Wednesday 24 August 2016

தீராத விளையாட்டு பிள்ளை


11 comments:

  1. பக்கத்துவீட்டு மாமி நேயர் விருப்பம்

    ReplyDelete
    Replies
    1. பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
      நாரத் ஸைடுல ஜன்மாஷ்டமி அன்று ஸாயங்காலம் தையாண்டி னு ஒரு விளையாட்டு... ஒவ்வொரு தெருவிலும் வைப்பாங்க
      .
      ரெண்டு பில்டிங்க மத்தில நீ....ள....மா...கயிறு கட்டி அதில் மண்பானையில் தயிர் நிறப்பி இன்னொரு புறம் பரிசு பணம் விலை உயர்ந்த பொருட்களை கட்டி தொங்க விடுவாங்க. இளவயசு பசங்க பிரமிட் போல ஒருவர் மீது ஒருவர் ஏறி உயரத்தில் இருக்கும் தயிர் பானையை கம்பால் உடைக்கணும். பிரமிட் மேல ஏற விடாம மிடில் மிடில்ல அவங்க மேல தண்ணிய ஊத்தி வழுக்கி விழ வைப்பாங்க.. அப்படிம்யாராவது ஒருவர் மேலே ஏறி தயிர் பானை உடைத்து பரிசுகளை பகிர்ந்து கொள்வாங்க....
      ஹிந்தில தயிர்..... தஹி..னு சொல்வாங்க அதான் தையாண்டி....
      ஸ்ஸ்ஸ்ஸுஸ்.... அப்பாடா.....

      Delete
  2. தஹி ன்னா தயிர் ஹண்டினா பானை.
    . முதலலாம் தஹி ஹண்டினுதான் சொல்லிகிட்டு இருந்தாங்க.. பேச்சு வழக்குல தையாண்டினு மாறி போச்சு.. இத பத்தி தெரிஞ்சுக்க ஹிந்தி பட பாடல் ஒன்னு இருக்கு அத போடு முன்னா கோவிந்தா ஆலாரே....ஆலா.....

    ReplyDelete
  3. மிகவும் இனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    பாலோ, தயிரோ, மோரோ, வெண்ணெயோ, நெய்யோ, உப்புச்சீடை, வெல்லச்சீடை, முறுக்கு, தட்டை, லாடு போன்ற பக்ஷணங்களோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் படைக்கலாம். அத்துடன் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமான அவல், நவாப்பழம் போன்றவைகளும் நைவேத்யம் செய்வது உண்டு. இவற்றுடன் தாகத்திற்கு அருந்த சுத்தமான ஜலத்தையும் மறக்காமல் வைக்க வேண்டும்.

    பக்தி சிரத்தையுடன் கொடுக்கப்படும் பத்ரம், புஷ்பம், பலம், தோயம் முதலிய எளிய பொருட்களிலேயே இன்பம் கொள்பவன் பகவான்.

    பக்தியுடன் ஓர் துளசி இலையை அர்பணித்தாலே போதும்.

    ஒரு கைப்பிடி அவல் மட்டுமே அன்புடன் கொண்டு வந்து கொடுத்த ஏழைக் குசேலனை குபேரனாக்கியவன் ஸ்ரீ கிருஷ்ணன்.

    அதைப்பற்றிய மேலும் விபரங்கள் இதோ இந்த என் பதிவினில் கொடுத்துள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html

    ReplyDelete
  4. டீச்சரம்மா சொல்லியுள்ள செய்திகளான தஹி + தஹி ஹண்டி, கெட்டித்தயிர் அவர்கள் கையால் வாங்கிச் சாப்பிட்டதுபோல ஜோராக உள்ளன.

    இங்கு தஞ்சை மாவட்டத்தில் (திருச்சி கல்லணைக்கும் வெகு அருகேதான்) திருக்காட்டுப்பள்ளிக்குப் பக்கம் ’வரஹூர்’ என்ற கிராமம் உள்ளது. அங்கு ஓர் மிகவும் சக்திவாய்ந்த கிருஷ்ணன் கோயில் உள்ளது. ஸ்ரீ வேங்கட கிருஷ்ணப்பெருமாள் என்பது அவரின் திருநாமமாகும்.

    சாக்ஷாத் பகவான் மஹாவிஷ்ணு ஸ்வேத வராஹமாகத் (வெள்ளைப் பன்றியாக) தோன்றி, காட்சியளித்து, மறைந்த இடத்தில் இந்தக்கோயில் கட்டப்பட்டுள்ளது. மிகப்பிரபலமான கோயில்.

