Monday 1 August 2016

பரமசிவன் கழுத்திலிருந்து


34 comments:

  1. பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்யமா யாரும்

    இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
    அதில் அர்த்தம் உள்ளது!

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம் உன்னை மதிக்கும் உன்
    நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும்கூட மிதிக்கும்!

    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது
    அதில் அர்த்தம் உள்ளது! (பரம சிவன்)

    வண்டி ஓடச் சக்கரங்கள்
    இரண்டு மட்டும் வேண்டும் அந்த
    இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்

    உனைப்போல் அளவோடு உறவாட வேண்டும்
    உயர்ந்தோறும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது
    அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது! (பரமசிவன்)

    நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
    நிலவும் வானும் போலே நான் நிலவு
    போலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    என் உள்ளம் என்னைப் பார்த்து கேலி செய்யும்போது

    இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது இது
    கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது. (பரமசிவன்)

    ReplyDelete
  2. படம் : சூரியகாந்தி (1973)

    இசை : M.S.விஸ்வநாதன்

    பாடியவர் : T.M.சௌந்தர்ராஜன்

    பாடல் வரிகள் : கண்ணதாசன்

    ReplyDelete
  3. இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான பாட்டு.

    எனக்கு மிகவும் பிடித்தமான அருமையான வரிகள்:

    //நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
    நிலவும் வானும் போலே .....

    நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன்
    நீ வளர்ந்ததாலே .....//

    //வண்டி ஓடச் சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
    அந்த
    இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?//

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. //அதில் அர்த்தம் உள்ளது!//

    முன்னா இதனை இன்று இங்கு வெளியிட்டுள்ளதில் என்ன அர்த்தம் உள்ளதோ? ..... அடியேன் அறியேன்.

    என்னவோ நடக்குது .... அது எனக்கு மர்மமாய் இருக்குது !!!!!

    ReplyDelete
  5. எந்த அர்த்தமும் இல்ல... பாட்டு நல்லா இருந்திச்சி அம்புட்டுதான்....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 2 August 2016 at 06:02

      //எந்த அர்த்தமும் இல்ல... பாட்டு நல்லா இருந்திச்சி அம்புட்டுதான்....//

      ஓஹோ ..... நம்பிட்டேன் ..... தங்களின் விளக்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  6. பொதுவாக பெண்கள் தன் சிறுவயதில், தன் பிறந்த வீட்டில், தன் தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என எல்லோருடனும் செல்லமாக வளர்ந்துவிடுவது உண்டு.

    பிறகு உரிய பருவத்தில் திருமணம் ஆகி புகுந்தவீடு செல்வது உண்டு.

    அங்குள்ள மாறுபட்ட சூழ்நிலைப் புரிந்துகொண்டு, மின்னி ஜொலித்திடும் பக்குவம் ஏற்படும்வரை, இதுவரை இருந்து வந்த தன் சுதந்திரங்கள் ஏதோ பறிபோனதுபோல நினைப்பதும் உண்டு.

    காலம் மாற மாற, பெண்களுக்கு தன் பிறந்த வீட்டைவிட புகுந்த வீடே மிகவும் பிடித்துப்போய்விடுவதும் உண்டு.

    சமீபத்தில் ’வில்லுப்பாட்டுப்புகழ் சுப்பு ஆறுமுகம்’ அவர்கள் சொல்லியிருந்த ஒரு மிகச் சிறிய கதைக்கருவை நான் படிக்க நேர்ந்தது.

    அதனை என் பாணியில் சற்றே மேலும் வளர்த்து, ஊதி ஊதிப்பெரிதாக்கி உங்கள் அனைவரின் பார்வைக்கும் கொடுக்க விரும்புகிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 3 August 2016 at 00:03

      //சொல்லுங்கஜி//

      தங்களின் ஆர்வத்திற்கு மிக்க நன்றீங்கோ.

