Monday 25 April 2016

ennai yaar entru enni enni

18 comments:

  1. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
    இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

    நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
    என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா

    என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
    இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

    என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
    சருகான மலர் மீண்டும் மலராதய்யா

    கனவான கதை மீண்டும் தொடராதய்யா
    கனவான கதை மீண்டும் தொடராதய்யா..

    காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா

    என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்….

    எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
    மலரோடு மலராக மலர்ந்தாளம்மா

    கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
    கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா

    காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…

    என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
    இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

    இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா
    அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா

    அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா…
    அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா

    அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா…ஆ ஆ ஆ

    என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
    இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

    என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..!

    -=-=-=-=-=-

    திரைப்படம்: பாலும் பழமும் (1961)
    பாடியவர்: பி.சுசீலா
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
    வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
    பாடல் : என்னை யாரென்று எண்ணி

    ReplyDelete
  2. இன்று இத்துடன் நான் எஸ்கேப் ........

    பிறகு என்றோ ஒரு நாள் உங்களையெல்லாம் நான் சந்திக்கும்வரை

    Bye Bye Bye Bye ...... :)

    அன்புடன்,

    குருஜி
    கோபூஜி
    கோபால்ஜி
    கிருஷ்ஜி

    ReplyDelete
    Replies
    1. குருஜி...... வெரசா வந்து போடோணும்....ஆமா........

      Delete
    2. mru 26 April 2016 at 23:54

      //குருஜி...... வெரசா வந்து போடோணும்....ஆமா........//

      சரிடாக்கண்ணு, உனக்காக வேணும் வெரசா வந்து போட முயற்சி பண்ணுவேன்....டா. மிக்க நன்றி....டா, தங்கம்.

      Delete
    3. நா கூப்பிட்டா காட்டியும் எங்கட குருஜி வெரசா வந்து போட்டாக.... நினைத்தேன் வந்தாய் 100-..வயசுனு பாடிபோடவா குருஜி.....

      Delete
    4. mru 27 April 2016 at 22:20
      நா கூப்பிட்டா காட்டியும் எங்கட குருஜி வெரசா வந்து போட்டாக.... நினைத்தேன் வந்தாய் 100-..வயசுனு பாடிபோடவா குருஜி.....//


      :))))) பாடிப்போடுங்க ! முருகு

      (Body போடுங்க இல்லை)

      Delete
    5. இன்னா குருஜி..........

      Delete
    6. mru 30 April 2016 at 00:42
      இன்னா குருஜி..........//

      ’பாடிப்போடுங்க’ என்றால் SING THE SONG என்று பொருள்.

      BODY என்றால் உடல் என்று பொதுவாக ஒரு அர்த்தம்.

      BODY என்றால் குழந்தைகள் அணியும் ’BODY பாவடை’ போலவும் வைத்துக்கொள்ளலாம்.

      ’நாயுடு ஹால்’ ஐட்டமான BRA வைக்கூட கிராமத்துப் பொம்பளைங்க ’பாடி’ என்றும் சொல்லுவார்கள்.

      மொத்தத்தில் இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம். சிறு பிள்ளையான எனக்கு மேலும் அதிக விபரங்கள் தெரியாதூஊஊஊ.

      தயவுசெய்து என்னை வுட்டுடுங்கோ, ப்ளீஸ். :)

      Delete
  3. என்னாச்சி....கோபூஜி....... திடீர்னு பை...பை சொல்றீங்க... எனி.... ப்ராப்லம்??????

    ReplyDelete
  4. என்னாச்சி கிருஷ்...... வீட்ல ஏதாவது... விசேஷமா?? நீங்க வரலைனா... எங்களுக்கு(எனக்கு) ரொம்ப போராகுமே...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 26 April 2016 at 21:05

      //என்னாச்சி கிருஷ்...... வீட்ல ஏதாவது... விசேஷமா??//

      ஆமாம். வீட்ல விசேஷம். என் பொஞ்சாதி மீண்டும் முழுகாம இருக்கா :)))))))))))))))))))

      //நீங்க வரலைனா... எங்களுக்கு (எனக்கு) ரொம்ப போராகுமே...//

      2-3 மாதமா நீங்க மெயிலில் வராம எனக்கும் அதுபோல போராகத்தானே இருந்தது. :((((( அதை இப்போது நினைச்சுப்பாருங்கோ.

      Delete
    2. ஓ..... வீட்ல விசேஷமான்னு... கேட்டா.. இப்படி ஒரு அர்த்தம் வருமா???? நா ஏன் மெயில் அனுப்பாம இருந்தேன்னு தெரிஞ்சு ககிட்டே..... இப்படி சொல்லலாமா...கிருஷ்.......

      Delete
    3. பூந்தளிர் 27 April 2016 at 22:07

      //ஓ..... வீட்ல விசேஷமான்னு... கேட்டா.. இப்படி ஒரு அர்த்தம் வருமா????//

      பின்னே என்னவாம் ? சுத்தியடிச்சு அங்கே வந்து *அந்த இடத்திலே* நிப்போமில்லே :)

      //நா ஏன் மெயில் அனுப்பாம இருந்தேன்னு தெரிஞ்சுக்கிட்டே..... இப்படி சொல்லலாமா... கிருஷ்.......//

      OK .... Dear .... No problem.

