Monday 28 March 2016

பொன்னை விரும்பும் பூமியிலே

24 comments:

  1. ஆஹா, மிகவும் அருமையான எனக்குப் பிடித்தமான, இனிமையானதோர் பாடல்.

    படம்: ஆலயமணி. நடிப்பு: சிவாஜி + சரோஜாதேவி

    மிகவும் அருமையான சிக்கலான காதல் கதை அது. சிறு வயதில் பார்த்த படம். ரொம்ப நன்னா இருக்கும்.:)

    >>>>>

    ReplyDelete
  2. 1962 இல் எனக்கு 12 வயதாக இருக்கும்போது வந்தபடம் இது. பிறகு நிறையமுறை நான் தியேட்டரில் பார்த்துள்ள படம்.

    பாடல்: கண்ணதாசன். பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்.

    வானம்பாடி என்ற புனைப்பெயரைச் சொல்லி சரோஜாதேவி, எஸ்.எஸ்.ஆர் ஐக் காதலிப்பாள். ஆனால் அவள் பெயர் ’மீனா’. அவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய முதலாளியான சிவாஜி ‘மீனா’ வைக் காதலிப்பார். அவளையே கல்யாணம் செய்துகொள்ளவும் விரும்புவார்.

    சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சிக்கி சரோஜாதேவி தவிப்பாள். சிவாஜியுடன் அவள் ஓர் பணிப்பெண்ணாக வாழவும் நேரிடும். சிவாஜியும் எஸ்.எஸ்.ஆரும் ஏற்கனவே நெருங்கிய நண்பர்கள்.

    வானம்பாடியும் மீனாவும் ஒருத்தியே என்பது தெரியவரும் படத்தின் கடைசி காட்சிவரை கதை மிகவும் த்ரில்லிங்காக இருக்கும்.

    படம் என்றால் அதுதான் படம். நடிப்பு என்றால் அது தான் நடிப்பு. இப்போது வரும் படங்களெல்லாம் வெறும் குப்பைகள்.

    ReplyDelete
  3. ஆஹா என்ன சுறு சுறுப்பு. இவ்வளவு சீக்கிரம் வந்துட்டிங்க?!!!! ஹிந்திபாட்டு மட்டும் டோட்டு "யாரோ" வை திருப்தி பண்ண சொன்னிங்க. இப்படி ஜகா வாங்கினா எப்படி)))))))))????. நீங்களும் வரணும் உங்க "யாரோ" வும் வரணும்... அதான் ஒரு தமிழ்...ஒரு ஹிந்தி.....

    ReplyDelete
  4. படத்தை ரொம்ப ரசித்து பாத்திங்களோ. கதையையே சுருக்கமா சொல்லிட்டிங்க. இப்படி அழகான பின்னூட்டம்தான் நல்லா ரசிக்க முடியுது. இப்படில்லாம் எழுத உங்களால மட்டும்தான் முடியும்........( ஐஸ் வைப்பதாக எண்ண வேண்டாம்)...... உண்மையைத்தான் சொன்னேன்.....

    ReplyDelete
  5. ரியலி ஒண்டர்ஃபுல் ஸாங்க். லைக் இட் வெரிமச்...தாங்க்யு வெரிமச்....

    ReplyDelete
  6. பொன்னை விரும்பும் பூமியிலே
    என்னை விரும்பும் ஓருயிரே
    புதையல் தேடி அலயும் உலகில்
    இதயம் தேடும் என்னுயிரே

    (பொன்னை)

    ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
    ஆலயமணியின் இன்னிசை நீயே (2)
    தாய்மை எனக்கே தந்தவர் நீயே
    தங்க கோபுரம் போல வந்தாயே
    புதிய உலகம் புதிய பாசம் புதிய தீபம் கொண்டு வந்தாயே

    (பொன்னை)

    பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
    பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் (2)
    அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன் அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
    இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே

    (பொன்னை)

    ஆல மரத்தின் விழுதினைப் போலே
    அனைத்து நிற்கும் உறவு தந்தாயே (2)
    வாழைக் கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போலே வாழ வைத்தாயே

    உருவம் இரண்டு
    உயிர்கள் இரண்டு
    உள்ளம் ஒன்றே என்னுயிரே

    (பொன்னை)

    ReplyDelete
  7. அர்த்தம் புரிஞ்சுண்டு கேக்கும்போது நல்லா ரசிக்க முடியறது... தாங்க்யூ........

