Saturday, 26 March 2016

தமிழுக்கும் அமுதென்றுபேர்

23 comments:

  1. மனதை மயக்கும் அழகான இனிமையான தமிழ்ப்பாடல், தமிழைப்பற்றிய பாடல், தமிழின் சிறப்பினைச்சொல்லும் பாடல். பகிர்வுக்கு மிக்க நன்றீங்கோ.

    ’யாரோ’ வருவதற்குள் நான் முதலில் பின்னூட்டமிட நினைத்தேன். என்ன ஆச்சோ? பார்ப்போம். :)

    ReplyDelete
  2. தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்!

    தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
    தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
    தமிழுக்கு மணமென்று பேர்!

    இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
    தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
    தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
    சுடர்தந்த தேன்

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
    வயிரத் தின் வாள்

    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்

    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்.

    ‘யாரோ’ அவர் ‘யாரோ’ வுக்காக இந்தப்பாடல் என்னால் இங்கு எழுதி அனுப்பப் பட்டுள்ளது. :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, இன்று நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊ ! :)

      மிக்க நன்றி.

      Delete
  3. ஸார் வாங்க. அந்த " யாரோ" வ வம்பிழுத்துகிட்டே இருக்கீங்களே.
    அப்பறம் நான் மறுபடயும் ரெண்டு வாட்டி மெயில் அனுப்பினேன். கெடைக்கலியா????? அதுல என்னைப்பத்தி சொல்லியிருந்தேன். அப்படியும் என்னை "திருமதிகள்" லிஸ்டுல சேத்துட்டீங்களே.....

    ReplyDelete
    Replies
    1. //சிப்பிக்குள் முத்து. 26 March 2016 at 21:32
      ஸார் வாங்க. அந்த " யாரோ" வ வம்பிழுத்துகிட்டே இருக்கீங்களே.//

      எங்களுக்குள் நேரிடையாக பேசிக்கொள்ள முடியாமல் ஒருசில தடைகள் ஏற்பட்டுள்ளன. அதனால் உங்கள் வலைத்தளமே இப்போது எங்களுக்கு ஓர் பூங்கா (PARK) போல அமைந்துள்ளது. அதனால் இங்கு மட்டுமே எங்களுக்குள் கொஞ்சூண்டு வம்பு இழுத்துக்கொள்ள முடிகிறது. :)

      //அப்புறம் நான் மறுபடியும் ரெண்டு வாட்டி மெயில் அனுப்பினேன். கெடைக்கலியா????? அதுல என்னைப்பத்தி சொல்லியிருந்தேன்.//

      ஒன்றுமே கிடைக்கவில்லையம்மா. மீண்டும் அவற்றை கவனமாக என் மெயில் ஐ.டி.க்கு சரியாக FORWARD செய்யவும். எனக்கு எந்தவொரு ஒரு மெயில் கிடைத்தாலும் உடனடியாக ஓர் ரிப்ளை கொடுத்து விடுவேன். ரிப்ளை உங்களுக்கு வராவிட்டால் அந்த மெயில் எனக்குக் கிடைக்கவில்லை என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம்.

      Mail ID ஐ தப்புத்தப்பாக அடித்திருந்தால் எப்படி அது எனக்குக் கிடைக்கும்? மீண்டும் அவைகளையே எனக்கு கவனமாக என் சரியான மெயில் ஐ.டி.க்கு அனுப்பி வைக்கவும்.

      //அப்படியும் என்னை "திருமதிகள்" லிஸ்டுல சேத்துட்டீங்களே.....//

      ’செல்வி’யா அல்லது ‘திருமதி’யா என எப்படி எனக்குத் தெரியும். மெயில் ஏதும் கிடைக்கவில்லையே :(

      மீண்டும் அதே மெயில்களை எதிர்பார்க்கிறேன். மெயில் கிடைத்தவுடன் அதனைப் படித்துவிட்டு, அதில் தேவைப்படும் தகுந்த மாற்றங்கள் செய்து மீண்டும் வெளியிடுவேனாக்கும்.

