Tuesday 16 August 2016

kelviyin nayakane


36 comments:

  1. இந்த படத்துல எல்லா பாட்டுமே நல்லா இருக்கும்.. இந்தப்பாட்டும் சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சாரூஜி.. கோபூஜி லாங் லீவுல போயிட்டாங்க வருவாங்க நாம வெயிட் பண்ணலாம்

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 16 August 2016 at 23:00

      //வாங்க சாரூஜி.. கோபூஜி லாங் லீவுல போயிட்டாங்க வருவாங்க நாம வெயிட் பண்ணலாம்//

      வெயிட் பண்ணி வெயிட் பண்ணி உங்கள் எல்லோருக்குமே வெயிட் ஏறிடப்போகிறது. ஜாக்கிரதை. :)

      Delete
    3. ஆமா ஆமா வெயிட்டு ஏறிகிட்டேதானே போகுது..

      Delete
    4. சிப்பிக்குள் முத்து. 19 August 2016 at 21:25

      //ஆமா ஆமா வெயிட்டு ஏறிகிட்டேதானே போகுது..//

      சபாஷ். அதுதான் மிகவும் நல்லது. பொண்ணுங்க நல்ல ஹைட் அண்ட் வெயிட் ஆக சும்மா ரேஸ் குதிரை போலத்தான் ஜோரா இருக்கணும்.

      பளபளன்னு பப்ளிமாஸ் போலவும்,
      தளதளன்னு தக்காளி போலவும்,
      கும் கும்முன்னு கொழுக்கட்டை போலவும்,
      அந்தக்கால திருப்பதி மிகப்பெரிய லட்டு போலவும்
      மோத முழங்க இருக்கணும்.

      அப்போதுதான் மேரேஜ் மார்க்கெட்டில் எந்த மாப்பிள்ளை பார்த்தாலும் அப்படியே ஒரே கொத்தாகக் கொத்திக்கிண்டு போய் விடுவார். :)

      வெயிட்லெஸ்ஸாக வத்தக்காச்சிபோல, ஓமப்பொடி போல இருந்தால் யார்தான் விரும்புவார்கள்?

      ‘ஊசிபோல உடம்பிருந்தால் தேவையில்லை பார்மஸி’ன்னு வெட்டியா வீராப்பாப் பாட்டு வேண்டுமானால் பாடிக்கொண்டு மகிழலாம். அதெல்லாம் ஒருபோதும் காரியத்திற்கு உதவாது. அத்தோடுகூட கல்யாணத்திற்கு தனியாக மெத்தை வாங்கும் செலவு வேறு அதிகரிக்கும்.

      Delete
  2. இந்த படத்துல எல்லா பாட்டுமே நல்லா இருக்கும்.. இந்தப்பாட்டும் சூப்பர்...

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு இந்த பாட்டு

    ReplyDelete
  4. வாங்க ஹாப்பி.. நீங்க ஆணா பொண்ணா

    ReplyDelete
    Replies
    1. மிகவும் அழகோ அழகான, மிகவும் இளமையான, எப்போதும் சிரித்த முகத்துடன் கூடிய ‘ஹாப்பியோ ஹாப்பி’யான பெண் குட்டி மட்டுமே.

      உங்களையும், நம் மின்னலு முருகுவையும் விட மிக மிகச் சிறியவள்.

      எனக்கும் இவளுக்கும் ஓர் ஆச்சர்யமான ஒற்றுமை உள்ளது.

      எங்கள் இருவரின் ’டேட் ஆஃப் பர்த்’தும் ஒரே தேதி + ஒரே மாதம் மட்டுமே. வருஷம் தான் வருஷக்கணக்கில் இடிக்குது.

      நல்ல அதிர்ஷ்டக்கார + துணிச்சலான பொண்ணு. :))))))))))

      Delete
    2. என்னையா சொல்லுறீங்க... உங்களுக்கே இது சரியா தோணறதா... இங்க இவங்கல்லாம் உங்களை ஒரு ஜி... போட்டு கூப்பிடறாங்க.. நான் எப்படி சொல்ல...