    இங்கு ஆண்டுதோறும் ஜென்மாஷ்டமியில் இரவு முழுவதும் விடியவிடிய நடைபெறும் உரியடி உத்ஸவம் உலகப் புகழ் பெற்றதாகும்.

    மேலே டீச்சர் சொன்னதுபோலவே, ஓர் வழவழப்பான மிக உயரமான வழுக்கு மரத்தின் உச்சியில் பானையைக் கட்டியிருப்பார்கள். அதில் பக்ஷணங்களுடன் நிறைய பணமும் வைத்திருப்பார்கள். பிரமீட் போல சிறுவர்கள் பலரும் குவிந்து ஒருவர் மேல் ஒருவராக ஏறி, வழுக்க மரத்தின் உச்சியை அடைய முயற்சிப்பார்கள். அடிக்கடி அவர்கள் மீதும் அந்த வழுக்கும் மரத்தின் மீதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படும். வழுக்கி வழுக்கி விழுந்துகொண்டே இருப்பார்கள். மிகவும் தமாஷாக இருக்கும்.

    கடைசியில் யாரோ ஒருவர் மட்டும் வீர தீரமாக மேலே ஏறி வெற்றி பெறுவார். அதற்குள் இரவு முழுவதும் முடிந்து விடியற்காலம் ஆகிவிடும்.

    இந்த கோயிலில் குழந்தைவரம் வேண்டி, பிரார்த்தித்துக்கொள்வதும் உண்டு. இதைப்பற்றியும் என் பதிவினில் சுவாரஸ்யமாக எழுதியுள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html

    தலைப்பு: மழலைகள் உலகம் மகத்தானது.

    ReplyDelete
  5. இந்த பாடலும் ரொம்ப நல்லா இருக்குது. ஒரே பதிவில் நிறய பாடல் போட்டதும் நல்லா இருக்குன்னு மட்டும்தான் சொல்ல முடியுது..

    ReplyDelete
  6. எத்தனை கோவில் ஏறி இறங்கினோம் எத்தனை சாமிகளிடம் வேண்டினோம். ஏன் எந்த சாமியும் இறக்கம் காட்டல....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //எத்தனை கோவில் ஏறி இறங்கினோம் எத்தனை சாமிகளிடம் வேண்டினோம். ஏன் எந்த சாமியும் இ-ர-க்-க-ம் காட்டல....//

      ஸ்ரீமத் பாகவதத்தில் ‘கோகர்ணன்’ என்ற மஹாத்மாவின் கதை ஒன்று வருகிறது. அதனைத் தேடிப்பிடிச்சு தயவுசெய்து படியுங்கோ, ப்ளீஸ். அவனுக்கு காதுகள் இரண்டும் கோ மாதாவான பசுவின் காதுகள் போல இருக்கும். அதற்கான குறிப்பிட்ட காரணமும் அதில் சொல்லப்பட்டு இருக்கும்.

      முறைப்படி தனக்கு மகனாகப் பிறக்க வேண்டியவன் இவனே என்று அறியாத ஒரு பிராமணர், இவனிடம் (கோகர்ணனிடம்) தன் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள துக்கங்களைச் சொல்லி அழுவார். அதற்கு நிவாரணமும் கேட்பார்.

      யார் பிள்ளையையோ தன் பிள்ளை எனச்சொல்லி ஏமாற்றிய கொடுமைக்காரியான (ராட்சச குணங்கள் கொண்ட) தன் மனைவியாலும், அந்தப்பிள்ளையாலும் அவர் பட்டுவரும் கஷ்டங்களே அவர் கோகர்ணனிடம் பகிர்ந்துகொள்ளும் அவரின் துக்கமாகும்.

      அதனால் நமக்கு இன்று என்ன கிடைத்துள்ளதோ, அதையே நம் ‘ப்ராப்தம்’ என நினைத்து, மகிழ்ந்து கடவுளுக்கு அதற்காக நன்றி சொல்லி வாழ்வோம் ..... ராஜாத்தி.

      நான் உங்களுக்கு ஏற்கனவே பலமுறை பல்வேறு ஆறுதல்கள் சொல்லிவிட்டேன். இப்போதும் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். ஏதோ சமாதானப்பேச்சு மட்டுமே என நினைக்காதீங்கோ.

      பிள்ளைப்பேறு கிடைக்காதவர்களுக்கு அந்த ஒரே ஒரு மனக்குறை மட்டுமே என்றைக்கும் மனதில் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் பிள்ளை பெற்றவர்களுக்கு அந்தப்பிள்ளைகளாலேயே தொல்லைகள் நிரந்தரமாக இருப்பதை கண்கூடாக இந்தக் கலியுகத்தில் நாம் காண முடிகிறது. மனதால் அவர்களை விலக்கவோ, நாம் விலகிக்கொள்ளவோ இயலாத பிராரப்த கர்மாவினால் ஆன பந்தங்கள் இவை.