    ReplyDelete
  8. சிவாஜியும், எஸ்.எஸ்.ஆரும் நெருங்கிய நண்பர்களானதால், தங்கள் காதலைப்பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் இடம் சூப்பராக இருக்கும்.

    “என் காதலி வானம்பாடியைப் போல ஓர் அழகியை இந்த உலகத்திலேயே பார்க்க முடியாது”, என்பார் எஸ்.எஸ்.ஆர். சிவாஜியிடம்.

    “போடா முட்டாள், நான் காதலிக்கும் என் மீனா தான் உலக அழகியாக்கும்” என்பார் சிவாஜி எஸ்.எஸ்.ஆரிடம்.

    வானம்பாடியும் மீனாவும் ஒருத்தியே (சரோஜாதேவியே) தான் என்பது இந்த இரு நண்பர்களுக்கும் தெரியவே தெரியாது. அதுதான் கதையில் இறுதிவரை உள்ள மிகப்பெரிய சுவாரஸ்யமே. :)

    சிவாஜி மிகப்பெரிய கோடீஸ்வரன் + எஸ்டேட் முதலாளி அந்தப் படத்தில். சரோஜாதேவி, எஸ்டேட்டில் வேலைபார்க்கும், மிகச் சாதாரண கூலித்தொழிலாளியின் மகள்.

    இன்னும் பலவித சஸ்பென்ஸ்கள் + முடிச்சுகள் இந்தக் கதையில் உள்ளன. ஆனாலும் நான் அவற்றை இங்கு சொல்ல விரும்பவில்லை.

    மொத்தத்தில் மிக அருமையானதோர் காதல் கதை. தர்மசங்கடமான காட்சிகள்.

    இந்தப்படத்தில் வரும் எல்லாப்பாட்டுகளுமே அருமை. மொத்தம் எட்டு பாட்டுகள் என ஞாபகம்.

    மேலும் மூன்று இதோ:

    ”கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா ...
    கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?”
    =====
    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே .....
    =====
    சட்டி சுட்டதடா கை விட்டதடா
    புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
    நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
    =====

    ReplyDelete
  9. நல்ல ரசனையான ஆளுதான் நீங்க. இத்தனை வருடங்கள் ஆனாகூட எல்லாவற்றையும் நினைவில் வச்சிருக்கீங்களே. க்ரேட்... உங்க இன்னொரு சண்டிக்குதிரையையும் இங்க இழுத்துட்டு வாங்க ஸார்.

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 29 March 2016 at 01:28

      //நல்ல ரசனையான ஆளுதான் நீங்க. இத்தனை வருடங்கள் ஆனாகூட எல்லாவற்றையும் நினைவில் வச்சிருக்கீங்களே. க்ரேட்...//

      எனக்கு மனதுக்குப் பிடித்துப்போன சம்பவங்கள் / நிகழ்ச்சிகள் / கதைகள் / கற்பனைகள் / நம்மாளு போன்ற பிறருடனான ஜாலியான மின்னஞ்சல்கள் முதலியன மறக்கவே மறக்காது, எப்போதும் என் நினைவலைகளில் அவை இருந்துகொண்டே இருக்கும்.

      //உங்க இன்னொரு சண்டிக்குதிரையையும் இங்க இழுத்துட்டு வாங்க ஸார்.//

      அது இப்போ மிகவும் ஜாலியா தன் கல்யாணக்கனவுகளில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டு இருக்குது.

      என் பதிவுகள் பக்கமே இப்போதெல்லாம் அதிகமாகக் காணோம். எதற்கும் நான் சொல்லிப்பார்க்கிறேன்.