      Delete
    3. happy 18 August 2016 at 21:34

      //என்னையா சொல்லுறீங்க...//

      சாக்ஷாத் ’ஹாப்பி’யாகிய உங்களையே தான் நானும் மிகுந்த ஹாப்பியுடன் இங்கு சொல்லியுள்ளேன். :)

      இன்று ஆடி வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு, மடி வஸ்திரங்கள் (பஞ்சக்கச்சம் முதலியன) அணிந்து, கால் அலம்பிவிட்டு, பட்டை பட்டையாக விபூதி பூசிக்கொண்டு, ருத்ராக்ஷம் அணிந்துகொண்டு, நித்ய கர்மானுஷ்டங்களான, சந்தியா வந்தனம், மாத்யான்னிஹம், பிரும்ம யக்ஞம் முதலியனவற்றை முடித்துவிட்டு, 1008 முறை பக்தி சிரத்தையுடன் காயத்ரி மஹா மந்திர ஜபம் செய்து முடித்து விட்டு, களைப்புதீர ஒரு டம்ளர் நிறைய ஏலக்காய் ருசியுடன் கூடிய மிகவும் தித்திப்பான, கரீதம் (பானகம்) மட்டும் அருந்திவிட்டு, இங்கு இதற்கு பதில் அளிக்க ஆரம்பித்துள்ளேன்.

      //உங்களுக்கே இது சரியா தோணறதா...//

      தினமும் காயத்ரி மஹா மந்திர ஜபிக்கும் நான் பொய் சொல்லுவேனா? என் மனதில் ஓரிரு நாட்கள் முன்பே சிரித்தமுகத்துடன், மிகவும் அசத்தலான காயத்ரி தேவி, தாமிரவர்ணி ஆற்று நீருடன் அழகாகப் புகுந்துகொண்டு விட்டாளே ! :)

      அதனால் நான் சொன்னது எல்லாமே எனக்கு மிகச் சரியாகத்தான் தோன்றுகிறது. எதையும் நான் மிகைப்படுத்திச் சொல்லவே இல்லை. என் மனதுக்குப் பட்டதை அப்படியே உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கேனாக்கும். :)))))

      //இங்க இவங்கல்லாம் உங்களை ஒரு ஜி... போட்டு கூப்பிடறாங்க.. நான் எப்படி சொல்ல...//

      குருஜி, கோபூஜி, கல்யாண கோபாலகிருஷ்ணன் ஜி, கோபால்ஜி, க்ருஷ் முதலிய பெயர்களில் என்னை இங்கு பலரும் பலவிதமாக அன்புடனும் ஆத்மார்த்த பிரியத்துடன் அழைத்து வருகிறார்கள்.

      நீங்கள் பார்த்து என்னை எப்படி புதிய பெயரில் அழைத்தாலும் எனக்கு ஓக்கே தான்.

      Delete
    4. என்னென்னமோ கமெண்டு போட்டு குளப்புறிங்களேஜி. ஏதுமே வெளங்கல. ஹாப்பிக்கு சொன்ன பதிலா இது..

      Delete
    5. சிப்பிக்குள் முத்து. 19 August 2016 at 00:37

      //என்னென்னமோ கமெண்டு போட்டு குளப்புறிங்களேஜி. ஏதுமே வெளங்கல.//

      இதில் வெளங்கிக்கிட ஏலாதவற்றை மட்டும் நம் முன்னா-மெஹர் மாமி தன் பக்கத்துவீட்டு மாமியிடம் தயவுசெய்து கேட்டுக்கொள்ளலாம். இல்லாட்டி நமக்குள் மெயிலில் பிறகு சாகவாசமாகப் பேசிக்கொள்ளலாம்.

