........
    இந்த பாட்டில் நடனம் ஆடும் வைஜயந்தி மாலா தான் ஸங்கம் படத்துல.... ஓ..மேரே....ஸனம் பாட்டுல வராங்க.....

    ReplyDelete