      நம் மிகப் பெருமை வாய்ந்த பாரத நாட்டில், ஏன் இன்று, இத்தனை முதியோர் இல்லங்கள் பெருகியுள்ளன என ஒரு நிமிடம் சிந்தித்துப்பாருங்கோ. உங்களுக்கே எல்லாமே புரியவரும்.

      இங்குள்ள என் அன்புத் தோழி ஒருத்திக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள். நன்கு வளர்த்து, காலேஜ் படிக்க வைத்து முடித்தாள். அவர்கள் இருவருக்கு 2 வயது வித்யாசம் மட்டுமே.

      அவர்கள் இவருமே தங்களுக்கு இறக்கைகள் முளைத்ததும், எவனோ இருவனை ஆளுக்கு ஒருத்தியாக இழுத்துக்கொண்டு, வீட்டில் தன்னை அன்புடன் இதுவரை வளர்த்து ஆளாக்கிய தாயிடம் கூட சொல்லிக்கொள்ளாமல், வீட்டை விட்டே ஓடி விட்டார்கள்.

      அதுவும் ஜாதிவிட்டு ஜாதியாக இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதில், என் தோழியான இவளுக்கு வருத்தமும் அழுகையும் மட்டுமே மிச்சம். தினமும் என்னிடம் அழுது புலம்பிக்கொண்டே இருக்கிறாள். எனக்கே இதில் மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவளுக்கும் (அதாவது அந்த என் இனிய தோழிக்கும்) நானே ஆறுதல் கூற நேர்ந்ததுள்ளது.

      அதனால் ராஜாத்தி ...... மேலும் மேலும் நீங்க இதை நினைத்து வருந்துக்கொண்டே இருக்கக்கூடாது. போனது போனது தான். Fast is fast. Future என்பது என்றுமே நம் கையில் இல்லை. இன்றைய பொழுது (Present ..... கடவுளால் கொடுக்கப்பட்டுள்ள Present ..... Gift ..... நமக்கு) மட்டுமே நிச்சயம்.

      அதனை நம் வாழ்க்கைத்துணையுடனும், இதர நலம் விரும்பிகளான உண்மை நட்புக்களுடனும் மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடி மகிழ்வோம். ஓக்கேயா ?????

      Delete
    2. மேற்படி என் பின்னூட்டத்தில் ஓர் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது. அதற்காக வருந்துகிறேன்.

      //அவர்கள் இவருமே தங்களுக்கு இறக்கைகள் முளைத்ததும்,//

      =

      அவர்கள் இ-ரு-வ-ரு-மே தங்களுக்கு இறக்கைகள் முளைத்ததும்,

      Delete
  7. படிச்சதுமே மனசு ரிலாக்ஸ் ஆச்சு.. எதுவும் நம் கையில் இல்லைதான். நம் வாழ்க்கை ஏற்களவே இப்படித்தான் இருக்கணும்னு மேலே உள்ளவன் தீர்மானித்துவிட்டான்தானே.. பிறகு எதுக்கு வேண்டுதல் பிரார்த்தனைகள் எல்லாம்.......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 00:45

      //படிச்சதுமே மனசு ரிலாக்ஸ் ஆச்சு..//

      மிக்க மகிழ்ச்சி. என்னுடைய எழுத்துக்களைப் படிச்சதும் மனசு கொஞ்சமாவது ரிலாக்ஸ் ஆகணும் .. அதுவே என் எதிர்பார்ப்பும் கூட.

      //எதுவும் நம் கையில் இல்லைதான். நம் வாழ்க்கை ஏற்கனவே இப்படித்தான் இருக்கணும்னு மேலே உள்ளவன் தீர்மானித்து விட்டான்தானே..//

      கரெக்டும்மா. வெரி வெரி கரெக்ட்.

      //பிறகு எதுக்கு வேண்டுதல் பிரார்த்தனைகள் எல்லாம்.......//

      நமக்கு எதையும் தாங்கும் இதயமும், மன நிம்மதியும் கிடைக்க மட்டுமே, நாம் பகவானைப் பிரார்த்தனைகள் செய்ய வேண்டியுள்ளது.

      அவன் திருவடிகளே சரணம் என நினைத்து, மனம் ஒருங்கிணைந்து, உள்ளம் உருகி பிரார்த்தித்தால், நமது மனசு இலவம் பஞ்சு போல லேஸாகிப்போவதை நம்மால் உணர முடியும்.

      Delete