      //ஹாப்பிக்கு சொன்ன பதிலா இது..//

      ஹாப்பிக்கு மட்டுமல்ல. இந்தியாவில் ஏதோவொரு மாநிலத்தில், ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு மிகப்பெரிய பங்களாவில், யாரோ ஒருவர் தனிமையில் எப்போதும் என் நினைவாகவும், இவரை வெகு நாட்களாகக் காணோமே ... என்ன ஆனாரோ? எப்படி இருக்கிறாரோ? என நினைத்து ஒருவேளை கவலைப்படலாம் என்று எனக்குத் தோன்றியது.

      அதனால் ’நானும் இருக்கிறேன் நண்டு வளையில்’ என மறைமுகமாகச் சொல்லியுள்ளேன். :)

      Delete
    6. ம்..ம்..ஓஹ்ஹோ.... அதான பாத்தேன்..))) கோபூஜி நீங்க யாருக்காக வந்தாலும்.... வறீங்கல்ல அதானே முக்கியம்....

      Delete
    7. சிப்பிக்குள் முத்து. 19 August 2016 at 21:28

      //ம்..ம்..ஓஹ்ஹோ.... அதான பாத்தேன்..)))//

      என்னத்த பார்த்தேளோ? அம்பாள் தரிஸனமும், கடாக்ஷமும் இப்போதெல்லாம் உங்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது என நான் நினைக்கிறேன்.

      இங்கு ஒரு ஏழை எளிய தூய பக்தனாக நான் ஒருவன் இருப்பதை ஏனோ அந்த அம்பாளு (நம்மாளு) மறந்தே பூட்டாங்கோ. :(((((

      //கோபூஜி நீங்க யாருக்காக வந்தாலும்.... வறீங்கல்ல அதானே முக்கியம்....//

      என்னத்த வந்து ......
      என்னத்த போயி ......
      என்னத்த பாட்டு கேட்டு ......
      என்னத்த பின்னூட்டம் எழுதி ......

      ‘நான்’ என்ற பெயரில் ஜெயலலிதா, ரவிச்சந்திரன், ஆர்.எஸ். மனோகர், முத்துராமன், அசோகன், நாகேஷ் முதலியோர் நடித்த மிகவும் அருமையானதொரு திரைப்படத்தில், ’கண்ணையா’ என்ற நடிகர் இதுபோல அடிக்கடிச் சொல்லி அலுத்துக்கொள்வார்.

      அதனால் மட்டுமே அவருக்கு ‘என்னத்தக் கண்ணையா’ என்ற பட்டப் பெயரே ஏற்பட்டது.

      Delete
  5. ஆஹா..... உண்மைலயே கோபூஜிதானா வேர யாருமா...
    ஹாப்பி... ஹாப்பி...

    ReplyDelete
    Replies
    1. அடடா, அதற்குள் மறந்துட்டீங்களே ..... நானேதான்.

      நம்ம ’ஹாப்பி’ விஷயமாக இருப்பதால் ஹாப்பியாக உடனே நானும் ஓடியாந்துட்டேன். :)

      Delete
    2. ஐயய... மறக்கறதா... அது எப்பூடிஜி......

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 19 August 2016 at 21:29

      //ஐயய... மறக்கறதா... அது எப்பூடிஜி......//

      மறக்கவே முடியாதுன்னு சபதம் செய்திருந்தவங்களே ..... இப்போ சு-த்-த-மா மறந்துட்டாங்களே !

      (டாய்லெட் உள்பட அனைத்தும் தன்னிடம் ’சுத்தமோ சுத்தமே’ என என்னிடம் சொல்லி என்னை மகிழ்வித்திருந்தது ஏனோ இப்போது என் நினைவுக்கு வருகிறது)

      Delete
  6. கோபூஜி... இனிமேல் சொல்லலாம் கொள்ளலாம் லா....ங்.... லீவுலலாம் போக கூடாது...

    ReplyDelete
    Replies
    1. {*ராஜாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது*}

      இனி யாருக்காக நான் இந்த வலைத்தளப் பக்கம் வரணும்? என்ற ஒரு எண்ணமும் ஏற்கனவே என் மனதில் ஏற்பட்டுவிட்டது.