      என் அப்போதைய உணர்வுகளை + வலிகளை மட்டும் எடுத்துச் சொன்னேன்.

      பரவாயில்லை. எல்லாம் நன்மைக்கே என பாஸிடிவ் ஆகவே நாம் எடுத்துக்கொள்வோம் ..... டா.

      Delete
  5. ஓ.... கோபால்ஜி.... அர்ஜ்ஜண்டா வேலை இருக்கா. சரி முடிசிட்டு வாங்க.... வெயிடிங்க்.......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 26 April 2016 at 22:29

      //ஓ.... கோபால்ஜி.... அர்ஜ்ஜண்டா வேலை இருக்கா. சரி முடிசிட்டு வாங்க.... வெயிடிங்க்.......//

      தேங்க் யூ சாரூஊஊஊஊ.

      இன்று என் தந்தைக்குத் திதி. வரும் மே 22 என் தாய்க்கு திதி. திதி என்றால் முன்னால் ஒரு வாரமும் பின்னால் ஒரு வாரமும் என் வீடே ஒரே அமர்க்களப்படும்.

      மேலும் நாங்கள் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் முக்கியமான ஒருவர் மறைவுக்காக 12 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் கோயில் கட்டியுள்ளோம்.

      அதை நன்கு பராமரித்து நித்தியப்படி பூஜை, நைவேத்தியம் முதலியன செய்யவும் ஏற்பாடு செய்துள்ளோம். அது என் வீட்டிலிருந்து 25 கிலோ மீட்டர் தள்ளி உள்ளது.

      அந்தக்கோயிலை இப்போது புதுப்பித்து, அதற்கு நாளை முதல் ஆரம்பித்து வேத பாராயணங்களுடன், யாக சாலை பூஜைகள் முதலியன செய்து வரும் 29.04.2016 மிகச் சிறப்பாக கும்பாபிஷேகம் செய்ய உள்ளோம்.

      அதிலிருந்து 48 நாட்களுக்கு தினமும் சிறப்பு பூஜைகளும், வருவோர் அனைவருக்கும் + அங்குள்ள ஏழைகளுக்கும் அன்னதானம் முதலியனவும் நடைபெற உள்ளது.

      அதற்கு பெயர் மண்டலாபிஷேகம் என்பதாகும்.

      இதையெல்லாம் கொஞ்சம் அவ்வப்போது நான் நேரில் சென்று ஒருவித ஈடுபாட்டுடன் கவனிக்க வேண்டிய நிர்பந்தங்கள் உள்ளன.

      இந்த 48 நாட்கள், நான் செய்துகொள்ளும் சிறப்புப் பிரார்த்தனைகளால், உங்களுக்கும் நல்ல காலம் பிறக்கப்போவது சர்வ நிச்சயம்.

      அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன என்பதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

      தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், சாரூஊஊஊ.

      பிரியமுள்ள கோபு

      Delete
    2. கோபாலஜி..... இவ்வளவு.... பிஸி வேலைகளிலும்.... எங்க எல்லாருக்கும் அக்கறையுடன் ரிப்ளை பண்ணி இருக்கீங்களே... எஸ்.... யூ..ஆர்...ரியல்லி..... க்ரேட்.... எனக்கு... பிடிச்ச விஷயம் நடக்கணுமுனு பிரார்த்தனை பண்ணி இருக்கலாமில்ல...... பிடிச்சது.... கிடைக்கலைனா...... கெடைத்ததை.... பிடிக்க..... பழகவேண்டியதுதான்... வேர என்ன சொல்ல.

      Delete
    3. ப்ராப்தம் 27 April 2016 at 23:00
      கோபாலஜி..... இவ்வளவு.... பிஸி வேலைகளிலும்.... எங்க எல்லாருக்கும் அக்கறையுடன் ரிப்ளை பண்ணி இருக்கீங்களே... எஸ்.... யூ..ஆர்...ரியல்லி..... க்ரேட்.... எனக்கு...//

      தேங்க் யூ, சாரூஊஊஊ.

      //பிடிச்ச விஷயம் நடக்கணுமுனு பிரார்த்தனை பண்ணி இருக்கலாமில்ல......//

      உங்களுக்குப் பிடிச்சது எனக்குப் பிடிக்காட்டி எப்படி நான் அதனைப் பிரார்த்தித்துக்கொள்ள முடியும்?????

      //பிடிச்சது.... கிடைக்கலைனா...... கிடைத்ததை.... பிடிக்க..... பழகவேண்டியதுதான்... வேற என்ன சொல்ல.//

      வேறு ஒன்னும் சொல்ல வேண்டாம். இப்போ பிடிச்சது .... சரியான புளியங்கொம்பாகவே பிடிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜாலியா சந்தோஷமா உல்லாசமா உற்சாகமா இருங்கோ, சாரூஊஊஊ. என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

      Delete
  6. இன்னா முன்னா ப்லாக் & ஒயிடு பாட்டா பொடுரே.. பாட்டு இன்னாமோ நல்லாதான் கீது.

    ReplyDelete