      Delete
  7. பால் தன் தாயின் (பசுவின்) மடியினில் இருக்கும் வரை அதற்கு எந்தக் கவலையுமே இல்லை.

    பால் கறக்கப்பட்டவுடன் அதற்கு விடுதலை கிடைக்கிறது.

    வெளியுலகத்தைக் கண்டு மகிழ்கிறது.

    நுரையுடன் உள்ள கறந்தபால் என்ற பெருமையை அடைந்து, ஒருவித பூரிப்பும் அடைகிறது.

    உடனடியாக அது லிட்டர் கணக்குகளில் அளக்கப்படுகிறது.

    இதனால் தன் மதிப்புக்கூடியது போல நினைத்து மனதுக்குள் மகிழ்கிறது.

    பால் பல்வேறு பேக்கிங்களில் பலரின் கைகளுக்கு மாறுகிறது.

    இங்குமங்கும் கொஞ்சம் பயணமாகிறது.

    மேலும் குஷியாகி விடுகிறது.

    ஏதோ ஒரு வீட்டு வாசலையும் அடைகிறது.

    வீடு (மோட்சம்) கிடைத்த சந்தோஷத்தையும் இப்போது அடைகிறது.

    அங்கு தொங்கும் பையில் படுத்து சற்றே உறங்கி மகிழ்கிறது.

    வாசலில் தொங்கும் பையிலிருந்து அது மீட்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பான ஜில்லென்ற ஓரிடத்தினை (FRIDGE) அடைவதில் மேலும் பேரானந்தம் அடைகிறது.

    இதுவரை அதற்குத் தன் தாயின் மடியினில் இருந்த சுகம் என்னவென்றே உணரும் வாய்ப்புக்கிட்டவில்லை.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எம்பூட்டு அழகா விளக்கமா சொல்லுறீங்க. படிக்கவே சுலாரசியமா இருக்கு...

      Delete
    2. ப்ராப்தம் 2 August 2016 at 21:46

      //எம்பூட்டு அழகா விளக்கமா சொல்லுறீங்க. படிக்கவே சுவாரசியமா இருக்கு...//

      ஆஹா, மிகவும் சந்தோஷம். :)

      Delete
  8. சற்று நேரத்தில் அது ஓர் பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் ஏற்றி, சூடாக்கப்படுகிறது.

    சூடு தாங்காமல் பொங்கிப்பொங்கி வருகிறது.

    இப்போதுதான் தன் தாயின் மடியினில் எவ்வளவு பாதுகாப்பாக சுகமாக இருந்தோம் என்பதை அந்தப்பால் உணர ஆரம்பிக்கிறது.

    சூடாக்கப்பட்ட பால் கொஞ்சம் ஆறியதும், அதனுடன் சற்றே புளிப்பான மோர் சேர்க்கப்படுகிறது.

    அது தன் சுய நிலைமாறி திரிந்துபோய் விடவும் நேர்கிறது.

    பால் என்ற அதன் அழகான பெயரும் உருவமும் சுத்தமாகவே இப்போது மாற்றப்பட்டு அது கெட்டியாகி தயிர் என அழைக்கப்படுகிறது.

    ‘தயிர்’ என்று இப்போது புதிதாக அழைக்கப்படும் அந்தப் பால், மத்து என்ற ஆயுதத்தால் இப்போது நன்கு கடையப்படுகிறது.

    தாயின் மடியிலிருந்த சுகம் என்ன .... இப்போது நாம் படும் கஷ்டங்கள் என்ன .... என அந்தப்பாலுக்கு அழுகையாக வருகிறது.

    தயிர் கடையும் போது கண்ணீர் சிந்துகிறது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பால் தயிராகும் பக்குவத்தை சூப்பராக சொல்லி வறீங்க. ரியல்லி ஒண்டர்ஃபுல்

      Delete
    2. ப்ராப்தம் 2 August 2016 at 21:48

      //பால் தயிராகும் பக்குவத்தை சூப்பராக சொல்லி வறீங்க. ரியல்லி ஒண்டர்ஃபுல்//

      வாழ்க்கைத் தத்துவமும் இதேதான்.

      இயற்கையில் பெண் என்பவள் பால் போன்றவள்.

      கணவனுடன் சேர்ந்ததும், அதே பால் போன்ற அவள் கடையப்பட்டு, மத்தினால் குடையப்பட்டு, கெட்டித்தயிர் ஆகிவிடுகிறாள்.

      நவநீதம் ஆன வெண்ணெயே அவர்களுக்குக் கிடைக்கும் வெண்ணெய் (குழந்தைகள்) என வைத்துக்கொள்ளலாம்.

      Delete
  9. தயிர் மோராகி வெண்ணெய் மிதக்க ஆரம்பிக்கிறது.

    வெண்ணெயை மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் கருதி மக்கள் தங்களிடம் சேகரித்து வைக்கின்றனர்.

    கறந்த பாலாக இருந்தபோது லிட்டர் 40-50 ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்ட தான், இப்போது வெண்ணெய் ஆனது கிலோ 400-500 ரூபாய் என மதிப்பு உயர்ந்ததில் பாலுக்கு ஓர் தனிப்பெருமை கிடைத்துள்ளதாகவே அது நினைக்க ஆரம்பித்து மகிழ்கிறது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வெண்ணையின் மதிப்பு அபாரமாக இருக்கே...

      Delete
    2. ப்ராப்தம் 2 August 2016 at 21:49

      //வெண்ணையின் மதிப்பு அபாரமாக இருக்கே...//

      மத்தினால் கடைந்து குடைந்து சிலிப்பிச்சிலிப்பி கஷ்டப்பட்டு எடுக்கப்படுவது ஆயிற்றே வெண்ணெய் என்பது .... அது மிகவும் அபாரமான மதிப்பு வாய்ந்ததாகத் தானே இருக்க முடியும். :)

      Delete
  10. வெண்ணெயை மீண்டும் அடுப்பில் ஏற்றி நெய் கிடைக்க வேண்டும் என உருக்க ஆரம்பித்தனர்.

    மீண்டும் அந்தப்பால் தன் தாயின் மடியில் சுகமாக இருந்த நாட்களை எண்ணி எண்ணி, அடுப்புச் சூட்டினில் உருகிப் போனது.

    நெய்யையும் அதன் மணத்தையும் பலரும் விரும்பினர்.

    பலவிதமான ஸ்வீட்ஸ் ஆக்கி மகிழ்ந்தனர்.

    நெய்யினால் பகவானுக்கு விளக்கு ஏற்றினர், நெய்யினால் ஹோமங்கள் பல செய்து அதற்கு மேலும் சிறப்புச் சேர்த்தனர்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நெய்யை மிகவும் விரும்பி உண்டனர்.

    பால் என்பது இவ்வுலகில் தன் தாய் மடியிலிருந்து பிறக்கும் ஜீவாத்மா போன்றது.

    அது தன்னை நன்கு புடம்போட்டு, புடம்போட்டு, மேலும் மேலும் வருத்திக்கொள்வதன் மூலமே, நெய் என்ற உயர்ந்த அந்தஸ்தினை அடைந்து, பரமாத்ம சொரூபமாக மாறி, விளக்குகள் + வேள்விகள் + ஹோமங்கள் + யாகங்கள் மூலம் பரமாத்மாவையே அடைய முடிகிறது, என நான் நினைத்துக்கொண்டேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாவ்..... சூப்பர்....... ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. படிக்க படிக்க அவ்ளோ நல்லா இருக்கு.. இதுபோல விஷயங்கள் உங்க மூலமாதான் தெரிந்து கொள்ள முடிகிறது.. நன்றி கோபால்ஜி...

