Tuesday 11 October 2016

அன்புள்ள மான் விழியே


4 comments:

  1. கிஷ்ணாஜி... எங்க போனிங்க.. பாடல் வரிகள்...ப்ளீஸ்..

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள மான்விழியே
      ஆசையில் ஓர் கடிதம் - நான்

      எழுதுவதென்னவென்றால் - உயிர்க்
      காதலில் ஓர் கவிதை

      அன்புள்ள மன்னவனே
      ஆசையில் ஓர் கடிதம் - நான்

      கைகளில் எழுதவில்லை - அதைக்
      கண்ணீரில் எழுதி வந்தேன்

      நலம் நலம்தானா முல்லை மலரே
      சுகம் சுகம்தான முத்துச் சுடரே

      இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
      எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ

      வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
      வாடைக் காற்றிலே வாடி நின்றதோ

      அன்புள்ள மான்விழியே
      ஆசையில் ஓர் கடிதம் - நான்

      எழுதுவதென்னவென்றால் - உயிர்க்
      காதலில் ஓர் கவிதை

      நலம் நலம்தானே நீ இருந்தால்
      சுகம் சுகம்தானே நினைவிருந்தால்

      இடை மெலிந்தது இயற்கையல்லவா
      நடை தளர்ந்தது தனிமை அல்லவா

      வண்ணப் பூங்கொடிபெண்மை அல்லவா
      வாட வைத்ததும் உண்மை அல்லவா

      அன்புள்ள மான்விழியே
      ஆசையில் ஓர் கடிதம் - நான்

      எழுதுவதென்னவென்றால் - உயிர்க்
      காதலில் ஓர் கவிதை

      Delete
  2. இந்த பாட்டும் நல்லா இருக்கு..

    ReplyDelete
  3. கோபால்ஜி பாடல் வரிகள் போட்டால்தான் பாடலை ரசிக்க முடியுது..

    ReplyDelete