Monday 4 April 2016

ஏதோ ஒரு பாட்டு

12 comments:

  1. ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
    கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

    ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
    கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
    என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
    நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
    ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
    ஞாபகங்கள் தீ மூட்டும் ஞாபகங்கண் நீரூட்டும்
    (ஏதோ..)

    கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
    கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
    பூக்களுன் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
    அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
    அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்
    (ஏதோ..)

    தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
    வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
    தொட்டால் சிணுங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
    அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
    மறந்து போனதே எனக்கு எந்தன் ஞாபகம்
    (ஏதோ..)

    படம்: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
    இசை: SA ராஜ்குமார்
    பாடியவர்: ஹரிஹரன்

    ooooooooooooooooooooooo

    முதல் காட்சியினைப் பார்த்ததுமே சூடான சுவையான பஜ்ஜி சாப்பிடணும் போல எனக்கும் ஆசை வந்துவிட்டது.

    அருமையான இனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஆமா ஏதோ ஒரு பாட்டு என்னல்லாமோ நினைவுகளை நினைக்க வைக்குதுதான்.பாட்டு நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. படத்தின் தலைப்பும், இந்தப் பாடலின் முதல் வரியுமே நம்மை ஏதேதோ நினைக்கத்தான் வைக்கும். தங்களின் ரசனைக்கு நன்றிகள்.

      Delete
  3. குருஜி......... பஜ்ஜி துன்னுபோட்டே பாட்ட கேட்டீகளா............ எனிக்கு இந்த பாட்டு பொட்புள்ள குரல்ல வருது. நீங்க ஹரிஹரனு பாடினதுன்றீக....... பொட்ட புள்ளியளுக்கு இப்பூடிலா பேரு இருந்துகிடுமா.........

    ReplyDelete
    Replies
    1. mru 5 April 2016 at 00:10

      குருஜி......... எனிக்கு இந்த பாட்டு பொட்புள்ள குரல்ல வருது. நீங்க ஹரிஹரனு பாடினதுன்றீக....... பொட்ட புள்ளியளுக்கு இப்பூடிலா பேரு இருந்துகிடுமா.........//

      மிகவும் நியாயமான கேள்வி. நெட்டில் நான் தேடியபோது கிடைத்த தகவல் நான் மேலே கொடுத்துள்ளது. எனக்கு இதைப்பற்றி மேலும் விபரங்கள் ஏதும் தெரியாது, முருகு. என்னை விட்டுடுங்கோஓஓஓஓஓ. :)

      Delete
    2. ஸார்.......அப்படின்னா இங்க போட்ட இந்த பாட்ட நீங்க கேக்கவே இல்லயா???????????

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 5 April 2016 at 04:52

      //ஸார்.......அப்படின்னா இங்க போட்ட இந்த பாட்ட நீங்க கேக்கவே இல்லயா???????????//

      மிகவும் ரஸித்து 2-3 தடவைக்கேட்டு மகிழ்ந்தேன் ... தேன்!

      பஜ்ஜி விநியோகிப்பது, ஊஞ்சலில் ஆடுவது, மருதாணி இட்டுக்கொள்வது, கத்திச்சண்டை போடுவது, மழையில் நனைவது, அம்மா மடியில் படுத்துக்கொள்வது, விசிறிக்காற்று வாங்குவது, தோட்டத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து கதை சொல்வது போல ஒவ்வொன்றையும் பாடிக்காட்டுவது போன்ற இந்தப்பாட்டில் வரும் காட்சிகளில் என்னிடம் எந்தக்கேள்விகள் கேட்டாலும் நான் பதில் சொல்வேன் உங்களுக்கு.

      ஆனால் முருகு கேட்ட கேள்வியில் நான் அப்படியே ஆடிப்போய் விட்டேன். பாடியவரோ பெண் + பெண் குரல். அது எப்படி பாடியவர் பெயர்: ஹரிஹரனாக இருக்க முடியும் என்று கேட்டுட்டாங்கோ. நியாயமான கேள்வி அல்லவா?

      மீண்டும் வேறொரு இடத்தில் நெட்டில் கேட்டபோது கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன:

      படம் : உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
      பாடல் : ஏதோ ஒரு பாட்டு
      இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
      பாடலாசிரியர்: பழனி பாரதி
      பாடியவர்கள் : சுஜாதா

      ஒருவேளை இதே பாட்டு அந்தப்படத்தில் ஆண் குரலிலும் பெண் குரலிலும் இருமுறை தனித்தனியாக வரக்கூடுமோ என்னவோ ? நான் இந்தப்படம் பார்த்தது இல்லை. அதனால் எனக்கு இதுவிஷயம் சரியாகத் தெரியவில்லை.

      அப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா, மூச்சு வாங்குது ... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவருக்கும் விளக்கம் கொடுத்து மாளவே இல்லை.

      Delete
  4. ஆமா ஸார் இந்த பாட்டு ஆண்கு
    ரலில் ஒருதடவை பெண்குரலில் ஒரு தடவை வருது.......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 5 April 2016 at 05:36

      //ஆமா ஸார் இந்த பாட்டு ஆண்குரலில் ஒருதடவை பெண்குரலில் ஒரு தடவை வருது.......//

      அப்படியா, மிக்க நன்றிம்மா. நான் சந்தேகப்பட்டு நினைத்தது சரியாகிவிட்டது.

      நல்லவேளை நான் தப்பிச்சேன் ! :)

      Delete
  5. மின்னலு இங்கயும் கலக்குறாங்களே......

    ReplyDelete
  6. ஆமாங்க ஸார்.. தூள் கெளப்புறாங்க......

    ReplyDelete
  7. இன்னா கலக்குறேன்...

    ReplyDelete