      இங்கு அது வந்தால் மீண்டும் நம்மாளுக்கும் அவளுக்கும் காண்டாகி குழாயடிச்சண்டை ஆரம்பிக்காமல் இருக்கணும். :)

      Delete
  10. ஹாஹா..... கல்யாண கனவில் இருக்கும் அவங்களுக்காகவும் சூப்பரா பாட்டு போடுறேன்.இங்கயும் உங்காளும் முருகுமின்னலும் முட்டிகிட்டாங்கனா நா அவங்களை சேத்து வச்சுடுறேன்

    ReplyDelete
  11. குருஜி நீங்க சொல்லிபோட்டா நா வராம இருந்துகிடுவனா?????? பாட்டெல்லா ஓ.. கே.. தா..... ஆனாக்க குருஜி இந்த சிவாஜி எம். சி..ஆரு.. இவுகள அல்லா ஹீரோவா ஏத்துகிட ஏலல. பொறக்கும் போதே வயசாளியா பொறந்திருப்பாகளோ?????? இப்பத்தி ஹீரோக்கள பாருங்க எம்பூட்டு ஹாண்ட்ஸம் ஸ்மார்டா இருக்காக......ப்ளாக்&ஒயிட் போர்.... ஆனாகூடி பாட்டு நல்லாதா இருக்குது...

    ReplyDelete
  12. http://gopu1949.blogspot.in/2016/03/8.html?showComment=1459316146728#c2455864758021133540

    இதில் உள்ள முருகுவின் பின்னூட்டத்தையும், அதற்கான என் பதிலையும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் படிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அதை அப்படியே கீழேயும் இங்கு கொடுத்துள்ளேன்.

    -=-=-=-=-

    வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on the post "ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 8":

    mru March 30, 2016 at 10:30 AM

    வாங்கோ முருகு, வணக்கம். செளக்யமா, சந்தோஷமா இருக்கீகளா? அம்மி நலமா? அண்ணன் + அண்ணி நலமா?

    //நட்சத்திரங்கலா சூப்பரா சொலிக்குது.//

    மிக்க மகிழ்ச்சி.

    //அது இன்னா சூரல் நாக்காலி. ஏதுமே வெளங்கிகிட ஏலலியே..//

    ’சூரல்’ என்றால் ’பிரம்பு’ என்று பொருள்.

    சூரல் நாற்காலி = பிரம்பினால் செய்யப்பட்ட நாற்காலி.

    இப்போ வெளங்கிட ஏலிச்சா? :)

    //இங்கூட்டும் ஒரு வயசாளி படம்தா போட்டிக..//

    எழுத்தாளர்களில் சிலர் பிற்காலாத்தில் வயசாளிகளாக இருக்கக்கூடும் அல்லவா. அவர்களும் என்றோ ஒருநாள் உங்களைப்போல இளமையாக இருந்தவர்கள் மட்டுமே என்பதை எண்ணிப்பாருங்கோ, முருகு. என்றைக்குமே ஒருவர் இளமையுடன் இருக்க முடியாது அல்லவா?

    //ஆமா ஒரு டவுட்டு மிஸ்டேக் பண்ணிகிட கோடாது வெளங்கிச்சா????????//

    சரி. ஓரளவு விளங்கிக்கிட்டேன்.

    //ஒங்கட ஆளக்காணோமே. ரெண்டு பேத்துக்கும் முட்டிகிச்சா????????.......//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    அவர்கள் இங்கு வராததில் எனக்கும் மனசுக்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது. அழுகையே வருகிறதாக்கும்.

    அவங்க ஏன் இங்கு வருவதில்லை என எனக்குத் தெரியலையே முருகு. நான் யாரையும் இந்த என் தொடருக்கு வாங்கோ என வெற்றிலை-பாக்கு வைத்து அழைப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அதனால் ஒருவேளை என் மீது கோபமாக இருக்குமோ என்னவோ?

    ஏன் வரவில்லை? என்று நீங்களே அவர்களிடம் கேட்டு எனக்கும் பதில் சொல்லுங்கோ, முருகு.

    தங்களின் அன்பான வருகைக்கும், வழக்கம்போல அலம்பலான இயல்பான கேள்விகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், முருகு.

