Sunday 27 March 2016

உன்னை காணாத கண்ணும்

9 comments:

  1. ஹய்யோ........இந்தபாட்டு என் க்ளோஸ் ஃபரண்ட் மெயிலில் அனுப்பிதந்தாங்க. ரொம்ப ரசிச்சு கேட்டேன். ஆனா என்மெயிலில எல்லா மெஸேஜையும் டெலிட் பண்ண வேண்டிய கட்டாயம் வந்திச்சு. அப்போ அவங்க அனுப்பிய மெஸேஜ ப்ட்டு சினிமா மற்ற லிங்க்ஸ் எல்லாமே டெலிட் ஆயிடுத்து. இப்ப இந்த பாட்டு இங்க பாத்ததும் கேட்டதும் மனசெல்லாம் என்னமோ பண்ணுது.....

    ReplyDelete
  2. ஓ......நல்லது.. இப்ப இங்க வந்து எத்தன வாட்டி வேணும்னாலும் கேட்கலாமே.....

    ReplyDelete
  3. 1965-இல் வெளிவந்த ‘இதயக்கமலம்’ என்ற படத்தில் P.சுசிலா குரலில், எனக்கு மிகவும் பிடித்தமான அர்த்தமுள்ளதோர் பாட்டு இது. இந்தப்படம் வெளிவந்தபோது என் வயது: 15 மட்டுமே.

    இதில் நடித்திருந்தவர்கள்: எங்கள் ஊர் திருச்சி ரவிச்சந்திரன் + நம் புன்னகை அரசி K R விஜயா.

    கீழே கொடுத்துள்ள அந்தப் பாடல் வரிகளில் உள்ள அர்த்தத்தை மீண்டும் ரஸித்துப் படித்துப்பாருங்கோ:


    உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல

    உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல

    இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
    இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
    காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
    காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

    உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல

    ஒரு தெய்வமில்லாமல் கோவிலுமில்லை
    ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
    நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
    தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

    உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல

    என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
    வாரியணைத்தேன் ஆசையினாலே
    நீ தருவயோ நான் தருவேனோ
    யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

    உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல

    -=-=-=-=-

    இந்தப் பாடலைக்கேட்கும் போதெல்லாம் என் மனசு அப்படியே உருகிப்போய் விடும். எது எதையெல்லாம் நினைத்து ஏங்கும்.:(

    ReplyDelete
  4. பாட்டின் வரிகள் நெஞ்சைத் தொடுது. நன்றி......

    ReplyDelete
  5. குருஜ ஒங்ட ஆளுஅகா பாட்ட முளுசா சொல்லி போட்டீகளா.. இருக்கட்டும் இருக்கட்டும்.நா இங்கூட்டு வந்துபிட்டது ஒங்களுக்கொன்னும் தொந்தரவு இல்லதானே. மொதகவே ஒங்கட கிட்டால சொல்லினன். நா இங்கிட்டு வந்துபிட்டா ரொம் அலப்பர பண்ணி போடுவேனுபிட்டு.

    ReplyDelete
  6. நீங்க இங்க வந்ததில் ஒரே கலகலப்பாக இருக்குது. அடிக்கடி வாங்க முருகு.

    ReplyDelete
  7. முருகு ஏம்மா இப்படில்லாம் பேசுரே. நீ இங்க வந்த பிறகுதான் பின்னூட்டப்பெட்டியே கல கலப்பா இருக்கு.ரெகுலரா வந்து பாட்டுக்கேளு டான்ஸ் ஆடு. எஞ்சாய் பண்ணு. ஓ..கே..வா???

    ReplyDelete
  8. ஹா ஹா சும்மா சொல்லினிக டீச்சரம்மா....முன்னாவும் அதியே சொல்லிகினா. நெசம்மாலுமா சொல்லிகினீக???// நா வந்துபிட்டா கலகலப்பா இருக்குதா??/?

    ReplyDelete
  9. ஆமா முருகு..... நீ இங்கிட்டு வந்த பொறவாலதான கும்மி கோலாட்ட கலகலப்பெல்லா வந்திருக்கு....

    ReplyDelete