      Delete
  4. எப்பவுமே நீங்கதான் ஃபர்ஸ்ட்டுடுடூ ஸார்.வேர யாரு இங்க வராங்க. ஹிந்திக்கு உங்க "யாரேனும்" ஃபர்ஸ்ட்டூடூடூ வருவாங்களே......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 26 March 2016 at 21:37
      எப்பவுமே நீங்கதான் ஃபர்ஸ்ட்டூடூடூ ஸார். வேற யாரு இங்க வராங்க. ஹிந்திக்கு உங்க "யாரேனும்" ஃபர்ஸ்ட்டூடூடூ வருவாங்களே......//

      எப்படியாவது ஃபர்ஸ்டோ செகண்டோ நம்மாளும் இங்கு வந்து கமெண்ட்ஸ் கொடுத்தாச் சரிதான். எனக்கும் மகிழ்ச்சியே.

      அவர்களுக்கே முதலிடம் கொடுத்து விட்டுக்கொடுக்கவும் நான் தயார். ரொம்ப நல்லவங்களாக்கும். தங்கமே தங்கம் அவர்கள். எங்கிருந்தாலும் அவங்களும் நீங்களும் வாழ்க!

      Delete
  5. ஸார் உங்கமெயிலுக்கு மூணு வாட்டி மெஸேஜ் அனுப்பியும் போகல. வாலாம்பாள@ஜிமெயில்.காம் தானே.
    (இங்லீஷ்லதான்).ஓ..கே.. இங்கதான் வேற யாருமே வரதில்லயே. என் ஐ.டி. இங்க சொல்றேன். நீங்க மெஸேஜ் அனுப்புறீங்களா?????

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து.26 March 2016 at 22:03
      ஸார் உங்கமெயிலுக்கு மூணு வாட்டி மெஸேஜ் அனுப்பியும் போகல. வாலாம்பாள@ஜிமெயில்.காம் தானே.
      (இங்லீஷ்லதான்).ஓ..கே.. இங்கதான் வேற யாருமே வரதில்லயே. என் ஐ.டி. இங்க சொல்றேன். நீங்க மெஸேஜ் அனுப்புறீங்களா?????//

      இங்கு வேண்டாம்மா. அது நல்லது அல்ல. அதுபோலச் செய்யாதீர்கள்.

      உங்களின் ஒரே ஒரு முதல் மெயில் மட்டும் எனக்குக் கிடைத்துள்ளது. அதற்கு நான் உடனடியாக பதிலும் கொடுத்துள்ளேன். அது தங்களுக்குக் கிடைத்ததா என எனக்குத் தெரிவிக்கவும்.

      கிடைக்கவில்லை என்றால் நான் இப்போது அதை மீண்டும் உங்களுக்கு Forward செய்கிறேன். அதிலேயே நீங்க சொல்ல வேண்டியதை பதிலாகச் சொல்லி அனுப்பவும்.

      My mail ID : valambal@gmail.com

      [ V A L A M B A L @ G M A I L . C O M ]

      Delete
  6. இல்ல ஸார் உங்க மெயில் எதுவும் வரல. எப்படி உடனே வந்து ரிப்ளை பண்ணுறீங்க ஸார்?????

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து.26 March 2016 at 22:25
      இல்ல ஸார் உங்க மெயில் எதுவும் வரல. எப்படி உடனே வந்து ரிப்ளை பண்ணுறீங்க ஸார்?????//

      இன்று இப்போதுகூட இரண்டு மெயில்கள் அனுப்பியுள்ளேன். சரியாப்பாருங்கோ. கிடைத்ததா இல்லையா என பதில் கொடுங்கோ.

      உங்கள் ஒவ்வொரு பதிவிலும் பின்னூட்டப்பெட்டிக்கு அடியில் வலதுபுற ஓரமாக ஒரு சின்ன கட்டமும் அதன் அருகே Notify me என்றும் உள்ளதே. அதில் ஒரு டிக் அடித்துவிட்டுத்தான் பின்னூட்டமே நான் கொடுப்பேன். அதனால் நீங்கள் அதை பப்ளிஷ் செய்யும் போது எனக்கு மெயில் மூலம் தகவலாக வந்துவிடும். அதனால் நானும் உடனே ஓடி வந்து பதில் கொடுத்து விடுவேன்.

