Tuesday 1 November 2016

Deivam thantha


4 comments:

  1. : தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
    தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
    இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

    ஆ: நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? ஆ..
    நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? - இல்லை
    என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
    தெய்வம் செய்த பாபம் இது போடி தங்கச்சீ
    கொன்றால் பாபம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

    ஆதி வீடு அந்தம் காடு இதில்
    நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

    ஆ: வெறும் கோவில் இதிலென்ன அபிஷேவம் உன்
    மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
    கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
    காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

    கொண்டதென்ன கொடுப்பதென்ன - இதில்
    தாயென்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன?

    ஆ: தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது
    தெரியாமல் போனாலே வேதாந்தம்
    மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
    என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

    உண்மை என்ன பொய்மை என்ன இதில்
    தேனென்ன கடிக்கும் தேளென்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

    தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
    தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு.

    ReplyDelete
  2. முன்னா பாடல் வரிகளுடன் ரொம்ப நல்லா இருக்கு...

    ReplyDelete
  3. அர்த்தமுள்ள இனிமையான பாடல்.

    ReplyDelete
  4. இந்த பாட்டு சூப்பரா இருக்கு..

    ReplyDelete