    அன்புடன் குருஜி கோபு

    -=-=-=-=-

    ReplyDelete
  13. ஸார் நீங்க முருகு பத்தி சொன்னப்போ சாதாரணமாதான் எடுத்துகிட்டேன். ஐயோ தூள் கெளப்புறாங்க. சிவாஜி.. எம்ஜிஆர் பொற்கும்போதே வயசாளியா பொறந்திருப்பாங்களோன்னத படிச்சதுமே சிரிப்ப அடக் முடியல. நல்ல ஃப்ரெண்டுதான்..... முருகு வருகைக்கு நன்றிமா.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 29 March 2016 at 23:13

      //ஸார் நீங்க முருகு பத்தி சொன்னப்போ சாதாரணமாதான் எடுத்துகிட்டேன். ஐயோ தூள் கெளப்புறாங்க. சிவாஜி.. எம்ஜிஆர் பொற்கும்போதே வயசாளியா பொறந்திருப்பாங்களோன்னத படிச்சதுமே சிரிப்ப அடக் முடியல. நல்ல ஃப்ரெண்டுதான்..... முருகு வருகைக்கு நன்றிமா.....//

      போகப்போகப் பாருங்கோ. முருகுவின் அலம்பல் தாங்க முடியாது. நமக்கு அடிக்கடி சிரிப்பாணி பொத்துக்கும் :) இனிமேல் உங்களுக்கு ஆச்சு, முருகுவுக்கு ஆச்சு, நம்மாளுக்கு ஆச்சு.

      நான் எதிலும் பட்டுக்கொள்ளாமல் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துவிட்டுச் செல்வேன். - VGK :)))))

      Delete
  14. எப்டி எப்டி வேடிக்கை பார்த்துட்டு போவீங்களா?????? விட்டுடுவோமா என்ன????? எங்களை இணைக்கும் பாலமே நீங்கதானே.......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து.30 March 2016 at 00:15

      //எப்டி எப்டி வேடிக்கை பார்த்துட்டு போவீங்களா?????? விட்டுடுவோமா என்ன????? எங்களை இணைக்கும் பாலமே நீங்கதானே.......//

      நான்தான் உங்க மூவருக்கும் சூப்பரா ஒரு நீண்ட அழகிய பாலம் போட்டுக்கொடுத்துட்டேனே. நீங்க மூன்று பேரும் அதில் ஜாலியாக தனித்தனிக் காரில் பயணம் போங்கோ.

      இந்தப்பக்கம் ஒரு மெஹருன்னிஸா அந்தப்பக்கம் இன்னொரு மெஹ்ருன்னிஸா, நடு காரில் மஹாராணி போல ’நம்மாளு’

      நீங்க ஜாலியா உல்லாசப் பயணம் போவதைப் பார்த்து மகிழப்போவது நான். அப்பப்போ நேரம் கிடைக்கும்போது வந்து நிச்சயமாக இங்கு நானும் எட்டிப்பார்ப்பேன். ஏதேனும் கொஞ்சம் எழுதிவிட்டும் போவேன். கவலைப்பட வேண்டாம்.

      இனி நாம் எல்லோரும் ஒருவரை ஒருவர் தினமும் சந்தித்து மகிழப்போகும் பூங்காவாக (PARK) இருக்கப் போகிறது இந்த ’சிப்பிக்குள் முத்து’ என்ற வலைத்தளம். மகிழ்ச்சியே. :)

      Delete
    2. ஆமா ஸார் சரியா சொன்னீங்க. நாம் ஒருவரை ஒருவரு சந்தித்து மகிழப்போகும் பூங்காவாக இந்த சிப்பிக்குள் முத்துக்கு பெருமை கிடைச்சிருக்கு.......