      அதனால் யாரிடமும் சரியாக சொல்லிக்கொள்ளவும் என்னால் முடியவே இல்லை.

      பல்வேறு காரணங்களால், இந்த ஒரு மாதம் முழுவதுமாவது, வைராக்யமாக, லீவ் போட்டு விடலாம் என்றுதான் நானும் நினைத்திருந்தேன்.

      இருப்பினும் எனக்கு ஓரளவு அறிமுகம் ஆகியுள்ள ’ஹாப்பி’ என்ற பதிவரைப்பற்றியதோர் கேள்வியை நீங்க இங்கு எழுப்பி விட்டதால், என்னால் என் வைராக்யத்தைக் கட்டிக்காக்க இயலாமல் போய்விட்டது என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

      பார்ப்போம் .....

      Delete
  7. //இனி யாருக்காக நான் இந்த வலைத்தளப் பக்கம் வரணும்? என்ற ஒரு எண்ணமும் ஏற்கனவே என் மனதில் ஏற்பட்டுவிட்டது. //

    ஏங்க,,,,, உங்களுக்காக தினசரி காத்துகெடக்குற நாங்கலாம் உங்க கண்ணுல படவேல்லியா.. வராதவங்கள நெனச்சே பொலம்பிட்டு இருக்குறீங்க..

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 19 August 2016 at 00:40

      **//இனி யாருக்காக நான் இந்த வலைத்தளப் பக்கம் வரணும்? என்ற ஒரு எண்ணமும் ஏற்கனவே என் மனதில் ஏற்பட்டுவிட்டது. //**

      //ஏங்க,,,,, உங்களுக்காக தினசரி காத்துகெடக்குற நாங்கலாம் உங்க கண்ணுல படவேல்லியா..//

      எல்லோரும் என் கண்களுக்குப் படவே செய்கிறீர்கள். அதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே ...... இருப்பினும் .......

      //வராதவங்கள நெனச்சே பொலம்பிட்டு இருக்குறீங்க..//

      ”தவற விட்டுள்ள பறவைதான் தங்கமானது” என்று ஆங்கிலத்தில் ஓர் பழமொழி உண்டு. அது எவ்வளவு உண்மையானது என்பது இப்போதுதான் என்னால் மிக நன்றாக உணரமுடிகிறது. :(

      Delete
    2. எப்படியோ வந்திங்களே அதுவே போதும். உங்க வழக்கமான ரசனையான கமெண்டு போட்டு கலக்குங்கஜி

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 19 August 2016 at 21:30

      //எப்படியோ வந்திங்களே அதுவே போதும்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //உங்க வழக்கமான ரசனையான கமெண்டு போட்டு கலக்குங்கஜி//

      ஆகட்டும் .... தாயே .... அதுபோல ....
      நீங்க நினைச்சது நடக்கும் .... மனம் போலே ....

      என்று சொல்லத்தான் ஆசை. இருப்பினும் ........

      ஏற்கனவே கலங்கிப்போய் இருக்கும் என்னால் எப்படி என் வழக்கமான ரசனையான கமெண்ட் போட்டு கலக்கிட முடியும்?????

      Delete
  8. //இன்று ஆடி வெள்ளிக்கிழமை //

    அச்சச்சோ....... ஆனைக்கும் அடி சறுக்கிடுத்தே..... ஆவணி பொறந்து ரெண்டு நாள் ஆறது... ஆடி வெள்ளினு சொல்றேளே...ஸாரி.... அதிகப்படியா பேசறேனோ....

    ReplyDelete
    Replies
    1. happy 19 August 2016 at 00:46

      **இன்று ஆடி வெள்ளிக்கிழமை**

      //அச்சச்சோ....... ஆனைக்கும் அடி சறுக்கிடுத்தே..... //

      உண்மை. நானும் உடலளவில் ஓர் யானை மட்டுமே. வெயிட் 93+ கிலோ உள்ளேன். இருப்பினும் அதனால் சறுக்கிடுச்சோ என தயவுசெய்து நினைக்க வேண்டாம்.