      Delete
    2. ப்ராப்தம் 2 August 2016 at 21:51

      //வாவ்..... சூப்பர்....... ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. படிக்க படிக்க அவ்ளோ நல்லா இருக்கு.. இதுபோல விஷயங்கள் உங்க மூலமாதான் தெரிந்து கொள்ள முடிகிறது.. நன்றி கோபால்ஜி...//

      என் எழுத்துக்களுக்குத் தங்களைப்போன்றதோர் ரஸிகர் இன்னும் இன்றும் இருப்பதை நினைக்க எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றீங்கோ. :)

      Delete
  11. அதே போல ஒரு பெண்ணானவள், தன் வாழ்க்கைத் துணையுடன் இனிய இல்லறம் நடத்தி, ஒன்றரக்கலந்து, தாய்மை என்னும் பூரிப்பினை அடைந்து, மக்கட்செல்வங்கள் பலவும் பெற்றுக்கொடுத்து, தன் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை சேர்த்து தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கிறாள் எனவும் எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எஸ்...எஸ்.... பாலும் பெண்ணும் ஒன்றுதான்.....

      Delete
    2. ப்ராப்தம் 2 August 2016 at 21:52

      //எஸ்...எஸ்.... பாலும் பெண்ணும் ஒன்றுதான்.....//

      இதில் ஒரு சின்ன கரெக்‌ஷன் செய்ய வேண்டியுள்ளது.

      முதல்நாள் பால் குடம் போன்று காட்சியளிக்கும் புதுமணப்பெண், பழகப் பழக சற்றே புளித்துப் போய் சலித்துப்போய், நாளடைவில் ஓர் ‘பழைய சோத்துப்பானை’ போல மாறி விடுகிறாள் என, என் நகைச்சுவைச் சிறுகதை ஒன்றில், வ.வ.ஸ்ரீ. என்ற கதா பாத்திரத்தால் சொல்லப்படுகிறது.

      நீங்கள் அதனை அவசியமாகப் படித்து மகிழ வேண்டுகிறேன்.

      இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

      குறிப்பாக பகுதி-5 இல் இந்த முக்கியமான சமாச்சாரம் இடம் பெற்றுள்ளது. :)

      Delete
    3. அங்க போயி படச்சு சிரிச்சு கமெண்டும் போட்டாச்சே.... ஆனாலும் உங்களுக்கு குறும்பு ஜாஸ்தியோ...... ஜாஸ்திதான்...))))

      Delete
    4. ப்ராப்தம் 4 August 2016 at 22:03

      //அங்க போயி படச்சு சிரிச்சு கமெண்டும் போட்டாச்சே....//

      பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      //ஆனாலும் உங்களுக்கு குறும்பு ஜாஸ்தியோ...... ஜாஸ்திதான்...))))//

      அச்சச்சோ .... அந்த ஒரே ஒரு கதையைப் படிச்சுட்டு, இப்படி ஒரேயடியா ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் எப்பூடி?

      நகைச்சுவைக்கதைகள் என்றால் நான் சும்மா நகைச்சுவையை (என் குறும்புகளுடன்) நர்த்தனமாட விட வேண்டாமா?

      அந்தக்கதைக்கு சங்கீத உபந்யாஸமாக விமர்சனம் எழுதி முதல் பரிசினை வென்றுள்ள திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் விமர்சனத்தைப் படியுங்கோ. மேலும் சிரிப்போ சிரிப்பாக இருக்கும். இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html

      Delete
  12. திருக்குறள்:-

    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்

    (அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் .... குறள் எண்: 56)

    தன்னைத் தானே பாதுகாத்துக்கொண்டு, தன்னைச் சேர்ந்தவர்கள் நலன் பேணி, தன் குடும்பத்திற்கிருக்கும் புகழையும் காத்து, சோர்வில்லாமல் இருப்பவளே பெண்.

    ReplyDelete
  13. குடும்பத்திற்கிருக்கும் = குடும்பத்திற்கும்.

    [எழுத்துப்பிழையாகிப் போனதற்கு வருந்துகிறேன்]

    ReplyDelete
  14. இங்க உங்க ரெண்டு பேரு கமெண்டும் ரசிச்சு சிரிச்சுகிட்டே இருக்கேன் பாலுக்குள்ள நெய் வெண்ணை இருக்குனு சொன்னா நம்பிக்கயே வராது. ஆனாலும் இத்தன கஷ்டப்பட்டாதானே வெண்ணையும் நெய்யும் கிடைக்குது..

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 4 August 2016 at 22:22

      //இங்க உங்க ரெண்டு பேரு கமெண்டும் ரசிச்சு சிரிச்சுகிட்டே இருக்கேன்.//

      ஆஹா, சந்தோஷம். எப்படியோ நீங்க சந்தோஷமாகச் சிரிக்க வேண்டும். அதுபோதும் எனக்கு. அதுதான் என் எதிர்பார்ப்பும்.

      //பாலுக்குள்ள நெய் வெண்ணை இருக்குனு சொன்னா நம்பிக்கையே வராது.//

      கடவுள் இருக்கிறாரா? கடவுள் இல்லையா? என்ற விவாதம் போலத்தான் இதிலும் நமக்கு லேஸில் நம்பிக்கையே வருவது இல்லை.

      அதைப்பற்றிய ஓர் காரசாரமான விவாதம் இதோ இந்த என் பதிவுகளில் உள்ளது. படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் விட மாட்டீர்கள். அவ்வளவு விறுவிறுப்பாக இருக்குமாக்கும். இதோ இணைப்புகள்:

      http://gopu1949.blogspot.in/2012/04/blog-post_9165.html

      http://gopu1949.blogspot.in/2012/04/2-of-3.html

      http://gopu1949.blogspot.in/2012/04/3-of-3.html

      //ஆனாலும் இத்தனைக் கஷ்டப்பட்டாதானே வெண்ணையும் நெய்யும் கிடைக்குது..//

      எதுவுமே நமக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டுமானால், நாம் நம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும்.

      Delete
  15. ஆனாலும் அந்த பாலைப்பார்த்து ஐயோபாவம் இவ்வளவு வலி வேதனை தாங்கி தானே வெண்ணையா நெய்யா ஆகுதுன்னு யாராவது நினைக்கறோமா..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //ஆனாலும் அந்த பாலைப்பார்த்து ஐயோபாவம் இவ்வளவு வலி வேதனை தாங்கி தானே வெண்ணையா நெய்யா ஆகுதுன்னு யாராவது நினைக்கறோமா..//

      அது எப்படி நினைப்போம்?

      கைக்குக் கிடைத்ததை, திவ்யப் பிரஸாதமாக ஏற்றுக்கொண்டு, நன்கு நாக்குப்போட்டு நக்கி, ருஸித்து, ரஸித்து சாப்பிட மட்டும் தானே தோன்றும்.

      ஒவ்வொன்றுக்கும் இப்படி ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கவாத் தோன்றும்?

      Delete
  16. நான் என் பாணியில் கஷ்டப்பட்டு மேலே மிக அழகாகவும் விரிவாகவும் எடுத்துச்சொல்லியுள்ள பால்-தயிர்-மோர்-வெண்ணெய்-நெய் ஆகியவற்றின் கதையை வேறொருவர் சுருக்கோ சுருக்குன்னு சுருக்கி முகநூலில் (ஃபேஸ்-புக்கில்) போட்டிருக்க, அதனைப் பார்த்து விட்டு ஆல்-இஸ்-வெல் என்ற ஒருத்தர் தன் பதிவினில் இன்று போட்டுக்கொண்டுள்ளார். இதோ அதன் இணைப்பு:

    http://httpall.blogspot.in/2017/04/blog-post.html

    ReplyDelete
  17. ஸார் உங்க திறமையே ஸ்பெஷல்தான். எவ்வளவு விரிவா விளக்கமா சொல்லி இருக்கிங்க. படிக்க படிக்க சுவாரசியமூ இருக்குது.. நன்றி ஸான்

    ReplyDelete