      நீங்களும் இதே போலவே என் பதிவுகளுக்குப் பின்னூட்டம் கொடுத்து அனுப்பும்முன்பு Notify me என்பதை டிக் அடித்துவிட்டு அனுப்புங்கோ. உங்களுக்கும் அது மெயிலில் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும். வேறு யார் எனக்குப் பின்னூட்டம் கொடுத்தாலும்கூட உங்களுக்கு அதன் தகவல் வந்து சேரும். தேவையில்லை + தொந்தரவாக உள்ளது என்றால் அந்த டிக் மார்க்கை மீண்டும் க்ளிக் செய்து எடுத்து விடலாம். அதன் பிறகு மெயில் ஏதும் வராது.

      Delete
  7. உங்களிடமிருந்து எனக்குக் கிடைத்துள்ள ஒரேயொரு மெயிலில் உள்ள தகவல் இதோ:

    ஸார் வணக்கம். சிப்பிக்குள் முத்து........
    ஒரிஜனல் பேரு மெஹ்ருன்னிஸா.( முஸ்லிம் பொன்னு)
    வீட்டுல பெட் நேம் முன்னா.
    உங்க லிங்க் எல்லாம் அனுப்பித்தர முடியுமா?
    நேரம் கிடைக்கும் போது வந்து படிச்சு கமெண்ட் போடுறேன்.

    ReplyDelete
  8. மேற்படி தங்களின் மெயிலுக்கு நான் கொடுத்துள்ள உடனடி பதில் இதோ:

    //ஸார் வணக்கம்.//

    வணக்கம்மா.

    //சிப்பிக்குள் முத்து........
    ஒரிஜனல் பேரு மெஹ்ருன்னிஸா.//

    ஆஹா, உங்க பேரும் மெஹ்ருன்னிஸா தானா? எனக்கு ஒரே ஆச்சர்யமாக உள்ளது. முருகு (மின்னலு) ஒரிஜினல் பேரும் மெஹ்ருன்னிஸாவே தான்.

    http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html
    இந்த மேற்படி பதிவையும் அதில் உள்ள 133 பின்னூட்டங்களையும் முதலில் பொறுமையாகப் படித்துப்பாருங்கோ. உங்களுக்கே அவளின் உண்மையான பெயரும் என் இப்போதைய ஆச்சர்யங்களுக்கான காரணங்களும் தெரியவரும்.

    நான் அவளுக்குச் செல்லமாக வைத்துள்ள பெயர்தான் ‘முருகு’ அது எங்களுக்குள் நடந்துள்ளதோர் ஒரு மிகப்பெரிய கதை. அதைப்பற்றி இப்போது வேண்டாம். அவளுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் நிக்காஹ் நடக்க உள்ளது. பிறகு வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிவிடுவாள்.

    //உங்க லிங்க் எல்லாம் அனுப்பித்தர முடியுமா?//

    கண்டிப்பாக அனுப்பித்தருகிறேன். ஒரு வாரம் போகட்டும்.

    //நேரம் கிடைக்கும் போது வந்து படிச்சு கமெண்ட் போடுறேன்.//

    மிக்க நன்றி. அவசரமே இல்லை. மெதுவாக தினம் ஒன்று வீதம் படித்து கமெண்ட்ஸ் எழுதுங்கோ, போதும். நானும் அவற்றிற்கு அவ்வப்போது பதில் தருவேன்.

    //( முஸ்லிம் பொன்னு)
    வீட்டுல பெட் நேம் முன்னா.//

    ’முன்னா’ ...... ஆஹா, மிகவும் சந்தோஷம்.

    நான் சுத்தமான ஐயர். என் வயது 65. திருச்சியில் இருக்கிறேன். என் பெயர் V. GOPALAKRISHNAN வீட்டில் சிலர் ‘கோபு’ என்று சுருக்கமாக பெட் நேமாகக் கூப்பிடுவார்கள்.

    தாங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ள எனக்கு ஆவலாக உள்ளது. விருப்பப்பட்டால் தங்களைப்பற்றி என்னென்ன தகவல்கள் சொல்ல விருப்பமோ சொல்லுங்கோ. என்னிடம் மட்டுமே இரகசியமாக வைத்துக்கொள்வேன். பிறரிடம் சொல்ல மாட்டேன். Bye for now.

    அன்புடன் VGK

    ReplyDelete
  9. அதன் தொடர்ச்சியாக மேலும் நான் எழுதி அனுப்பியது இதோ:

    நான் ‘முருகு’வுக்கு வைத்த பெயரை நம்மாளு ’பூந்தளிர்’
    ”வாம்மா ..... ‘மின்னலு” என்று ஒரு முறை தன் பின்னூட்டத்தில் அழைத்திருந்தாள். அதுவும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. :)

    தங்களின் மின்னஞ்சல் முகவரி அனுப்பியதற்கு என் நன்றிகள்.