      //ஆவணி பொறந்து ரெண்டு நாள் ஆறது...//

      இது எனக்கும் மிக நன்றாகத் தெரியுமே.

      //ஆடி வெள்ளினு சொல்றேளே...//

      நான் எழுதும் இதையெல்லாம் மீண்டும் ஆவலுடன் வந்து படிச்சுப்பார்க்கிறீங்களா என டெஸ்ட் செய்ய மட்டுமே அவ்வாறு (தவறுதலாக) எழுதியிருந்தேன். :)

      நல்ல சமாளிப்பு என அங்கு நீங்கள் முணுமுணுப்பது எனக்கும் தெரிகிறது.

      //ஸாரி.... அதிகப்படியா பேசறேனோ....//

      இல்லை. உங்களைப்போல அதிகப்படியா பேசிக்கொண்டு என்னுடன் அரட்டை அடிப்பவர்களை மட்டுமே எனக்கு மிகவும் பிடிக்கும்.

      அதனால் மட்டுமே, மிகக்குறுகிய காலத்திற்குள் உங்களுடன் எனக்கு இவ்வளவு பிரியம் ஏற்பட்டு நம் நட்பு நன்கு வளர்ந்துள்ளது. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி மட்டுமே. வாழ்க !

      Delete
    2. நல்ல சமாளிப்பா..... குப்பற விழுந்தாலும்... மீசைல மண் ஒட்டாத....சமாளிப்பாக்கும். உங்களுக்குதான் மீசையே இல்லையேன்னு அடுத்த சமாளிப்பு வரும்.........

      Delete
    3. happy 19 August 2016 at 04:36

      //நல்ல சமாளிப்பா..... குப்பற விழுந்தாலும்... மீசைல மண் ஒட்டாத....சமாளிப்பாக்கும்.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

      //உங்களுக்குதான் மீசையே இல்லையேன்னு அடுத்த சமாளிப்பு வரும்.........//

      ஆமாம். உங்களைப்போன்ற மிக அழகான பெண்களுக்கு மீசை எப்படி இருக்க முடியும்?

      வயதுக்கோளாறினால் ஒருவேளை, மீசை வைத்துள்ளவர் மேல் ஆசை மட்டுமே ஏற்பட முடியும்.

      மிகச் சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள்.

      [அடுத்த சமாளிப்புக்கு எனக்கு அடி எடுத்தும் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றீங்க :))))) ]

      Delete
  9. நீங்க ரெண்டுபேரும் இன்னா பேசிக்கிடுறிங்க. வெளங்கும்படியா பேசிகிடுங்கஜி. மீ... ஐயோ..பாவம்லா....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 19 August 2016 at 04:26

      //நீங்க ரெண்டுபேரும் இன்னா பேசிக்கிடுறிங்க. வெளங்கும்படியா பேசிகிடுங்கஜி. //

      எங்களுக்குள் ஒருவரையொருவர் இன்னும் முழுமையாக விளங்கிக்கொள்ள தினமும் முயற்சித்து வருகிறோம். அது முன்னால் ஒருவழியாக முடியட்டும் முன்னா.

      //மீ... ஐயோ..பாவம்லா....//

      ஹாப்பி போல நீங்களும் ஹாப்பியாக இருங்கோ. எதற்குமே கவலையே படாதீங்கோ. தங்கள் இல்லத்துக் கல்யாணத்திற்கு இன்னும் ஐந்து வாரங்களே உள்ளன. தங்களுக்குத் தலைக்கு மேல் வேலைகள் இருக்கலாம். நினைவிருக்கட்டும். :)

      Be Happy ! :)))))

      Delete
    2. என்னிய ஏதுக்காக களட்டி வுடுறிங்க

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 19 August 2016 at 21:32

      //என்னிய ஏதுக்காக களட்டி வுடுறிங்க//

      அச்சச்சோ .... உங்களைப்போய் நான் கழட்டி விட முடியுமா?

      முன்னா எனக்கு முன்னாடியே நல்ல பெஸ்ட் ஃப்ரண்ட் ஆச்சே !