      Delete
  15. முருகு உங்க குருஜி உன்னய தூது விடராங்களோ? அவங்களுக்கே தெரியும் தமிழுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்னுட்டு. அதுவும் இதுபோல் போனதலைமுறை எழுத்தாளர்கள் அவர்களின் கனமான எழுத்துக்களை என்னால படிச்சு புரிந்து கொள்ள முடியாதும்மா.சும்மா பேருக்குனு அங்கபோயி என்னத்த கமெண்ட் போட முடியும் இல்லியா? அதான் அந்தப்பக்கம் போகவே இல்ல. ஆமா உனக்கு அங்க எதாவ்துபுரிந்ததா??//???.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 30 March 2016 at 22:28

      //முருகு உங்க குருஜி உன்னய தூது விடராங்களோ?//

      வேறு வழி? :(

      //அவங்களுக்கே தெரியும் தமிழுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்னுட்டு. அதுவும் இதுபோல் போனதலைமுறை எழுத்தாளர்கள் அவர்களின் கனமான எழுத்துக்களை என்னால படிச்சு புரிந்து கொள்ள முடியாதும்மா.சும்மா பேருக்குனு அங்கபோயி என்னத்த கமெண்ட் போட முடியும் இல்லியா? அதான் அந்தப்பக்கம் போகவே இல்ல. ஆமா உனக்கு அங்க எதாவ்துபுரிந்ததா??//???.//

      ஆமாம், நம் முருகு மட்டும் அதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டா கமெண்ட்ஸ் போடுது? ஏதேதோ ஜாலியா குருஜிக்காக பதிவுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எழுதிட்டுப் போகுது.

      அவையும் படிக்க எனக்கு மிகுந்த சுவாரஸ்யமாக உள்ளது.

      ஏதேனும் பெயருக்கு இரண்டுவரியாவது எழுதிவிட்டுப்போய் எனக்கு மகிழ்வளிக்க ‘மனசு இருந்தால் மார்க்கம் உண்டு’. பிறகு உங்கள் இஷ்டம். இதில் என் கட்டாயமோ வற்புருத்தலோ ஏதும் இல்லை.

      இந்த ஒரு தொடர் முடிந்ததும் நானும் ஸ்லோவாக பதிவுலகிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள உள்ளேன். புதிய பதிவுகள் ஏதும் என்னிடமிருந்து வெளிவர வாய்ப்புகள் இல்லை. அதற்கு மிக முக்கிய காரணம் என் தீவிரமான ரஸிகை ஒருவர் இனி அங்கு பின்னூட்டமிட வரப்போவது இல்லை என்பதுதான். :(

      ஆக்சுவலாக, என்னிடம் தயாராக வைத்திருந்த இந்தத் தொடரையே, அந்தத் துயரச் செய்தி கேட்டபின் நான் வெளியிட விரும்பவில்லை.

      ஏதோ ஒரு தாட்சிண்யம் + நிர்பந்தம் .... வெளியிடும்படியாக ஆகி விட்டது. அதனால் இத்துடன் ஓவர்.

      இருப்பினும் ’சிப்பிக்குள் முத்து’ PARK பக்கம் மட்டும் அவ்வப்போது தொடர்ந்து வருவேன்.

      Delete
    2. இங்க தொடர்ந்து வருவேன்னு நீங்க சொன்னதே சந்தோஷமா இருக்கு. தினமுமே பாட்டு போடுவேன். ஸோ....... நீங்க தினமும் வரணும்.......

      Delete
  16. எது எப்பூடியோ அதெல்லா எனிக்குத்தெரியாது குருஜி தெனத்துக்கும் இங்கின வந்தாகாட்டியும் நானு வந்திகிடுவன் .அல்லா காட்டி நானு ஜூட் வுட்டுப்போடுவன்.........

    ReplyDelete
  17. குருஜி......... நல்லா கேட்டுகிடுக. இந்த குதுர சண்டிதனம் பண்ணுது. நீங்க வராகாட்டி அதுவும் இங்கின வராதாம்ல....

    ReplyDelete
  18. ஆமாலா. நாம அல்லாருமே இங்கூட்டு தெனத்துக்கும் வந்தீ போட்டு ஆஜர் சொல்லி போடோணும் அல்லா காட்டி டீச்சரம்மா பெரம்ப எடுத்துகிடுவாக........

    ReplyDelete