    நான் உங்களுக்குக் கொடுக்கும் பின்னூட்டங்களை உடனுக்குடன் பப்ளிஷ் கொடுங்கோ, ப்ளீஸ். ஏனெனில் நம்மாளு ’பூந்தளிர்’ அதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக்கிடக்கும், பாவம். :)

    ReplyDelete
  10. அதன் பிறகு, தாங்கள் கேட்டுக்கொண்டபடி, நான் 2011 ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த முதல் 22 பதிவுகளின் இணைப்பினை தங்களுக்குத் தனி மெயிலில் அனுப்பி வைத்திருந்தேன். அதுவும் தங்களுக்குக் கிடைத்ததோ இல்லையோ எனக்கு சந்தேகமாகவே உள்ளது. தாங்கள் ஒருவேளை இரண்டு மூன்று மெயில் ஐ.டி. வைத்திருப்பீர்களோ. ஏதேனும் ஒன்றினை மட்டும் எனக்கு அனுப்பி இருந்தீர்பீர்களோ? அதுபோல இருப்பின், தங்களின் எல்லா மெயில் ஐ.டி.க்களை ஒருமுறை செக் பண்ணிப் பாருங்கோ. அதன்பின் எனக்கு ஒரு மெயில் விபரமாகக் கொடுங்கோ, ப்ளீஸ்.

    ReplyDelete
  11. ஸார் தகவல்களுக்கு நன்றி. நீங்க நெனச்சுபிட்டேன் படித்து எனக்கு 3...ஐ.டி.இருக்கு. முன்னாள் ஐடியா ஓபனாகுதில்ல. இப்ப மறுபடி ஒரு மெஸேஜ் அனுப்புகிறேன். கெடச்சுதா சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து.27 March 2016 at 05:26
      ஸார் தகவல்களுக்கு நன்றி. நீங்க நெனச்சுபிட்டேன் படித்து எனக்கு 3...ஐ.டி.இருக்கு. முன்னாள் ஐடியா ஓபனாகுதில்ல. இப்ப மறுபடி ஒரு மெஸேஜ் அனுப்புகிறேன். கெடச்சுதா சொல்லுங்க.//

      என்ன சொல்றீங்கன்னு எனக்குச் சரியாகப் புரியலே. எனக்கு இதுவரை தங்களிடமிருந்து ஏதும் மெயிலே வரவில்லை. எதற்கும் போய் செக் பண்ணுகிறேன். ஒருவேளை வந்திருந்தால் அதிலேயே பதிலும் கொடுக்கிறேன்.

      மிக்க நன்றிம்மா.

      Delete
  12. ஓஹ்ஹோ. முன்னா நீங்களும் எங்கட ஆளா. அப்புடின்னா ஓக்கே...
    எனிக்கு ஒங்கட போல நல்ல தமிளு எளுத ஏலலியே.. குருஜி மட்டிலும் வெளங்கிகிடுவாக.

    ReplyDelete
  13. அதனால பரவால்ல. எங்கட வூட்லயும் இப்பூடிதா பேசிக்கிடுவோம்லா... நாலு பேரு பாக்குர எடத்துல கொஞ்சமாவது டீஸென்பா இருக்கோணும்லா.....

    ReplyDelete
  14. இங்க நான் லேட்டா வந்துட்டேனா. தமிழும் நானும் கொஞ்சம் டிஸ்டன்ஸுலதானே இருக்கோம்.

    ReplyDelete
  15. ஆஹா ஹா எவ்வளவு டிஸ்டென்ஸ்ல இருக்கீங்க மேடம்.........

    ReplyDelete
  16. குருஜி இது எந்தப்படத்துல வார பாட்டுனு சொல்லிகிடுக...

    ReplyDelete
  17. mru 1 April 2016 at 23:22
    குருஜி இது எந்தப்படத்துல வார பாட்டுனு சொல்லிகிடுக...//

    படம்: பஞ்சவர்ணக் கிளி
    பாடியவர்: சுசீலா
    1970 இல் வெளிவந்த படம்
    முத்துராமன் நடித்தது என ஞாபகம்

    ReplyDelete