      முன்னா இல்லாவிட்டால் தினசரி பதிவுகள் ஏது? நாம் கூடி மகிழ்ந்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கும்மியும், கோலாட்டமும், கும்மாளமும் போட்டு மகிழும் முன்னா பார்க்தான் ஏது?

      அதனால் நான் ஏதும் கழட்டி விடுவதாக நினைத்துக் கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ்.

      ”தங்களுக்குத் தலைக்கு மேல் வேலைகள் இருக்கலாம். நினைவிருக்கட்டும்”, என நான் மேலே சொல்லியுள்ளது .... நீங்கள் மூன்று சகோதரிகளும் ப்யூட்டி பார்லர்க்குப் போய், மேக்-அப் செய்துகொண்டு, ஆளுக்கு பத்து வயதைக் குறைத்துக்கொண்டு வர வேண்டாமா? கை காலுக்கெல்லாம் மெஹந்தி போட்டுக்கொள்ள வேண்டாமா?

      உங்கள் அக்கா கல்யாணம் முடிந்ததும், உங்களுக்கும் மேரேஜ் லைன் கிளிர் ஆகிவிடுவதால், அடுத்து சட்டுப்புட்டுன்னு அதற்கான வேலைகளை சப்ஜாடாக பார்க்க ஆரம்பிக்க வேண்டாமா? :)

      அதைத்தான் இப்போதே நான் மேலே நினைவூட்டி உள்ளேனாக்கும்.

      எங்கெங்கும் திரும்பினும், எதைச் சொன்னாலும், மிகவும் படு ஷார்ப்பான இரண்டு கொம்புகளையும் துருத்திக்கொண்டு, மாடுகள் என்னை முட்ட வருகிறதே :)

      கடவுளே .... கடவுளே .... காப்பாத்துடாப்பா ஸ்வாமீ !

      Delete
    4. கிளிர் = கிளியர் (CLEAR)

      மேலே ஓர் வார்த்தை ’கிளியர்’ ஆக இல்லாமல் இப்படி எழுத்துப்பிழையாகி விட்டது. மிகவும் வருந்துகிறேன்.

      Delete
  10. கேள்வியின் நாயகனே - இந்தக்
    கேள்விக்கு பதிலேதய்யா?

    இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
    எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்
    எல்லோரும் பார்க்கின்றோம்

    (கேள்வியின்)

    பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று
    பாலருந்தும்போதா காளை வரும்?

    சிலரது வாத்தியத்தில் இரண்டு சத்தம் - அந்த
    இன்னிசையால் உனக்கு பிறக்கும் வெட்கம்
    தாலிக்கு மேலொரு தாலி உண்டா?

    வேலிக்குள்ளே ஒருவன் வேலி உண்டா?
    கதை எப்படி? அதன் முடிவெப்படி?

    (கேள்வியின்)

    தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை
    தர்ம தரிசனத்தை தேடுகிறான்

    அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
    அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?
    செல்வாளோ? செல்வாளோ?

    (கேள்வியின்)

    ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
    பார்த்துக்கொண்டால்...அவை
    ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?

    இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை
    இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?

    பேதம் மறைந்ததின்று கோவில் கண்ணே
    நமது வேதம் தனை மணந்து நடக்கும் முன்னே

    கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
    உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன?

    உடல் எப்படி?
    முன்பு இருந்தாற்படி...

    மனம் எப்படி?
    நீ விரும்பும்படி...

    (கேள்வியின்)

    பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்
    பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா

    பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
    பிரியத்துடன் பக்கத்திரு முருகா
    திருமுருகா...திருமுருகா...

    ReplyDelete
  11. படம்: அபூர்வ ராகங்கள்

    பாடியவர்: வாணி ஜெயராம்

    இசை: விஸ்வநாதன்

    -=-=-=-=-

    மிகவும் அர்த்தமுள்ள + பலருக்கும் பொருந்தக்கூடிய இனிய பாடல் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete