Wednesday 6 April 2016

ஆயிரம் கண் போதாது

5 comments:

  1. ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே

    ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே ….
    ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
    குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே

    தென்றல் இசை பாடி வரும் தேனருவி ஆடிவரும்
    ம் …ம் …ம் ..ம் …ம் …ம் ..
    தென்றல் இசை பாடி வரும் தேனருவி ஆடிவரும்
    அன்றலர்ந்த செண்பக பூ வண்ணக்கிளியே
    அன்றலர்ந்த செண்பக பூ வண்ணக்கிளியே எங்கும்
    ஆனந்த காட்சி தரும் வண்ணக்கிளியே
    ஆனந்த காட்சி தரும் வண்ணக்கிளியே
    (ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே)

    எங்கும் பனி தூங்கும் மலை …….
    எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக்கிளியே நெஞ்சில்
    இன்ப நிலை தந்திடுதே வண்ணக்கிளியே
    எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக்கிளியே நெஞ்சில்
    இன்ப நிலை தந்திடுதே வண்ணக்கிளியே

    கொஞ்சி வரும் ஐந்தருவி வண்ணக்கிளியே
    கொஞ்சி வரும் ஐந்தருவி வண்ணக்கிளியே இங்கே
    தங்க தமிழ் முழங்கிடுதே வண்ணக்கிளியே
    தங்க தமிழ் முழங்கிடுதே வண்ணக்கிளியே
    (ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே)

    மந்தி எல்லாம் மாங்கனியை பந்தாடி பல் இளிக்கும்
    ம் …ம் …ம் ..ம் …ம் …ம் ..
    மந்தி எல்லாம் மாங்கனியை பந்தாடி பல் இளிக்கும்
    சந்திரன் போல் சூரியனும் வண்ணக்கிளியே
    உறுதி தந்திடுவான் இன்று எங்கும் வண்ணக்கிளியே

    ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
    குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே
    வண்ணக்கிளியே……





    பாடல்: ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
    படம்: பாவை விளக்கு
    பாடியவர்: C.S. ஜெயராமன்
    கவிஞர்: A. மருதகாசி
    இசை: K.V. மகாதேவன்
    ஆண்டு: 1960

    ReplyDelete
  2. இந்த வீடியோ காட்சி ஓபன் ஆகவில்லை. இதனை ஒளிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வருகிறது.

    ஏன் என்று ஜில் ஜில் ரமாமணியிடமோ, சவடால் வைத்தியிடமோதான் கேட்க வேண்டும். :)

    ReplyDelete
  3. இன்னதுது???? முன்னா சரியா பாட்டு போடோனுமுல்லா?/?/

    ReplyDelete
  4. பாட்டு ஓபனாலைனா கூட கோபால் சார் பூரா பாட்டும் எழுதி ரசிக்க வச்சுட்டாங்க.. நன்றி ஸார்.

    ReplyDelete